Sl Alert News

Sl Alert News

Share

01/05/2019

#சாகிர்_நாயக்_இன்_Peace_Tv_இலங்கையிலும்_நிறுத்தப்பட்டது!!

இந்தியாவை சேர்ந்த மார்க்க போதகரான வ் சாகிர் நாயக் இன் Peace Tv எனப்படும் இஸ்லாமிய நிகழ்ச்சி களை கொண்ட தொலைக்காட்சி இலங்கையின் முன்னணி தொலை க்காட்சி சேவையை வழங்கும் dialog tv மற்றும் slt peo tv யில் நிறுத்தப்பட்டது.

இந்த peace tv ஏற்கனவே இந்தியா மற்றும் பங்களா தேஷ் ஆகிய நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

10/01/2019

#தமிழ்_முஸ்லிம்_மக்களிடையிலான_உறவை_சீர்குழைக்க_சிலர்_முனைகின்றனர். #ஹிஸ்புல்லாஹ்

பொய்யான, கீழ்தரமான செய்திகளை வெளியீட்டு தமிழ் – முஸ்லிம் மக்கள் மத்தியிலே காணப்படும் நல்லுறவை சீர்குழைக்க சிலர் முனைவதாகவும் அதிலிருந்து மக்களை அவதானமாக இருக்குமாறும் கிழக்கு மாகாண ஆளுனர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்திற்கு புதிதாக நியமனம் பெற்றுள்ள ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கிழக்கு மாகாணத்திலுள்ள அரச காணிகளது தரவுகளை உடனடியாக தமக்கு வழங்கும்படி கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து அரச காரியாலயங்களிலும் கோரியுள்ளதாக சில ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பில் ஆளுனரிடம் வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், கிழக்கு மாகாணத்திலுள்ள அரச காணிகளது தரவுகளை உடனடியாக தமக்கு வழங்கும்படி கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து அரச காரியாலயங்களிலும் கோரியுள்ளதாக வெளியான செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை.

அவ்வாறு செய்தியில் குறிப்பிட்டுள்ளது போன்று கிழக்கு மாகாணத்திலுள்ள அரச காணிகளது தரவுகளை உடனடியாக தமக்கு வழங்கும்படி நானோ, என்னுடைய அதிகாரிகளோ கோரவில்லையெனவும், இச் செய்தியில் எவ்வித உண்மையும் இல்லையெனவும், இவ்வாறான கீழ்தரமான செய்திகள், கீழ்தரமானவர்களின் நடவடிக்கைகளிலிருந்து மக்களை அவதானமாக இருக்குமாறும் கிழக்கு மாகாண ஆளுனர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கேட்டுக்கொண்டுள்ளார்.

10/01/2019

#இனவாதிகளின்_முஸ்லிம்களுக்கெதிரான_வெறியாட்டம்_தொடர்ந்த_வண்ணம்.
#ஏறாவூரில்_பதட்டநிலை
————————————————
————————————————
மட்டக்களப்பு பெற்றோலிய கோப்ரேஷனில் பணி புரியும்
ஏறாவூர் ஐயங்கேணியை சேர்ந்த சஹீத் என்பவர் பணி முடிந்து வீடு திரும்பும்வேளை இனவாதிகளால் தாக்கப்பட்டுள்ளார்,

இவ்வினவாத தாக்குதல் நேற்று இரவு சவுக்கடி முகத்துவார வீதியில் புற்று நோய் வைத்தியசாலைக்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது,
5 பேர் கொண்ட கும்பலே தாக்கிவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்,

அவரின் தலைப் பகுதியை குறி வைத்தே தாக்குதல் நடந்துள்ளது அவர் தலைக்கவசம் அணிந்திருந்ததால் உயிர் பிழைத்தார்
அவரது நெஞ்சுப்குதியும் கட்டையால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளது,

கீழே விழுந்தவர் வாகனத்தை கை விட்டுவிட்டு அவர்களின் தாக்குதலை எதிர்கொண்டு எப்படியோ முயற்சி செய்து
முஸ்லிம்களது பிரதேசத்திற்குள் நுழைந்து உதவி கேட்டுள்ளார்
அதன் பிறகே வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளார் ,

அவரது இருசக்கர வாகனத்தின் ஒரு பகுதியும் எரியூட்டப்பட்டுள்ளது,,

சகோதர சமூகத்தவரின் அரசியல் தலைமைகள் தங்களது சமூகத்தை மென்மேலும் பாரிய படு குழியை நோக்கியே நகர்த்திச் செல்கிறார்கள்,

ஒரு சில இனவாதிகளால் மொத்த சமூகமும் விளைவுகளை
சந்திக்கும் அபாய நிலையின் வெளிப்பாடுதான் இத்தாக்குதல்,

அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக அப்பாவி ஒருவரின்
உயிரோடு விளையாடியிருக்கிறார்கள்,

விட்டிருந்தால் பைக்கோடு சேர்த்து அவரையும் கொழுத்தியிருப்பார்கள்
அல்ஹம்துலில்லாஹ்
இறைவன் பாதுகாத்துவிட்டான்,

மட்டக்களப்பு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களான
கௌரவ அலிசாஹிர் மௌலானா , கலாநிதி ஹிஸ்புல்லாஹ், அமீர் அலி போன்ற அரசியல் தலைமைகளுக்கு
தகுந்த பதவிகளும் பொருப்புகளும் கொடுக்கப்பட்டதின் பிறகு இதுபோன்ற இனவாத தாக்குதல் நடைபெறுவதால்
இது அரசியல் பலி வாங்கலே அன்றி வேறில்லை,

