Color Life
22/08/2024
படகு ஒன்றுக்கு பெயின்ட் அடிப்பதற்கான பொறுப்பு ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
அவர் ப்ரஷ், பெயின்ட் என்பவற்றைக் கொண்டு வந்து படகு உரிமையாளர் வேண்டிக் கொண்டதைப் போலவே பிரகாசமான சிவப்பு நிறத்தில் பெயின்ட் அடித்துக் கொடுத்தார்.
பெயின்ட் அடித்துக் கொண்டிருக்கும் போது அந்தப் படகில் ஒரு சிறிய ஓட்டை இருப்பதை அவதானித்து, உடனடியாகவே அந்த ஓட்டையை சரிவர அடைத்தும் விட்டார்.
வேலை முடிந்ததும் அவர் தனக்குரிய கூலியை வாங்கிக் கொண்டு சென்றுவிட்டார்.
அடுத்த நாள் படகின் உரிமையாளர் அந்த பெயின்டரின் வீடு தேடி வந்து ஒரு பெறுமதிமிக்க காசோலையை கொடுத்தார். அது அவர் ஏற்கனவே கூலியாக வழங்கிய தொகையைப் பார்க்கிலும் பன் மடங்கு அதிகமானது.
பெயின்டருக்கோ அதிர்ச்சி. " நீங்கள் தான் ஏற்கனவே பேசிய கூலியைத் தந்துவிட்டீர்களே? எதற்காக மீண்டும் இவ்வளவு பணம் தருகிறீர்கள்? என்று கேட்டார் பெயின்டர்.
" இல்லை. இது பெயின்ட் அடித்ததற்கான கூலி அல்ல. படகில் இருந்த ஓட்டையை அடைத்ததற்கான பரிசு" என்றார் படகின் உரிமையாளர்.
" இல்லை சேர்... அது ஒரு சிறிய வேலை. அதற்காக இவ்வளவு பெரிய தொகைப் பணத்தை தருவதெல்லாம் நியாயமாகாது. தயவு செய்து காசோலையை கொண்டு செல்லுங்கள்" என்றார் பெயின்டர்.
" நண்பரே... உங்களுக்கு விடயம் புரியவில்லை. நடந்த விடயத்தைச் சொல்கிறேன் கேளுங்கள்" என்று சொல்லி விட்டு படகு உரிமையாளர் தொடர்ந்தார்.
" நான் உங்களை படகுக்கு பெயின்ட் அடிக்கச் சொல்லும் போது அதில் இருந்த ஓட்டை பற்றிச் சொல்ல மறத்துவிட்டேன்.
பெயின்ட் அடித்துவிட்டு நீங்களும் போய்விட்டீர்கள். அது காய்ந்த பிறகு எனது பிள்ளைகள் படகை எடுத்துக் கொண்டு மீன் பிடிக்கக் கிளம்பிவிட்டார்கள்.
படகில் ஓட்டை இருந்த விடயம் அவர்களுக்குத் தெரியாது. நான் அந்த நேரத்தில் அங்கு இருக்கவுமில்லை.
நான் வந்து பார்த்த போது படகைக் காணவில்லை. படகில் ஓட்டை இருந்த விடயம் அப்போதுதான் நினைவுக்கு வர நான் பதறிப் போய்விட்டேன்.
கரையை நோக்கி ஓடினேன். ஆனால் எனது பிள்ளைகளோ மீன் பிடித்து விட்டு மகிழ்ச்சியாக திரும்பிவந்து கொண்டிருந்தார்கள். அந்தக் கணம் எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கும் நிம்மதிக்கும் அளவேயில்லை.
உடனே படகில் ஏறி ஓட்டையைப் பார்த்தேன். அது நேர்த்தியாக அடைக்கப்பட்டிருந்தது. இப்போது சொல்லுங்கள். நீங்கள் செய்தது பெறுமதியற்ற சிறியதொரு வேலையா? நீங்கள் என்னுடைய பிள்ளைகளின் விலைமதிக்க முடியாத உயிர்களையல்லவா காப்பாற்றியிருக்கிறீர்கள்? உங்களது இந்தச் 'சிறிய' நற்செயலுக்காக நான் எவ்வளவுதான் பணம் தந்தாலும் ஈடாகாது." என்றார்.
