Tamil FM
அமெரிக்காவிடம் இருந்து வாங்கும் அதிநவீன ஆயுதங்களை வைத்து எங்களை இந்தியா கட்டுப்படுத்த முடியாது என இந்தியாவை சீனா மறைமுகமாக எச்சரித்துள்ளது.
வாஷிங்டன்:
தீவிரவாதிகளின் நடமாட்டத்தை கண்காணிக்கவும், அவர்கள் மீது தாக்குதல் நடத்தி அழிக்கவும் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் அமெரிக்கா ஆயுதங்களுடன் கூடிய ஆளில்லா உளவு விமானங்களை பயன்படுத்தி வருகிறது.
கடந்த ஜூன் மாதம் அமெரிக்கா சென்றிருந்த பிரதமர் மோடி, இத்தகைய உளவு விமானங்களை இந்தியாவுக்கு வழங்குமாறு அந்நாட்டின் அதிபர் டொனால்ட் டிரம்ப்பிடம் கேட்டுக் கொண்டார். அதம்படி, ஆயுதங்கள் இல்லாத 22 கார்டியன் ரக விமானங்களை இந்தியாவுக்கு விற்க அமெரிக்க அரசு சம்மதித்தது.
இந்நிலையில், அமெரிக்காவிடம் இருந்து ஆயுதங்களுடன் கூடிய சி அவெஞ்சர் ரக ஆளில்லா உளவு விமானங்களை வாங்க இந்திய விமானப்படை தீர்மானித்துள்ளது. சுமார் 800 கோடி டாலர் செலவில் இவ்வகையிலான 100 விமானங்களை வாங்க இந்தியா விருப்பம் தெரிவித்துள்ள நிலையில் இதுதொடர்பாக அமெரிக்க அரசு பரிசீலித்து வருவதாக அந்நாட்டின் பாதுகாப்புத்துறை உயரதிகாரி சமீபத்தில் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், இந்திய ராணுவத்துக்கு ரூ.40 ஆயிரம் கோடிக்கு அதிநவீன ஆயுதங்கள் வாங்கவும் சமீபத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்திய ராணுவத்துக்கு தேவையான கணிசமான ஆயுதங்கள் உள்நாட்டில் தயாரிக்கப்படுகின்றன. வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் ஆயுதங்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன. சமீபத்தில் மாநாடு ஒன்றில் பேசிய ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன், ராணுவத்தை நவீனப்படுத்த முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், ராணுவத்தின் போர்திறனை மேம்படுத்துவதற்கு இடையூறாக உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என்றும் கூறினார்.
இந்த நிலையில், டெல்லியில் நடைபெற்ற ராணுவ நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத், இந்திய ராணுவம் நவீனப்படுத்தப்படும் என்றும், எல்லை பகுதிகளை கண்காணிக்க நவீன சாதனங்கள் வாங்கப்படும் என்றும் கூறினார்.
ராணுவத்தில் ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் ஆயுதங்களுக்கு பதிலாக நவீன ஆயுதங்களை வாங்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. 7 லட்சம் துப்பாக்கிகள், 44 ஆயிரம் எடை குறைந்த இயந்திர துப்பாக்கிகள் மற்றும் 44 ஆயிரத்து 600 சிறிய ரக துப்பாக்கிகள் கொள்முதல் செய்ய தீர்மானிக்கப்பட்டு இருப்பதாக கூறிய அந்த வட்டாரங்கள், முதலில் 10 ஆயிரம் எடை குறைந்த துப்பாக்கிகள் வாங்கப்படும் என்றும் தெரிவித்தன. இந்த ஆயுதங்கள் ரூ.40 ஆயிரம் கோடி செலவில் வாங்கப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், வாஷிங்டன் நகரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமெரிக்காவுக்கான சீனத் தூதர் குய் டியான்காய் இந்தியாவுக்கு அமெரிக்கா அதிநவீன ஆயுதங்களை விற்பதனால் எந்த நோக்கமும் நிறைவேறப் போவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.
இந்திய-பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமெரிக்காவின் உதவியுடன் இந்தியா பலமாக காலூன்ற துடிப்பதாக சீனா கருதிவரும் நிலையில் சீனாவை கட்டுப்படுத்த யாராலும் முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நிரந்தரத்தன்மை, வளம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தெற்காசிய நாடுகளுக்கு இடையிலான நல்லுறவுகளை தொடருவதில் சீனா எப்போதுமே தயாராக உள்ளது. கடந்த காலத்தில் இந்தியா-சீனா இடையிலான உறவுகள் படிப்படியாக வளர்ச்சி அடைந்துள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
01/11/2017
"கார்த்திகை 01" மாவீரர் மாத சிறப்பு பதிவு..!