பொன்னையன் மயூரனின் தலைமையில் கடந்த 2 ஆம் திகதி கொம்மாதுரையில் வயோதிபருக்கு எதிராக நடந்த மனிதாபிமானமற்ற செயலும்,
கடந்த 6 ஆம் திகதி ஏறாவூர் தும்புத்தொழிற்ச்சாலை வீதியில் மாடு கொண்டுவந்த 3 முஸ்லிம்கள் தாக்கப்பட்டு பணம்,மொபைல் போன் உட்பட களவாடப்பட்ட சம்பவமும்,
நேற்று 8 ஆம் திகதி நடந்த கொலை முயற்ச்சியும்
பாரிய சதித்திட்டத்தினூடாகவே
நடைபெற்றிருக்கிறது,
இவைகளுக்குப் பின்னாள் பாரிய அரசியல் கூலிப்படை ஒன்று செயற்படுகிறது என்பதுதான் உண்மை,

இவ்விரு சம்பவங்களும் முஸ்லிம்களின் பொறுமையை சோதிப்பதாகவே உள்ளது
அமைதியாக இருப்பதால் அடங்கிவிட்டோம் என்று அர்த்தம் இல்லை
எங்களது பொறுமைக்கும் எல்லை உண்டு என்பதை இனவாத பயங்கரவாதிகள் புரிந்துகொள்ள வேண்டும்,

மயூரனின் தலைமையில் நடந்த ஈனச்செயலையும்
மாடு கொண்டு வந்த முஸ்லிம்கள் தாக்கப்பட்ட சம்பவத்தையும்
எமது அரசியல் தலைமைகள் கண்டுகொள்ளாமல் விட்டதன்
விளைவுதான் நேற்றையை கொலை முயற்ச்சி என்பதை யாரும் மறுக்கமுடியாது,

அரசியல் தலைமைகள், புத்தி ஜீவிகள் வாய்மூடி இருக்காமல்
இச்சம்பவங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்து
இனவாதிகள் கைது செய்யப்படும் வரை முழு மூச்சாக
செயற்பட வேண்டும்,

இன முறுகலை ஏற்படுத்த முயற்சி செய்யும் பயங்கரவாதிகளுக்கு
விடுதலை கிடைக்காத வண்ணம்
தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும்....

29/12/2018

#மன்னிப்புக்_கோரிய_சபாநாயகர்

எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்ஷவை அறிவித்தமைக்காக சபாநாயகர் கரு ஜயசூரிய, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை நேரில் சந்தித்து மன்னிப்புக் கோரியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் எதிர்க்கட்சித் தலைவர் தொடர்பான குழப்பம் நடைபெற்றது. எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்ஷவை கடந்த 18ஆம் திகதி சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்தார்.

இதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பன சபையில் எதிர்ப்புத் தெரிவித்திருந்தன.

கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கடந்த 19ஆம் திகதி புதன்கிழமை, எதிர்க்கட்சித் தலைவர் பதவியை மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கியமை சட்டத்துக்கு முரணானது என்றும், பெரும்பான்மைவாதச் சிந்தனையின் வெளிப்பாடு என்றும் கடுமையாகச் சாடியிருந்தார்.

இந்தநிலையில், கடந்த 21ஆம் திகதி வெள்ளிக்கிழமை, சபாநாயகர் கரு ஜயசூரியா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்துப் பேசுவதற்கு விருப்பம் வெளியிட்டிருந்தார். அதற்கு அமைவாக, சபாநாயகரின் அறையில் சந்திப்பு நடைபெற்றது.

“மஹிந்த ராஜபக்ஷவை அவசரப்பட்டு எதிர்க்கட்சித் தலைவராக அறிவித்தமை தவறு. அதற்காக மன்னிப்புக் கோருகின்றேன். உங்களுடன் (கூட்டமைப்புடன்) கலந்துரையாடாமல் அறிவித்தமைக்காக மன்னிப்புக் கோருகின்றேன்.

நான் இந்தப் பதவியிலிருந்து விலகவேண்டுமானால் அதற்கும் தயாராக இருக்கின்றேன்” என்று சபாநாயகர் இந்தச் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பிக்கள், நாடாளுமன்றச் சம்பிரதாயங்களுக்கு அமைவாகச் செயற்படுமாறு சபாநாயகரிடம் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

இந்தச் சந்திப்பு சுமார் 30 நிமிடங்கள் நீடித்தது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

28/12/2018

*🌏🇱🇰 🇱🇰🌏*

28/12/2018


*_________________*
_நாளைய தினம் (29/12/18)மாவனல்லை நகரில் பெரும்பான்மையினரால் ஒரு எதிர்ப்பு பேரனி எற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்த்துள்ளதால். இயன்றவரை பெண்கள் சிரார்கள் பயணங்களை முற்றாக தவிர்த்துக்கொள்ளுமாரும்... முக்கியமான ஆவனங்கள் நகை போன்றவைகளை பாதுகாப்பான இடங்களில் வைத்துக்கொள்ளவும் சுற்று பிரதேசங்களில் இருந்து மாவனல்லை வருபவர்களுக்கும் இதனை அறிவிக்கவும்...

*✍Admin..*

Want your business to be the top-listed Media Company in Colombo?
Click here to claim your Sponsored Listing.

Website

Address


Colombo