Tamil information

Tamil information

Share

Photos from Tamil information's post 18/06/2025

சமாதான நீதவான் நியமன விதிமுறைகளில் திருத்தம் – அதிவிசேட வர்த்தமானி வெளியீடு

சமாதான நீதவான் நியமனம் தொடர்பான விதிமுறைகளில் பல்வேறு முக்கியமான மாற்றங்களை அதிவிசேட வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த புதிய வர்த்தமானி, ஏற்கனவே நியமிக்கப்பட்ட சமாதான நீதவான்களின் நியமனங்களை பாதிக்காது என நீதி அமைச்சு உறுதியளித்துள்ளது.

புதிய திருத்தங்களில் முக்கியமாக, நிர்வாக மாவட்டங்களுக்கு சமாதான நீதவான் நியமிக்கப்படும் போது விண்ணப்பதாரர்கள்,

குறைந்தபட்சம் 30 வயதுக்கு மேல்
அதிகபட்சம் 75 வயதுக்கு கீழ் இருக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், முழு நாட்டுக்கான சமாதான நீதவான் பதவிக்கு, குறைந்தபட்சம் 5 வருட அனுபவம் நிர்வாக மாவட்ட சமாதான நீதவானாக இருக்க வேண்டும் என்ற புதிய விதியும் கொண்டு வரப்பட்டுள்ளது.

அத்துடன், உயர்தர (A/L) பரீட்சையில் குறைந்தது ஒரு பாடத்தில் சித்தி பெற்றிருக்க வேண்டும் என்பது கட்டாயத் தகுதியாக இணைக்கப்பட்டுள்ளது.

Want your public figure to be the top-listed Public Figure in Colombo?
Click here to claim your Sponsored Listing.

Website

Address


Colombo