Alai TV
06/06/2026
போலி நில ஆவண மோசடி - மூவர் கைது
போலி நில ஆவணங்கள், தேசிய அடையாள அட்டைகள் மற்றும் போலி உத்தியோகப்பூர்வ முத்திரைகள் தயாரித்து பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் மூவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பொரளையிலுள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், போலி ஆவணங்கள், நான்கு போலி தேசிய அடையாள அட்டைகள், சுமார் 600 போலி உத்தியோகப்பூர்வ முத்திரைகள், மின்னணு உபகரணங்கள் மற்றும் ரூ.15 இலட்சம் பணம் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொரளை, திக்வெல்ல மற்றும் ஹொரணை பகுதிகளைச் சேர்ந்த 54, 55 மற்றும் 59 வயதுடைய சந்தேகநபர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.
Click here to claim your Sponsored Listing.
Category
Telephone
Address
Colombo