Naws Mhd

Naws Mhd

Share

31/12/2021
06/07/2021

ஆபாச வலைத்தளங்களை தடை செய்யுமாறு நீதிமன்றம் அறிவிப்பு..!

தற்போது பாடசாலைகள் மூடப்பட்டிருக்கும் பின்னணியில் மாணவர்களுக்கு இணைய வழியில் கல்வி நடத்தப்படுவதால் குழந்தைகள் எளிதில் ஆபாச வலைத்தளங்களை அணுகக்கூடும் என கொழும்பு மேலதிக நீதவான் லோச்சனி அபேவிக்ரம இன்று (05) நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

சிறுமி ஒருவரை இணையத்தில் பாலியல் விற்பனைக்கு விடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டபோது நீதவான் இதை சுட்டிக்காட்டியிருந்தார்.

விசாரணைக்கு இடையில், பாடசாலைகள் ஆரம்பிக்கும் வரை குழந்தைகள் ஆபாச வலைத்தளங்களை அணுகுவதைத் தடுக்க ஏற்பாடுகள் செய்யுமாறு சி.ஐ.டி மற்றும் மகளிர் மற்றும் குழந்தைகள் பணியகத்திடம் நீதவான் கோரிக்கை விடுத்தார்.

கைப்பேசிகள் அல்லது கணினிகள் குழந்தைகளின் கைகளுக்கு கிடைப்பதை தடுக்க முடியாது என்று சுட்டிக்காட்டிய நீதவான் பெற்றோர்கள் பணிக்காக வீட்டிலிருந்து சென்றிருக்கும் போது குழந்தைகள் இந்த சாதனங்களை கல்வி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்துகிறார்கள் என்றும் கூறினார்.

இதுபோன்ற சூழ்நிலையில், குழந்தைகள் எளிதில் ஆபாச வலைத்தளங்களை அணுகலாம் என்றும் நீதவான் சுட்டிக்காட்டினார்.

இது குறித்து தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்துடன் கலந்துரையாட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சி.ஐ.டி மற்றும் சிறுவர்கள் பணியகத்தின் அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர்.

17/01/2020

இவனை என்னவென்று சொல்வது பதவி மோகத்தில் முஸ்லிம்களையும் முஸ்லிம் தலைவர்களையும் அரேபிய நாடுகளையும் படு மோசமாக விமர்சனம் செய்தான் இன்று இவரது நிலை வேறு ரோசம் கெட்ட விமல்

Photos from Naws Mhd's post 05/12/2019

இனி அனுமதிப்பத்திரமில்லாமல் மணல் கொண்டு செல்லலாம்: மணல் கொள்ளையர்களிற்கு மகிழ்ச்சியான செய்தி!

வியாழன், 5 டிசம்பர், 2019

மணல்,மற்றும் களிமண் கொண்டு செல்வதற்கான அனுமதிப்பத்திர முறையை தற்காலிகமாக தளர்த்தியுள்ளதாக இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்தல குணவர்தன தெரிவித்துள்ளார்.

நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவை எடுத்ததாக, இன்று (5) அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.


எனினும், இதை அமைச்சர் அறிவித்தபோது செய்தியாளர்கள் அவரை கேள்விகளால் குடைந்தெடுத்தனர். கல்குவாரி, மணல் அள்ளும் அனுமதிப்பத்திரம் வழங்களில் உள்ள குழறுபடிகளை சீர் செய்ய, சட்டவிரோத மணல் கடத்தலை இல்லாமலாக்க இந்த நடவடிக்கையெடுத்ததாக தெரிவித்தார்.

எனினும், மணல் அள்ளுமிடத்தில் யாரும் சிக்குவதில்லை, மணலை கொண்டு செல்லும் வழியிலேயே சிக்குகிறார்கள், இந்த தடைநீக்கம் அவர்களிற்கு வாய்ப்பாக அமையாதா என செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அமைச்சர், ஒரு வாரம் மட்டும் பொறுத்துக் கொள்ளும்படியும், அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் இந்த விடயத்தை ஒழுங்குபடுத்தும் விதமான இறுதி ஏற்பாடுகள் அறிவிக்கப்படும் என்றார்.

அனுமதிப்பத்திரம் இல்லாமல் மணல் ஏற்றிச்செல்பவர்கள் கைது செய்யப்பட மாட்டார்களா என செய்தியாளர்கள் கேள்வியெழுப்பியபோது, இந்த வாரம் கைது செய்யப்பட மாட்டார்கள் என பதிலளித்தார்.

கைது செய்யப்பட்டால் யாரிடம் முறையிடுவது என செய்தியாளர்கள் கேள்வியெழுப்பியபோது, பாதுகாப்பு செயலாளரிடம் முறையிடலாமென தெரிவித்தார்.

இதேவேளை, அரசாங்கத்தின் இந்த முடிவு மணல் கொள்ளையர்களிற்கு சட்டபூர்வ அங்கீகாரமளிப்பதாக அமைந்துள்ளதாகவும், பொறுப்பான சுற்றுச்சூழல் அமைச்சரை நியமிக்க வேண்டுமென்றும் சுற்றுச்சூழல் அமைப்புக்கள் வலியுறுத்தியுள்ளன

16/11/2019

ஹிஜாப் அல்லது ஹபாயாவை கழட்டுமாறு எவரேனும் வற்புறுத்தினால் 071 916 0000 எனும் தேர்தல் ஆணைக்குழுவின் இலக்கத்திற்கு உடனே முறைப்பாடு செய்யுங்கள்.

NOTE:
வாக்களிப்பு நிலைய எல்லைக்குள் நீங்கள் சென்றதும் பாதுகாப்பு மற்றும் உங்கள் முக அடையாளத்தை காண்பிக்க பேஸ்கவரை மட்டுமே அகற்ற வேண்டும்.

Want your business to be the top-listed Business in Kandy?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address


Kandy