மாவீரர் மண்ணுக்காக மரணித்த மைந்தர்கள். மரணத்திலும் வித்தாகி வாழுகின்ற வீரர்கள். தம் இனத்திற்காக இன்னுயிரை ஈந்த இளவல்கள். வெடிகுண்டு சுமந்தவர்கள். விடியலைத் தேடியவர்கள். வீரத்தின் விளை நிலங்கள்.
எமது தாய்த் திருநாட்டின் சுதந்திரத்திற்காக மாவீரர்கள் செய்திட்ட தியாகங்களில் தான் எத்தனை எத்தனை பரிமாணங்கள். விடுதலைப் புலிகளின் வீரவரலாற்றிலே எமது தமிழ் இனத்தின் விடுதலைக்காக வித்தாகி வீழ்ந்திட்ட மாவீரர்கள் ஒவ்வொருவர் வாழ்விலும் தான் எத்தகைய வித்தியாசமான தியாக விந்தைகள்.
கந்தகப் பொடியைக் கழுத்தில் சுமந்து
கொண்ட கொள்கையில் குறியாய் நின்று
தன்னினத்தின் விடுதலைக்காய் இன்னுயிரை ஈந்தவர் மாவீரர்.
அழிக்க வந்த எதிரியை அடக்கப் போனபோது செய்த தியாகங்கள். உயிருடக் பிடிபடக்கூடாது என்பதற்காக சயனட் அருந்தி சயனித்த தியாகங்கள், வெடி மருந்துடன் எதிரியின் பாசறைக்குள் பாய்ந்து செய்த தியாகங்கள், மூடப்பட்ட முற்றுகைக்குள் முறிந்து போன வில்லுடன் மோதிச் செய்த தியாகங்கள், நாட்டைக் காப்பாற்றுவதற்காக நீரிலும், நிலத்திலும் தாரை வார்த்த தற்கொடைகள் தான் எத்தனை! எத்தனை! உண்மையை விளக்குவதற்கு உரிமையை பெற்றெடுப்பதற்கு உண்ணா நோன்பிருந்தும் உயிர் கொடுத்திட்ட உத்தமர்கள் பற்றியும் உரைத்திட இயலுமோ!
ஒரு விடுதலை வீரனின் சாவு சாதாரண நிகழ்வு அல்ல. அந்தச் சாவு ஒரு சரித்திர நிகழ்வு.
சத்திய வேள்வியில்
தன்னை ஆகுதி ஆக்கி
தன்னின விடுதலைக்கு வித்திட்ட மறவர்களே
மறப்போமா உங்களை.
உமது உறுதி வீண்போகாது.
நம் தேசத்தில் நடமாடும் தெய்வங்களாய், காவலர்களாய், மாவீரர்களாய் இருப்பவர் நீங்கள்.
ஒவ்வொரு ஆண்டும் மாவீரர் நாளாகிய இந்தப் புனித நன்நாளில் உளமார எம் வீரர்களை நாம் நினைவு கூர்வதானது உணமையில் எமது நெஞ்சைப் புடம் போட உதவுகின்றது. அந்த வீரத் தியாகிகளை எண்ணிப் பார்த்து எமது இதயங்களில் அவர்களை இருத்துகின்றோம். மாவீரர் கனவு நனவாகும். அந்த நிதர்சனத்திற்காக நாமும் எமது பங்கினை ஆற்ற வேண்டும்.
அதி சிறப்பான மானிடர் தொகுதியொன்றுள்ளது. இவர்களுக்கு இறப்பு என்பது என்றுமில்லை. ஏனெனில் இவர்கள் இறந்த பின்பும் வாழ்கின்றார்கள். உலகிலே மனிதர்கள் இறக்கின்றார்கள். தமிழீழத்திலோ மாவீரர்கள் வாழ்கின்றார்கள். இதுவொரு புத்துயிர்ப்பான உன்னதமான ஒரு நெறி. இதனை மீளவும் தனது வரலாற்றுப் பேழையிலிருந்து எமது மண் புதுப்பிக்கின்றது.
கொல்வோரை மோதி கொடு பட்ட இன்னுயிரை
எல்லா உயிரும் தொழும்.
ஆவி கொடுக்க அசையாத்திடங் கொண்ட மாவீரர் வாழும் மண். என்று கவிஞன் முருகையனின் கவிதை வரி சொல்கிறது.
உயிரை உருவி வெளியிலிடுத்து கைகளில் தாங்கி வீரச்சா நேரம் குறித்து இயங்கும் வீரர் உயிரையே ஆயுதமாங்கி களங்களிலே அதியுயர் சாதனைகளைப் படைத்த புலிவீரர்களின் சாதனை கண்டு சர்வதேசமும் நடுங்கி நின்ற காலமும் உண்டு.
