WIDE PHOTOgraphy
03/07/2023
கற்பகதரு எனும் பனை வளமானது எமது நாட்டின் வடக்கு கிழக்குக்குக் கிடைத்த செல்வமாகும். சொல்லப்போனால் இது வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு இயற்கை அன்னை அளித்த ஓர் அரிய வரமாகும்.
ஆனால் பனையிலிருந்து கிடைக்கும் பலன்களை உதறித்தள்ளிவிட்டு நாவுக்கு ருசியானதும் நவீன கலாச்சாரம் என்ற போர்வையில் நோய்களை அள்ளித்தரும் மேற்கத்தைய உணவுகளை உண்ணும் பழக்கத்துக்கு
அடிமையாகிய நாம் பனைகளைக் கைவிட்ட கொடுமையானவர்கள் ஆகிவிட்டோம்.
பனையிலிருந்து உற்பத்தி செய்யக்கூடிய பானங்கள், உணவுகள், பொருட்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை மிகப்பெருமளவில் வீழ்ச்சியடைய பனை வளங்களை நம்பி வாழ்ந்து வந்த மக்களின் வாழ்க்கைத் தரம் தலைகீழாக மாற வேறு தொழில்களை நாடிச்செல்கின்றனர். இதனால் இருக்கும்
பனைகளை அழித்து மக்கள் வீட்டுக்கூரைத் தேவைகளுக்காக மரங்களைப் பெருமளவில் பயன்படுத்தி
வருகின்றனர். அன்றைய காலத்தில் வீட்டுக்கூரை அமைப்புக்காக ஆகக் குறைந்தது 40 வருடங்கள்
கடந்த பனைகளையே பயன்படுத்தினர். ஆனால் தற்போது சில வருடங்களான பனைகளைத் தறித்து
பனை வளங்களை சூறையாடி மக்கள் நாட்டை மயானமாக மாற்றிவருகின்றனர்.
பனையிலிருந்து பெறக்கூடிய அனைத்தையுமே ஏற்றுமதிப் பொருட்களாக மாற்றியுள்ளார் சுகந்தன்.
ஏற்றுமதிக்கு ஏற்றவாறு பனம் பொருட்களைத் தரமாகவும், கவர்ச்சிகரமாகவும் உற்பத்தி செய்கின்றார். வீழ்ச்சியடைந்த பனம்பொருட்களின் கேள்வியையும், விலையையும் இன்று பலமடங்கு அதிகரிக்கச் செய்துள்ளார்.
மக்களே!
எங்கள் நாட்டில் விளைகின்ற அனைத்துமே ஏற்றுமதி செய்யக்கூடியனவே.
அதற்கமைய பனம் பொருட்கள் மட்டுமன்றி ஏனைய உணவு உற்பத்திகளையும் ஏற்றுமதி செய்து
வருகின்றார். இதன்மூலம் உள்நாட்டில் மட்டுமன்றி வெளிநாடுகளிலும் எமது உற்பத்திகளுக்கு கேள்வி
களை அதிகரிக்கச் செய்துள்ளார். இவரது இச் செயற்பாடுகள் ஏனைய உற்பத்தியாளர்களுக்கும் ஒரு
ஊக்குவிப்பாகக் காணப்படுவதுடன், இலங்கையின் வருமானத்தில் கணிசமான பங்கை வகிக்கின்றது.
இன்று அழிவுற்றுவரும் பனைகளுக்கு மீண்டும் உயிர்கொடுக்க வெளிநாட்டிலிருந்து தாய்மண்ணில் கால்
பதித்தார் சுகந்தன். செயலில் வெற்றிபெற தானும் களத்தில் இறங்கினார். கனடா வெளிநாட்டில் தான் கற்ற தொழில் அனுபவங்களையும், அறிவையும், உழைப்பின் ஊதியத்தையும் தனது சொந்த மண்ணுக்காக பயன்படுத்துகிறார். பனம்சார் உற்பத்திகள் மட்டுமன்றி ஏனைய உற்பத்திகளை சந்தைப்படுத்துவதற்கு
ஊக்குவிப்புக்களை மேற்கொள்கின்றார். அனைத்து விதமான மக்களையும் இத் தொழிற்துறைக்குள்
ஈடுபடுத்த நவீன சாதன வசதிகளை ஏற்படுத்தினார். இவற்றுக்கெல்லாம் ஒரு மனம் வேண்டும். அந்த மனதைக் கொண்டவர்கள் ஆயிரத்தில் ஒருவர். அந்த ஒருவராக சுகந்தனும் விளங்குகின்றார்.
பனைகளை நம்பி வாழ்ந்தவர்களுக்கு விடிவுகாலத்தை ஏற்படுத்தியுள்ளார் சுகந்தன். பனையிலிருந்து
எவ்வளவோ உற்பத்தி செய்யலாம். ஆனால் அவற்றை சந்தைப்படுத்தும் விதமாக உற்பத்தி செய்ய நாம் கற்றுக்கொள்ளவேண்டும். இவற்றுக்கெல்லாம் முதற் தடத்தைப் பதித்த சுகந்தனின் சுவடுகளை
தொடருவோம். இவ்வாறான உற்பத்தியாளர்களுக்கு கரங்கொடுப்போம்.
சுகந்தனைப்பற்றி மேலுமறிய லிங்கை அழுத்துங்கள்.
https://youtu.be/UlzPcr3yT5A
Palmyrah Arrack Exporter | Jaffna Usaar | VSS Distributor | Palmyrah Products Export| Suganthan கற்பகதரு எனும் பனை வளமானது எமது நாட்டின் வடக்கு கிழக்குக்குக ; கிடைத்த செல்வமாகும்....
01/03/2023
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Address
JAFFNA
Jaffna
40000