Citizen News
14/03/2024
அவளுடைய பலம் நாட்டிற்கு முன்னேற்றம் என்ற தொணிப் பொருளில் 2024ம் ஆண்டிற்கான சர்வதேச மகளிர் தினம் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் டி ஜே அதிசயராஜ் தலைமையில் (14) இன்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட பாண்டிருப்பு கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது .
குறித்த நிகழ்வின்போது கல்முனை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சாதனைகள் புரிந்த பெண்கள் கௌரவிக்கப்பட்டதுடன் பெண் கலைஞர்களினால் கலை நிகழ்வுகளும் நிகழ்த்தப்பட்டு பரிசில்களும் வழங்கப்பட்டது.
இதன்போது நாவிதன்வெளி பிரதேச செயலாளர் செல்வி ஆர். ராகுலநாயகி, பிரதம அதிதியாகவும் கௌரவ அதிதியாக வைத்தியர் புஷ்பலதா லோகநாதன், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் வசந்தினி யோகேஸ்வரன், மாவட்ட மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் சுரேகா தர்ஷானி எதிரிசிங்க அம்பாறை மாவட்ட பெண்கள் வலையமைப்பு இணைப்பாளர் கலைவாணி தயாபரன் மற்றும் கலைஞர்கள் சமூக ஆர்வலர்கள் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Website
Address
Colombo