எனவே தான் இக்கார்த்திகை மாதம் மாவீரர் காலம். பொழியும் மழைத்துழியும் அவர் முகம் தேடும். எம் கண்ணீர்த்துளிகளும் அவர்களின் கல்லறைகளை நினைத்திடும் காலம்.
வானில் பறக்கும் புள்ளெல்லாம் – நான்
மண்ணில் திரியும் விலங்கெல்லாம் – நான்
தானில் வளரும் மரமெல்லாம் -நான்
காற்றும் புனலும் கடலும் நானே. என மாவீரர் இசைக்கும் பாடல் ஒவ்வொரு தமிழ் மகனின் காதிலும் கேட்கிறதா?
போராட்டத்தின் வடிவங்கள் மாறலாம். போராட்டக் களங்கள் மாறலாம்; ஆனால் தீர்வு என்பது. முடிவு என்பது அது தமிழ் ஈழம் என்ற ஒன்றையே உருவாக்கும்.
29/10/2017
விரைவில் ”குறும்படம்” ரிலீஸ்? எண்ணூர் சென்ற கமல் சட்டைபையில் இருந்த அந்த பொருளை கவனித்தீர்களா?
எண்ணூர் துறைமுகத்தில், கமல்ஹாசன் இன்று நேரடியாக ஆய்வுகளை செய்துள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கமல் அரசியலுக்கு அடித்தளம் போட்டுவிட்டார் என்பது பொதுவான கருத்தாக உள்ளது. ஆனால், அவர் குறும்படம் எடுக்கத்தான் எண்ணூர் சென்றாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கமல் தனது ரசிகர்களுக்கே தெரியாமல் செல்ல வேண்டும் என்பதற்காக விடிந்தும், விடியாமல் எண்ணூர் துறைமுகம் பகுதிக்கு போயுள்ளார்.
வேறு நோக்கம்
கமல் விசிட் அடித்தது அரசியல் நோக்கம் என்று பொதுவான கருத்து ஏற்பட்டுள்ளது. ஆனால் அவர் தீர்வை நோக்கி பயணிப்பதாகவே தெரிகிறது. தனது அரசியல் லாபத்திற்காக அங்கு சென்றதாக தெரியவில்லை.
மைக் மாட்டிய சட்டை
இந்த கருத்து எழ காரணம் கமல் தனது சட்டைப்பையில் மாட்டியிருந்த Label mike. முதல்வன் படத்தில் வடிவேலு ஒரு பெண்ணின் சட்டைப்பையில் மாட்டிவிடுவாரே அன்றுமுதல் தமிழகத்தின் பட்டிதொட்டியெல்லாம் ஃபேமஸ் ஆனதே அதே மைக்தான்.
ஒலியை பதிவு செய்யும்
ஒலியை பதிவு செய்யும்
சின்னத்திரையில் நிகழ்ச்சி நடத்துவோர், பேட்டி கொடுப்போர் எல்லோருமே தங்களது சட்டைப்பையில் இந்த மைக்கை மாட்டி வைத்திருப்பார்கள். இது ஒலியை உள்வாங்கி அதை பதிவு செய்யும். எனவேதான், நேயர்கள் தெளிவான குரலை கேட்க முடியும்.
பிக்பாஸ் நிகழ்ச்சி
இதுபோன்ற ஒரு மைக்கைத்தான், கமல் சட்டைப்பையிலும் பொருத்தியிருந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தும்போது அவரது சட்டைப்பையிலும் இதுபோன்ற மைக் கமல் பொருத்தியிருப்பார். எண்ணூர் துறைமுகத்திற்கு சென்ற கமல் இந்த மைக்கை பொருத்தியது ஏன்? நடப்பவற்றை பதிவு செய்து அதை குறும்படமாக வெளியிடப்போகிறார் என்ற எண்ணத்தை இது ஏற்படுத்தியுள்ளது.
ஆவணப்படமா?
மாற்றி, மாற்றி பேசுவோர்களை, இதோ ஒரு 'குறும்படம்' என்று போட்டு காண்பித்து சிக்கலில் மாட்டி வைப்பார் கமல். இதே பிக்பாஸ் யுக்தியை அரசியல்வாதிகளுக்கும் கமல் காட்டப்போவதன் அறிகுறிதான் இந்த ஆவணப்படமோ என்ற சந்தேகம் எழுகிறது.
தளபதியின் மெர்சல் படத்தில், கவனிக்க வைத்த இலங்கை பெண் யார் தெரியுமா..
