Zhiyan
09/11/2024
அந்தப் புள்ளியை மீண்டும் பாருங்கள். இதோ இங்கிருக்கிறது. அதுதான் எங்களுடைய இருப்பிடம். அது நாமேதான். அதிலேதான் நீங்கள் விரும்புகின்றவர்கள், தெரிந்தவர்கள், கேள்விப்பட்டவர்கள் என அத்தனை மனிதர்களும் வாழ்ந்து மறைந்தார்கள், வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
நம்முடைய மகிழ்ச்சிகள், துன்பங்கள், மதங்கள், சித்தாந்தங்கள், பொருளாதார கோட்பாடுகள் என அத்தனையும் இந்த சிறு புள்ளியில்தான் நிறைந்திருக்கின்றன.
ஒவ்வொரு வேட்டைக்காரனும், நாடோடியும், வீரனும், கோழையும், அரசனும், விவசாயியும், காதலனும், காதலியும், தாயும், தந்தையும், குழந்தையும், விஞ்ஞானியும், ஆசிரியனும், அரசியல்வாதியும், ஊழல்வாதியும், தலைவர்களும், கதாநாயகர்களும், புனிதர்களும், பாவிகளும் என அத்தனை பேருமே சூரிய ஒளியில் மின்னிக் கொண்டிருக்கும் இந்த துகளின் மீதுதான் வாழ்ந்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள்.
-கார்ள் சாகன்
Happy Birthday Carl ❤️
05/11/2024
ரொம்ப நாளைக்கு அப்பறமா பூமில இருந்து ஓநாய் ஒன்ன படம் பிடிச்சிருக்காங்க. ரொம்ப நாளைக்கு அப்பறம்னா ஓநாய் இனம் அழியப்போகுற ஆபத்துல இருக்கோனு நினைக்காதேங்க.
இது வானத்துல இருக்குற ஒரு கருமையான ஓநாய். 5300 ஒளியாண்டுகள் தூரத்துல இருக்குற இந்த ஓநாய் ரொம்ப அடர்த்தியான பிரபஞ்சத் துகள்களால் ஆனது. இதனால் இதனூடாக ஒளி பயணிப்பது தடுக்கப்படுகிறது.
வழமையாக நெபுலாக்கள் எனப்படுகின்ற பிரபஞ்சத் துகள் மேகங்கள் ஒளியை பிறப்பிக்கும் ஆற்றலை கொண்டவை. ஆனால் இந்த கருமை ஓநாய் அதற்கு நேர்மாறாக இருக்கின்றது.
இதனால் இந்த கருமை ஓநாயினை வெற்றுக் கண்ணால் பார்க்க முடியாது. ஸ்கோர்பியன் விண்மீன் கூட்டத்திலுள்ள இதனை செங்கீழ் கதிர்களை படம்பிடிக்கும் தொலைநோக்கியின் உதவியுடனே படம்பிடிக்க முடியும்.
இந்த கருமை ஓநாய் அதிகளவிலான நட்சத்திரங்களின் பிறப்பிடமாக இருக்கின்றது. அதனை சூழ மிளிர்ந்து கொண்டிருக்கும் ஹைட்ரஜன் வாயுக்கள் அதற்கான சான்றுகளாகும்.
ஒரு நட்சத்திரம் புதிதாக உருவாகும் போது வெளிவிடும் கதிரியக்கத்தினால் எப்போதும் அதனை சூழ்ந்திருக்கும் வாயுக்கள் சக்தியை உறிஞ்சி மிளிர்ந்து கொள்ளும்.
படத்தில் சிவப்பு நிறத்தில் மிளிர்ந்து கொண்டிருப்பவை இவ்வாறு சக்தி பெற்ற ஹைட்ரஜன் வாயுக்களாகும்.
#ஷியான்_யாக்கூப்
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Address
Colombo