Star FM

Star FM

Share

12/06/2026

நடிகர் அஜித்குமார் அண்மைக்காலமாக நடிப்பில் இருந்து ஒதுங்கி காரோட்ட பந்தயங்களில் அதிக ஆர்வத்தைச் செலுத்தி வருகின்றார்.இந்நிலையில், அவர் அண்மையில் ஒரு பேட்டியில் கார் ரேஸ் குறித்து பேசியுள்ளார்.

அதில் "எனது ரெடான்ட் அணி மிகச் சிறந்த குழுவாகச் செயல்பட்டு வருகிறோம்.இவர்களுடன் இருப்பது எனது இரண்டாவது குடும்பத்துடன் இருப்பது போன்ற உணர்வைத் தருகிறது.

கடந்த 3 வருடங்களாக டுபாயை மையமாகக் கொண்டு வசித்து வருகிறேன்.எனது குடும்பத்தினர் இந்தியாவில் உள்ளனர்.கார் பந்தயங்களில் தொடர்ந்து பங்கேற்க வேண்டிய கடமைகள் இருப்பதால், தற்போது ஐரோப்பாவில் அதிக நேரத்தை செலவிட்டு வருகிறேன்.

அடுத்த ஆண்டு இரண்டு சர்வதேச கார் பந்தய தொடர்களில் பங்கேற்க திட்டமிட்டுள்ளோம்.

என்னால் எவ்வளவு காலம் கார் ரேஸில் ஈடுபட முடியுமோ அவ்வளவு காலம் ஈடுபடுவேன்.ஒவ்வொரு ஆண்டும் அதிக கார் பந்தயங்களில் பங்கேற்க விரும்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

நடிகர் அஜித்குமார் என்ற நிலை மாறி கார் ரேஸ் அஜித் என்பது போலாகி விட்டது அவரின் நிலை.அவரின் ரசிகர்கள் நம்ம தல நடிக்க மாட்டாரா என்று காத்திருக்கின்றனர்.இயக்குனர்கள் அவரின் சினிமா மீள் வருகையை எதிர்பார்த்துள்ளனர்.நடிகர்கள் விஜய், அஜித் இல்லாத சினிமா,ரசிகர்களின் ஆரவாரம் குறைந்த ஒரு மேடை போல இருக்கிறது.


www.starfm.lk

02/06/2026

இசைஞானி இளையராஜாவுக்கு தனது சமூக வலைத்தளத்தில் தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்துகளை பதிவிட்டுள்ளார்.அதில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இசைஞானி இளையராஜா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!

தேனி மாவட்டம், பண்ணைப்புரம் என்ற கிராமத்தில் பிறந்து, தனது சகோதரர்களுடன் இசைப் பயணத்தைத் தொடங்கி, “அன்னக்கிளி” என்ற திரைப்படத்தின் மூலமாக திரைத்துறையில் கால்பதித்து, உலகப் புகழ்வாய்ந்த சிம்பொனி இசை வரை பல சாதனைகளைப் படைத்து, இசை உலகின் மகுடமாகத் திகழ்ந்துவரும் இசைஞானி இளையராஜா அவர்கள் தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்து வருகிறார்.

உங்கள் இசை இன்னும் பல தலைமுறைகளுக்கு வழிகாட்டும் ஒளியாகவும், ஊக்கமாகவும் தொடர்ந்து ஒலிக்கட்டும். தமிழர்களின் பெருமையாக விளங்கும் தங்களுக்கு எங்களின் அன்பும், மரியாதையும் கலந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!




www.starfm.lk

04/05/2026

தமிழ் நாட்டின் அடுத்த முதல்வர் நடிகர் விஜய்? அதிக இடங்களில் முன்னிலை!

https://www.starfm.lk/2026/05/blog-post_4.html

https://chat.whatsapp.com/CdQrB2OOcuB80nQg6k4iDh?mode=gi_t

chat.whatsapp.com

Photos from Star FM's post 06/03/2026

🔴 ஈரான் கப்பலில் இருந்தவர்களை இலங்கை கடற்படையினர் மீட்கும் நடவடிக்கை ஆரம்பம்

| |

22/02/2026

இலங்கையைச் சுற்றி மீண்டும் ஒரு பொற்காலம் மலர்ந்து கொண்டிருப்பதை யாராலும் மறைக்க முடியாது என்பதற்குச் சான்றாக, 2026-ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் மட்டும் 460,000-க்கும் அதிகமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

இது 2025-ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 12 சதவீத வளர்ச்சி! நாட்டின் முறையான நிர்வாகமும், திட்டமிடப்பட்ட பொருளாதாரப் பாதையும் எத்தகைய முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதற்கு இதைவிடச் சிறந்த ஆதாரம் தேவையில்லை.

ஆனால், இத்தகைய அபார வளர்ச்சியைப் பொறுத்துக்கொள்ள முடியாத சில அரசியல் தரப்புகள், பழையபடி மக்களைப் பயமுறுத்தி குளிர்காயப் பார்க்கின்றன. "நாட்டில் பாதாளக் குழுக்கள் தலைதூக்கிவிட்டன, பயங்கரவாதம் மீண்டும் வருகிறது, நாட்டில் பாதுகாப்பில்லை" என்று ஒரு கூட்டம் கூக்குரலிடுகிறது.

