Hot News
15/05/2023
துருக்கியில் நடைபெற்ற தேர்தலில் வாக்கு எண்ணும் பணிகள் தற்போது நடைபெற்றுவரும் நிலையில் தற்போதைய அதிபர் எர்துகான் தொடர்ந்தும் முன்னிலை வகிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
12/05/2023
யாழ் மாவட்ட மாணவர்களுடன் ஜனாதிபதி சந்திப்பு.....!!
தொழிற்கல்வியின் அவசியம் குறித்து ஜனாதிபதி வலியுறுத்தல்
▪️ கல்வி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள Skills Expo 2023 கொழும்பு ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த கண்காட்சி நிலையத்தில் இன்று ஆரம்பமாகியுள்ளது.
இக்கண்காட்சியில் பங்கெடுக்க நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் ஒருங்கமைப்பில் யாழ்ப்பாணத்திலிருந்து சுமார் 750 மாணவ மாணவியர் வருகைதந்துள்ளனர்.
நிகழ்வில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ் மாவட்ட மாணவ மாணவியரை சந்தித்து உரையாடியுள்ளார்.
இதன்போது, எதிர்கால கல்வி முன்னேற்றத்தில் யாழ் மாவட்டத்தின் பங்களிப்பு நாட்டுக்கு அவசியம் என்றும், தொழிற்கல்வியில் அதிகம் ஈடுபாடு காட்டுமாறும் ஜனாதிபதி மாணவர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
10/05/2023
இலங்கை, சவூதி பாராளுமன்ற நட்புறவுச்சங்க தலைவராக அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவு.
(ஊடகப்பிரிவு)
இலங்கை,சவூதி பாராளுமன்ற நட்புறவுச் சங்கத் தலைவராக சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இப்பதவிக்கு இவர் தெரிவாகியுள்ளமை இருதரப்பு உறவுகளை மேம்படுத்துமென நம்பப்படுகிறது.
சவூதிஅரேபியாவின் மன்னர் பஹட் பெற்றோலியம் மற்றும் கனியவளப் பல்கலைக்கழகத்தில் பட்டம்பெற்ற இவர், அந்நாட்டுடன் நெருக்கமான உறவிலுள்ளவர். சவூதிஅரேபியாவின் முன்னணி எரிபொருள் நிறுவனங்களின் தலைவர்கள் பலர், அமைச்சருடன் பல்கலைக்கழகத்தில் பயின்ற சக நண்பர்களாக உள்ளமையும் குறிப்பிடத்தக்கது. அரபுமொழியில் பாண்டித்தியமும், ஹாபிழுமான அமைச்சர் நஸீர் அஹமடின் பாண்டித்தியம் இலங்கை முஸ்லிம்களின் கலாசார அபிலாஷைகளை அடைந்துகொள்ள உதவுமென எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையின் பொருளாதார மேம்பாடுகளுக்கு சவூதியுட்பட அரபு நாடுகளின் ஒத்துழைப்பை பெறவும் இவரது தெரிவு வழிகோலும்.காலநிலைச் சவால்களை எதிர்கொள்ளும் பக்குவம் மற்றும் உள்நாட்டுக் கனிய வளங்களை சர்வதேச சந்தைப்படுத்தும் வியாபார வியூகங்கள் குறித்த அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
09/05/2023
முஸ்லிம் சமூக சவால்களை
கலந்தாலோசிக்க அமைச்சர் நஸீர்அஹமட் அவசர அழைப்பு
(ஊடகப்பிரிவு)
முஸ்லிம் சமூகத்தின் சமகால சவால்களை தீர்த்துவைக்கும் பொதுவான வரைபை தயாரிக்கும் தருணம் வந்துள்ளது.இனியும், தனித்தனியாகச் செயற்பட்டு சமூக உரிமைகளை வெல்ல முடியாதென்பதே நிதர்சனமாகியுள்ளதாக அமைச்சர் நஸீர்அஹமட் தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது
சிறுபான்மை சமூகங்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஜனாதிபதி முனைப்புடன் செயற்படுவதை நான் அறிவேன்.
எனவே, இழக்கப்பட்ட முஸ்லிம்களின் காணிகளை மீளப்பெறவும்,இதனுடன் தொடர்புடைய ஏனைய பிரச்சினைகள் குறித்தும் பொதுவான வரைபை தயாரிக்க வேண்டியுள்ளது.வடக்கில் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட பின்னர் பறிபோன காணிகள் மற்றும் கிழக்கில்
திட்டமிட்டு விழுங்கப்பட்ட முஸ்லிம்களி ன் பூர்வீக நிலங்களைப் பெற வேண்டிய அவசியம் நமக்கு இருக்கிறது.இதற்கு அரசியல் தலைமையென்ற ரீதியில் நாம் பதில் சொல்லியே ஆக வேண்டும் .
உதாரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 27 சத வீதமான முஸ்லிம்கள் வாழ்கின்னறனர்.இம்மாவட்டத்தில் மொத்தமாகவுள்ள 14 பிரதேச செயலகங்கள் பிரிவில்,நான்கு பிரதேச செயலகங்களிலே முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். இச்செயலகங்களில் வாழும் முஸ்லிம்களுக்கு,1.3 வீதமே காணிகளே உள்ளன.இவையும் திணிக்கப்பட்டே இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.இதே நிலைதான்,அம்பாறை, திருமலை உட்பட வடக்கின் ஏனைய மாவட்டங்களிலும் நிலவுகிறது.
