USDO Srilanka
23/05/2020
Covid-19 health activities volunteer 11 பேர் கொண்ட குழுவினர் எமது USDO SRILANKA அமைப்பின் ஊடாக
சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் மற்றும் SPHI உடன் தன்னார்வலர்களாக இனைந்து எமது பிரதேசத்தில் கொரேனாவை பற்றிய விழிப்புணர்வு மற்றும் அந்த நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான முன்னாயத்த செயற்பாடுகளை உரிய அதிகாரிகளுடன் இணைந்து இயங்குவதற்கான ஆரம்ப கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்ற பொழுது.
27/03/2020
அன்றாட வருமானம் இன்றி வீடுகளுக்குள் முடங்கி இருக்கும் ஏழை எளிய மக்களுக்கு பால்மா,உலர் உணவுகள்,மாஸ்க் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை தற்போது எமது USDO SRILANKA அமைப்பு வழங்க ஏற்பாடு செய்து வருகிறது.
மேலும் பள்ளி வாசல் ஊடாக அறிவித்தல் கொடுத்து GS மார்களின ஊடாக வறிய குடும்பங்களை தெறிவு செய்து நிவாரணங்களை அன்பளிப்பு ஏற்பாடும செய்ய உள்ளோம்.
உதவி செய்ய விரும்பும் தனவந்தர்கள், நலன் விடும்பிகள், சமூக ஆர்வலர்கள், சர்வதேச உறவுகள் உடன் எம்மை தொடர்பு கொள்ள முடியும்.
தொடர்புகளுக்கு: 0777852021
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக ஊரடங்கு தளர்த்தப்பட்டு மீண்டும் இன்று 2 மணிக்கு அமுலாகி இருக்கின்றது.
அத்துடன் தொடர்ந்தும் இரு வாரங்களுக்கு இந்நிலைமை நீடிக்கும் சூழ்நிலை காணப்படுவதால் அன்றாடம் கூலி வேலைக்கு சென்று உழைத்து சாப்பிடுகின்ற ஏழை மக்களின் நிலைமை மிக மோசமாக உள்ளது.
பண வசதி படைத்தவர்கள் அருகில் உள்ள சந்தைகளில் உடனடியாக பல ஆயிரம் ரூபாய்களுக்கு பொருட்களை கொள்வனவு செய்கின்றனர்.
ஆனால் இவ் ஏழை மக்களை யார் பார்ப்பது, நாம் எல்லோரும் சேர்ந்ததுதான் உதவி செய்ய வேண்டியுள்ளது.
ஆகவே இந்த ஏழை மக்களின் அன்றாட தேவைகளுக்கான அரிசி, சீனி, பால்மா,தேயிலைத்தூள், பிஸ்கட் போன்ற உலர் உணவுகளை விநியோகிப்பது காலத்தின் தேவையாக உள்ளது.
அரிசி 05kg - 530/=
சீனி 01kg - 110/=
அங்கர் 01 - 380/=
தே தூள் 250g - 220/=
பிஸ்கட் பக்கட் - 130/=
Packing & Transportation - 30/=
Total per one pack 1400/=
ஆகவே உங்களால் எமது கிராமங்களில் வாழ்கின்ற நம் உடன் பிறப்புகளுக்காக இதற்கு எவ்வளவு பங்களிப்பு செய்ய முடியும் என்று அவசரமாக பொருந்தினால் தேவையான பொருட்களை இப்போதே ஒதுக்கீடு செய்ய முடியும்.
எதிர்வரும் வியாழக்கிழமையே இவ் அனைத்து பொதிகளையும் விநியோகம் செய்ய வேண்டியுள்ளது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தொடர்பு கொள்ளவும்
USDO SRILANKA
ANM.RIZAN
0094777852021
(WhatsApp)
0094755657495
Note: இதனை உங்களது நண்பர்களுக்கும் forward செய்யுங்கள் அவர்களும் முடிந்த உதவிகளை வழங்கி அதன் நன்மைகளை பெற்றுக்கொள்ளட்டும்.
14/03/2020
அஸ்ஸலாமு அலைக்கும்
வரஹ்மத்துல்லாஹி
வபரக்காத்துஹு
சாய்ந்தமருது பிரதேச சுற்றுச்சூழலைத் துப்புறவு செய்யும் நோக்கில், குப்பைகளற்ற சிறந்த கிராமமாக உருவாக்கும் எண்ணக்கருவிற்கு அமைவான சிரமதானப் பணியொன்று, சாய்ந்தமருது அக்பர் பள்ளி மய்யவாடியில் - (14) சனிக்கிழமை இன்று USDO SRILANKA அமைப்பினரால் முன்னெடுக்கப்பட்டது. இச்சிரமதானப் பணியில்,
புற்பூண்டுகள் மற்றும் குப்பைக்கூளங்கள் என்பன காலை ஏழு மணி முதல் 11 மணி வரை துப்புறவு பணிகள் முன்னேடுக்க பட்டது.
சாய்ந்தமருது முன்னாள் பிரதேச செயலாளர் ALM.சலிம் சேர், சாய்ந்தமருது மூன்றாம் பிரிவு GS நிஸ்றீன் சேர் ஆகியோரது மேற்பார்வையின் கீழ் இடம்பெற்ற இச்சிரமதானப் பணிகளில், எமது அமைப்பினர் சாய்ந்தமருது பிரதேச வாழ் பெரும்பாலான நலன்விரும்பிகள், சிறார்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
Click here to claim your Sponsored Listing.
Category
Telephone
Website
Address
Saintamarthu
Kalmunai