KuralMax.lk
12/10/2022
இராகலை - ஹய்பொரஸ்ட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹய்பொரஸ்ட் காவத்தை தோட்டத்தில் நேற்று (11.10.2022) உயிரிழந்த நிலையில் சிறுத்தை புலி ஒன்று மீட்க்கப்பட்டு பிரேத பரிசோதணைக்காக நுவரெலியா மாவட்ட வன ஜீவராசி பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளினால் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
ஹய்பொரஸ்ட் காவத்தை தோட்டத்தில் விவசாய காணி ஒன்றின் அருகில் காணப்படும் தேயிலை மலையையொட்டிய பற்றை காட்டுக்குள் இந்த சிறுத்தை புலி கம்பி ஒன்றினால் தனது கழுத்து இறுகி உயிரிழந்த நிலையில் கண்டுப்பிடிக்கப்பட்டு மீட்டுள்ளதாக ஹய்பொரஸ்ட் பொலிஸார் தெரிவித்தனர்.மேலும், விவசாய காணிக்கு சென்ற விவசாயி ஒருவர் சிறுத்தை புலி உயிரிழந்து கிடந்ததை கண்டுள்ளார்.
மரண பரிசோதணைஇதையடுத்து இவ்விடயத்தை ஹய்பொரஸ்ட் பொலிஸாருக்கு தெரிவித்ததையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த ஹய்பொரஸ்ட் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்ததுடன் நுவரெலியா மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளனர்.
அதேநேரத்தில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தோட்ட பொது மக்களின் உதவியுடன் சிறுத்தை புலியின் உடலை மீட்டு மரண பரிசோதணைக்காக திணைக்களத்திற்கு எடுத்து சென்றனர்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்த சிறுத்தை புலி ஆறு அடி நீளத்தை கொண்டதாகவும் சுமார் 150 கிலோ எடை கொண்ட ஆண் சிறுத்தை புலி எனவும் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
12/10/2022
இளைஞனின் சடலத்துடன் கொழும்புக்கு வருவோம் - செந்தில் தொண்டமான் எச்சரிக்கை
கனவரெல்ல தோட்ட தொழிலாளியின் மரணத்திற்கு ஒருகோடியே 2 இலட்சம் ரூபா நட்டஈடாக வழங்க வேண்டும் என்பதுடன் தோட்ட முகாமையாளர் மற்றும் தொழிற்சாலை அதிகாரி உடனடியாக இடமாற்றம் செய்யப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார்.இந்த நிபந்தனைகளுக்கு நிர்வாகம் இணங்காவிடின் கொழும்பில் உள்ள நமுனுகல பெருந்தோட்ட நிறுவனத்தின் தலைமை காரியாலயம் முன் தொழிலாளியின் பூதவுடலை வைத்து போராட்டம் செய்யவும் தயாராக உள்ளோமென அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஒரு கோடி ரூபாய் நட்டஈடு வழங்க வேண்டும்
உயிரிழந்த இளைஞனின் குடும்பத்தினர் எடுக்கும் சட்ட நடவடிக்கைக்கு முழு உறுதுணையாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முன்நிற்கும் எனவும் தெரிவித்தார்.
கனவரெல்ல தோட்டத்தில் தோட்ட நிர்வாகத்தின் சொந்த வேலைக்காக அமர்த்தப்பட்ட தோட்டத் தொழிலாளி மரணமடைந்தமைக்கு நியாயமான தீர்வை வழங்குவது தொடர்பில் செந்தில் தொண்டமானுக்கும் கனவரெல்ல தோட்ட நிர்வாகத்துக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.இதன்போது உயிரிழந்த தொழிலாளியின் மரண சடங்குகளுக்கான முழுமையான செலவை மாத்திரமே தாம் பெறுப்பேற்பதாக தோட்டம் நிர்வாகம் தெரிவித்தற்கு கடுமையான எதிர்ப்பை செந்தில் தொண்டமான் வெளிப்படுத்தினார்.
இளைஞனின் மரணத்திற்கு நட்டஈடு வழங்கப்படாத பட்சத்தில் பூதவுடல் தொழிற்சாலையிலே வைக்கப்படும் என எச்சரித்தார். அதனை தொடர்ந்து உயிரிழந்த குடும்பத்துக்கு 15 இலட்சம் நஷ்டஈடாக வழங்க நிர்வாகம் முன்வந்தது.சடலத்துடன் கொழும்பிற்கு வந்து போராடுவோம்
எனினும், அந்த தொகை போதுமானதல்ல என்றும், 21 வயதுடைய தொழிலாளியே உயிரிழந்துள்ளார்.
அவர் தோட்டத்தில் மேலும் 34 வருடங்களுக்குமேல் பணிபுரிவதற்கான சூழ்நிலை இருந்த போது, தற்போது வழங்கப்படும் 1000 சம்பளத்தின் பிரகாரம் கணக்கிட்டால் ஒரு கோடியே 2 இலட்சம் ரூபா நட்டஈட்டை வழங்கவேண்டும் என செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.ஆகவே நியாயமான நட்டஈட்டை வழங்க வேண்டும் என்பதுடன் மரணத்துக்கு பொறுப்புக்கூற வேண்டிய தோட்ட முகாமையாளர் மற்றும் தொழிற்சாலை அதிகாரி உடனடியாக இடமாற்றம் செய்யப்பட வேண்டும்.
இந்த கோரிக்கைகளுக்கு நிர்வாகம் இணங்காவிடின் கொழும்பில் உள்ள நமுனுகல பெருந்தோட்ட நிறுவனத்தின் தலைமை காரியலயத்துக்கு முன் பூதவுடலை வைத்து போராட்டம் செய்யவும் தயங்கமாட்டோமென கடுமையாக எச்சரித்தார்.
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Hatton