Abdul Wajith
03/03/2026
24/02/2026
🚧 இராசமடு - எருவிட்டான் உள்ளக வீதியினை காபட் வீதியாக அமைக்கும் ஆரம்ப நிகழ்வு 🚧
நமது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நானாட்டான் பிரதேசத்திற்குட்பட்ட நீண்டகாலமாக கண்டுக்கொள்ளப்படாமல் காணப்பட்ட #இராசமடு_எருவிட்டான் உள்ளக வீதியானது காபட் வீதியாக அமைக்கும் பணி இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தோழர் ஜெகதீஸ்வரன், பிரதேச சபை தவிசாளர், வட்டார பிரதேச சபை உறுப்பினர்கள், தேசியமக்கள் சக்தி அமைப்பாளர்கள் மற்றும் அக்கிராமத்திற்கு பொறுப்பான அரச உத்தியோகத்தர்கள் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
#வளமான_நாடு_அழகான_வாழ்க்கை
24/02/2026
பாடசாலை மாணவர்களுக்கான பொது போக்குவரத்து சேவைகளுக்கான மானியம் வழங்கும் திட்டம்.
மேற்படி நிகழ்வில் அகில இலங்கை ரீதியில் பாடசாலை மாணவர்களுக்கான பொது போக்குவரத்து திட்டம் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் ஒழுங்கு நடவடிக்கை தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. இன் நிகழ்வானது தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தலைவர் தலைமையில் இடம்பெற்றது மேலும் இன் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள் ( கௌரவ ஜெகதீஸ்வரன் மற்றும் கௌரவ அடைக்கலநாதன்), மன்னார் மாவட்ட செயலாளர், வட மாகாண வீதிகள் போக்குவரத்து அதிகாரசபை தலைவர், பிரதேச செயலாளர்கள், உதவி மாவட்ட செயலாளர், மாந்தை மேற்கு மற்றும் நானாட்டான் பிரதேச சபை தவிசாளர்கள், NTC போக்குவரத்து ஆணைக்குழு செயலாளர் மற்றும் அலுவலர்கள், கல்வி பணிப்பாளர்கள், அரச மற்றும் தனியார் போக்குவரத்து நிறுவனங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் விடைகள் தொடர்பான அலுவலர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
குறிப்பாக பாடசாலை மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளுக்கு தேவையான போக்குவரத்து இடையூறு ஏற்படுத்தும் காரணிகள் மற்றும் தீர்வுகள் தொடர்பாகவும், பொது போக்குவரத்து கால அட்டவணை மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பான விசேட கவனம் செலுத்தப்பட்டது.
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Colombo