இது தவிர, எல்லை நிர்ணய அறிக்கைகளிலும் சில சந்தேகங்கள், பாரிய ஆபத்துக்கள் உள்ளன.முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் அல்லது அவர்களின் பெரும்பான்மை பலத்தை சிதைக்கும் வகையிலேயே இந்த அறிக்கை உள்ளது.புதிய தேர்தல் முறையிலும் முஸ்லீம் சமூகம் பாதிக்கப்படாதவாறு பணியாற்ற நாம் வேண்டியுள்ளது.எனவேதான்,
முஸ்லிம் சமூகத்தின் இவ்வாறான சமகால சவால்கள் தொடர்பில் சமூகப் பிரதிநிதிகளிடம் ஒருமித்த கருத்து நிலவுவது அவசியம். இக்கருத்தொற்றுமையுடனும் போதிய ஆவணங்களுடனும் முஸ்லிம் பிரதிநிதிகள் ஜனாதிபதியைச் சந்திக்க வேண்டும் .இதற்காக,சகல முஸ்லிம் தலைமைகளும்,எம்பிக்களும் தங்களது அரசியல் பேதங்களைப் புறந்தள்ளி ஒன்றுபடுமாறு அழைக்கிறேன். ஒற்றுமையில்தான், பொது வரைபை தயாரிக்கலாம்.இந்த வரைபினால், சகோதர சமூகங்களையும் புரிந்துணர்வுக்கு கொண்டு வர முடியும்.ஒரே தா
25/04/2023
உலக புவி தினக் கொண்டாட்டம் - 2023
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி உலகெங்கும் மில்லியன் கணக்கான மக்கள் உலக புவி தினத்தை பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி கொண்டாடுகின்றனர். உலக புவி தினக் கொண்டாட்டம் முதல் முறையாக அரம்பமானது 1970 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி ஐக்கிய அமெரிக்காவிலாகும். ஐரோப்பிய மக்களினால் மேற்கொள்ளப்பட்ட அதிக வளப் பயன்பாடு காரணமாக ஏற்பட்ட வளி மாசு மற்றும் நீர் மாசு காரணமாக மனித சுகாதாரத்திற்கு ஏற்பட்ட அச்சுறுத்தலை தவிர்ப்பதற்கு மக்களை தூண்டுவதே இதற்குக் காரணமாக இருந்தது.
உலக புவி தின அமைப்பினால் இம்முறை உலக புவி தினத்தின் தொனிப்பொருளாக, “எமது பூமியில் முதலீடு செய்வோம்”(Invest in our Planet) என்பதை அறிவித்துள்ளனர். அதன்படி, எதிர்கால சந்ததிகளின் தேவைக்காக இயற்கை வளங்களை சேமிக்கும் வகையில் பேண்தகு முறையில் பயன்படுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும்.
இந்த ஆண்டு உலக புவி தின கொண்டாட்டத்திற்கான விழா ஒன்று 2023.04.24ஆம் திகதி கௌரவ சுற்றாடல் அமைச்சர் பொறியியலாளர் நசீர் அஹமட் அவர்கள் மற்றும் செயலாளர் விசேட மருத்துவர் அனில் ஜயசிங்க அவர்களின் தலைமையில் சுற்றாடல் அமைச்சின் 8அவது மாடியில் உள்ள கேட்போர்கூடத்தில் நடைபெற்றது. கொண்டாட்ட நிகழ்ச்சி அறிவூட்டும் செயலமர்வு வடிவத்தில் செயற்பட்டதோடு அதற்காக 75 பாடசாலை மாணவர்கள் மற்றும் அமைச்சு அதிகாரிகள் உட்பட 178 பேர் அளவானோர் பங்கேற்றனர்.
சுற்றாடல் அமைச்சின் செயலாளர் விசேட மருத்துவர் அனில் ஜயசிங்க அவர்கள் புவி தின வரலாறு மற்றும் அதனுடன் தொடர்புபட்ட விடயங்களை விளக்கினார்.
சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட் அவர்கள் இவ்வாறான சுற்றாடல் தொடர்பிலான தினம் குறித்து அடிமட்டத்தில் இருந்து மக்களை அறிவூட்டும் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டினார். அதன்மூலம் சுற்றாடல் தொடர்பில் உணர்வுபூர்வமான மக்களை உருவாக்க முடியும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களை அறிவூட்டுவதற்காக 02 விரிவுரைகள் நடத்தப்பட்டன. புவி தினத்தின் முக்கியத்துவம் மற்றும் இயற்கை வளங்களை எதிர்கால சந்ததிக்கு பாதுகாப்பது தொடர்பில் நீர்ப்பாசன திணைக்களத்தின் கீழ் செயற்படும் ஒன்றிணைந்த நீர் மூல மற்றும் நீர் வள முகாமைத்துவ திட்டத்தின் சுற்றாடல் நிபுணர் டீ.எம். அனுருத்த தென்னகோன் அவர்களினால் முதல் விரிவுரை நடத்தப்பட்டதோட
Click here to claim your Sponsored Listing.
Category
Telephone
Website
Address
Colombo