இங்கே ஒரு நிமிடம் சிந்தித்துப் பாருங்கள்; இவர்கள் சொல்வது போல நாட்டில் பாதுகாப்பு இல்லை என்றால், உலக நாடுகளிலிருந்து இவ்வளவு சுற்றுலாப் பயணிகள் தங்களது உயிரைப் பணையம் வைத்து இங்கு வருவார்களா?

உலகிலேயே பாதுகாப்பான நாடாக இலங்கை இன்று மாறியிருப்பதால்தான், சர்வதேசப் பயணிகள் அச்சமின்றி எமது கடற்கரைகளிலும் வீதிகளிலும் உலா வருகின்றனர்.

மக்களை மீண்டும் இனவாதக் குழியில் தள்ளி, பழையபடி நாட்டைச் சீரழிக்கப் பார்க்கும் இத்தகைய சுயநல அரசியலை மக்கள் தெளிவாகப் புரிந்துகொண்டுள்ளனர்.

2022-ஆம் ஆண்டு மக்கள் பட்ட அந்தத் துயரத்தையும், பொருளாதார நெருக்கடியின் கோரத் தாண்டவத்தையும் யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிடவில்லை.

எரிபொருளுக்காகவும், எரிவாயுவுக்காகவும் வரிசையில் நின்று, அன்றாட உணவிற்கே அல்லாடிய அந்த இருண்ட காலத்தை மீண்டும் கொண்டுவரத் துடிக்கும் சுயநல அரசியல்வாதிகளின் சூழ்ச்சிகள் இனி எடுபடாது.

அன்று வரிசைகளில் நின்ற அதே மக்கள், இன்று சுற்றுலாத்துறை மூலம் நாடு ஈட்டும் டொலர்களைக் கொண்டு நாடு நிமிர்வதைப் பெருமையுடன் பார்க்கிறார்கள். பொய்ப் பரப்புரைகளையும், இனவாதத் தூண்டல்களையும் வீசி எறிந்துவிட்டு, நாட்டின் உண்மையான அபிவிருத்திக்காகத் தற்போதைய அரசு எடுத்துவரும் நேர்மையான முயற்சிகளுக்குத் தோள் கொடுப்போம்.

இலங்கை இனி பின்நோக்கிப் போகாது; இது முன்னேற்றத்திற்கான காலம்!

19/01/2026

📢 இலங்கை கடவுச்சீட்டு (Passport) – புதிய தகவல்கள் (2026) ✈️

🔴 முக்கிய மாற்றங்கள்
• புதிய Navy Blue – “P” Series
• Middle East Only Passport இல்லை
• அனைவருக்கும் All Countries Passport

📋 விண்ணப்பம்
• Authorized Studio புகைப்படம்
• Photo Reference Number ரசீது மட்டும்

📌 ஆவணங்கள்
• Birth Certificate
• NIC
• Old Passport (இருந்தால்)

💰 கட்டணம்
• One Day – Rs. 20,000
• Normal – Rs. 10,000

👶 16 வயதிற்குட்பட்ட குழந்தைகள்
• தனி Passport கட்டாயம்
• Fingerprint தேவையில்லை
• குழந்தை நேரில் வர வேண்டும்

💰 குழந்தைகள் கட்டணம்
• 3 வருட Passport
– Normal: Rs. 3,000 | One Day: Rs. 9,000
• 10 வருட Passport (Optional)
– Normal: Rs. 10,000 | One Day: Rs. 20,000

✈️ பெற்றோர் வெளிநாட்டில் இருந்தால்
• Sri Lanka Embassy Attested Consent Letter அவசியம்

🚫 Passport தொலைந்தால் (Fine)
• 1 வருடத்திற்குள் – Rs. 20,000
• 1 வருடத்திற்குப் பின் – Rs. 15,000

📍 இடங்கள்
Battaramulla | Kandy | Matara | Vavuniya | Kurunegala | Jaffna

🕒 நேரம்: காலை 7.00 – 2.00
⏰ அதிகாலை செல்ல பரிந்துரை

🔄 Share…
www.starfm.lk

16/01/2026

வெனிசூலா எதிர்க்கட்சித் தலைவி மரியா கொரினா மச்சாடோ அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை வெள்ளை மாளிகையில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியதுடன், தனது நோபல் அமைதிப் பரிசுப் பதக்கத்தை அவருக்குப் பரிசாக வழங்கியுள்ளார்.

வெள்ளை மாளிகையில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்தத் தனிப்பட்ட சந்திப்பின் போது, மச்சாடோ தனது நோபல் பதக்கத்தை ட்ரம்ப்பிடம் ஒப்படைத்தார். இதனை “பரஸ்பர மரியாதையின் ஒரு சிறந்த அடையாளம்” என ட்ரம்ப் பாராட்டியுள்ளார். வெனிசூலாவின் சுதந்திரத்திற்காக ட்ரம்ப் காட்டும் அர்ப்பணிப்பிற்கான அங்கீகாரமாக இப்பரிசு வழங்கப்படுவதாக மச்சாடோ குறிப்பிட்டுள்ளார்.

ஒருவருக்கு வழங்கப்பட்ட நோபல் பரிசை மற்றொருவருக்கு மாற்றவோ அல்லது பகிர்ந்து கொள்ளவோ முடியாது என நோபல் குழு தெளிவுபடுத்தியுள்ளது.

www.starfm.lk

Want your business to be the top-listed Media Company in Colombo?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Address


Colombo