தளபதி விஜய் நடிப்பில் நேற்று உலகம் முழுவதும் மெர்சல் படம் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.
இப்படத்தின் ஆரம்பத்திலேயே விஜய் ப்ரான்ஸ் நாட்டில் வந்து இறங்கியவுடன், அவரை ப்ரான்ஸ் போலிஸார் சந்தேகத்துடன் பார்ப்பார்கள்.
உடனே அவரின் உடையை அவிழ்த்து பரிசோதனை செய்வார்கள், பிறகு விஜய் டாக்டர் என்பதை தெரிந்துக்கொண்டு விட்டுவிடுவார்கள், அதன் பின் ஒரு இலங்கை பெண் ‘அண்ணா மன்னித்து விடுங்கள்.
அவர்களுக்காக நான் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கின்றேன், உங்கள் உடையை பார்த்து அவர்கள் அப்படி நினைத்திருப்பார்கள்’ என்று ஆறுதல் கூற, உடனே விஜய் ‘பரவாயில்லம்மா, கமல் சார், கலாம் சாருக்கே இதெல்லாம் நடக்கும் போது நாமெல்லாம் யார்?’ என்று சொல்வார்.
இந்த காட்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது, இந்த காட்சியில் இலங்கை பெண்ணாக நடித்தது வேறு யாருமில்லை, இலங்கையில் வெளிவந்த மண் படத்தின் நாயகி ஷனா மகேந்திரன்.
இவர் இந்த ஒரு காட்சியில் வந்து சென்றாலும், அந்த காட்சி வசனங்கள் மிகவும் வலுவாக இருந்ததால் எல்லோர் மத்தியிலும் மிகவும் பிரபலமடைந்து வருகின்றது.
20/10/2017
தந்தையின் கண்டிப்பு; நள்ளிரவில் மாயமான சிறுமி: தேடும் பணியில் ஆளில்லா விமானம்
அமெரிக்காவில் இரண்டு வாரங்களுக்கு முன் மாயமான இந்திய சிறுமியை தேடும் பணியில் ஆளில்லா விமானங்களை பொலிசார் பயன்படுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ரிச்சர்ட்சன் நகரில் மனைவி மற்றும் 4 வயது சொந்த மகள் மற்றும் 3 வயது வளர்ப்பு மகள் ஷெரின் மேத்யூசுடன் வசித்து வந்தவர் தந்தை வெஸ்லி மேத்யூஸ். சம்பவத்தன்று, சிறுமி ஷெரின் பால் குடிக்க மறுத்துளாள். இது அவளது வளர்ப்பு தந்தை வெஸ்லிக்கு கோபத்தையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது.
உடனே அவர் அந்த சிறுமியை அதிகாலை 3 மணிக்கு வீட்டுக்கு வெளியே நடைபாதையில் விட்டு விட்டு சென்று விட்டார். அதன்பின்னர் அந்த சிறுமி அப்பகுதியில் இருந்து மாயமானாள். இது குறித்து அவர், ரிச்சர்ட்சன் நகர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து சுற்று வட்டாரப்பகுதிகளில் அந்த சிறுமியை பொலிசார் தேடியுள்ளனர். ஆனால் சிறுமி என்ன ஆனாள் என்றோ, எங்கு போனாள் என்றோ தெரியவில்லை. இந்த நிலையில் சிறுமி மாயமான 2 வாரங்களுக்கு பின்னர் அவரை தேடும் பணியில் ஆளில்லா விமானங்களை பொலிசார் பயன்படுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் பொலிஸ் அதிகாரி கெவின் பெர்லிச் கூறுகையில், “அவளை உயிருடன் கண்டுபிடிக்க முடியும் என்று நாங்கள் உறுதியுடன் நம்புகிறோம். ஆனால் நேரம்தான் எங்கள் எதிரியாக உள்ளது. முடிந்தளவுக்கு அவளை விரைவாக கண்டுபிடிக்க முயற்சித்து வருகிறோம்” என்று குறிப்பிட்டார்.
அதே நேரத்தில் இந்த வழக்கில் சிறுமியின் வளர்ப்பு பெற்றோரான வெஸ்லி தம்பதியர், ஒத்துழைக்க மறுப்பதாக பொலிசார் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதற்கிடையே இந்திய வம்சாவளியான வெஸ்லி கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
சம்பவம் நடந்து 14 நாட்களாகியும் சிறுமி ஷெரின் பற்றி சரியான தகவல்கள் கிடைக்காமல் பொலிசார் திணறி வருகின்றனர். ஆனால் இதுவரை பொதுமக்களின் உதவி கேட்டு கோரிக்கை விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Click here to claim your Sponsored Listing.
Category
Telephone
Website
Address
Colombo