நண்பர்களே...
இதிலிருந்து என்ன புரிகிறது. யாருக்கு எங்கே எப்போது எப்படி என்றெல்லாம் பார்க்க வேண்டியதில்லை. நமக்கு சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் பிரதிபலன் பாராது உதவுவோம். பிறரின் கண்ணீரைத் துடைப்போம். நம் கண் முன்னே தெரியும் ஓட்டைகளை கவனமாக அடைப்போம். அப்போதுதான் நமது ஓட்டைகளை அடைப்பதற்கான மனிதர்களை இறைவன் அறியாப் புறத்திலிருந்து நம்மிடம் கொண்டு வந்து சேர்ப்பான்.
Copied
*All Credits to Original Content Owner
30/03/2023
சவுதி அரேபிய மார்க்க அறிஞர் நடத்திய நேரடி ஒளிபரப்பின் போது சோமாலியா சிறுவன் ஒருவன் கேட்டட கேள்வி
"நான் சஹரிலும் உணவு உண்ணவில்லை இப்தாரிலும் உணவு உண்ணவில்லை எனது நோன்பு ஏற்றுக்கொள்ளப்படுமா" 😔
25/12/2022
ஒருவன் 20 வயதில் திருமணம் செய்கிறான். ஆனால்,
10 வருடங்கள் கழித்தே குழந்தை கிடைக்கிறது ...!
இன்னொருவன்
30 வயதில் திருமணம் செய்கிறான்.
1 வருடத்தில் குழந்தை கிடைக்கிறது...!
ஒருவன் 22 வயதில் பல்கலைக்கழக பட்டதாரி ஆகிறான். ஆனால்,
5 வருடங்களுக்குப்
பின்பே தொழில் கிடைக்கிறது...!
இன்னொருவன்
27 வயதில் பட்டதாரி ஆகிறான். அடுத்த வருடமே தொழில் கிடைத்து விடுகிறது...!
ஒருவர் 25 வயதில் நிறுவனத்தில் தலைமைப் பொறுப்பை ஏற்கிறார். 45 வயதில் அவர் மரணித்து விடுகிறார்...!
இன்னொருவர்
50 வயதில் நிறுவனத்தில் தலைவர் ஆகிறார்.
90 வயது வரை வாழ்ந்து விட்டு செல்கிறார்...!
நம்மால் புரிந்துகொள்ள சிரமமான இத்தகைய ஏற்பாடுகள் எல்லாம் வல்ல இறைவன் முன்பே கணித்து வைத்தவை.
எழுதுகோல்கள் தூக்கப்பட்டு விட்டன. ஏடுகளும் மடித்து வைக்கப்பட்டு விட்டன...!
அவனைப் போல் எனக்கில்லையே என்று நீ புலம்பும் அதே நேரத்தில்,
உன்னைப்போல் நான் இல்லையே என்று அவன் புலம்பிக்
கொண்டிருப்பான்.
உனக்கு விதிக்கப்பட்டது வேறு..
அவனக்கு விதிக்கப்பட்டது வேறு..
ஆக, உனது நேரத்தில் உனது வேலையை திறம்பட செய்துவிடு...!
உனக்கு முன்னால் உள்ளவர்கள் முந்தியவர்களும் அல்ல,
உனக்குப் பின்னால் உள்ளவர்கள் பிந்தியவர்களும் அல்ல...!
நீயும் யாரையும் முந்தவும் இல்லை, யாரையும் பிந்தவும் இல்லை...!
அந்த இறைவன் உனக்கென குறித்த நேரத்தில் நீ உனது பணியை செய்து கொண்டிருக்கின்றாய்! அவ்வளவே...!
ஆதலால், உனக்கென குறிக்கப்பட்ட நேரங்காலத்தை செவ்வனே பயன்படுத்திக்கொள்...!
Copied
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the organization
Telephone
Website
Address
Trincomalee
31000