Ansoft
26/05/2025
தரம் 10 - தமிழ் மொழிமூல மாணவர்களுக்கான தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பவியல் (ICT) பாட ZOOM வகுப்புகள் ஜூன் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளன.
முதல் இரண்டு வகுப்புகள் இலவசம் மாணவர்கள் இலவசமாக இணைந்து கொள்ள முடியும்.
இணைந்து கொள்ள உங்கள் பெயர், உங்கள் பாடசாலை பெயர் மற்றும் Whatsapp இலக்கத்தினை 0752835853 இற்கு அனுப்பவும்.
அல்லது கீழ் வரும் Whatsapp குழுவில் இணைந்து கொள்ளவும்.
https://chat.whatsapp.com/BwCZdEQ7jEFAP14MwgdY4r
25/11/2024
வாட்ஸ் அப்பில் அழைப்புகளை பதிவு செய்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
-------------------------------------------------------------------------
நம் அன்றாட வாழ்வில் இன்றியமையாத ஒரு பகுதியாகிவிட்டது WhatsApp. குடும்பத்தினர், நண்பர்கள், சக பணியாளர்கள் என அனைவரையும் எளிதாக தொடர்பு கொள்ள வாட்ஸ் அப் உதவுகிறது.
ஆனால், வாட்ஸ்அப்பில் அழைப்புகளை பதிவு செய்யும் வசதி(Recording) இல்லாததால் பலர் சில முக்கிய குறிப்புகள் மற்றும் விவரங்களை இழந்து விடுகிறார்கள்.
வாட்ஸ்அப் நிறுவனமும் தனியுரிமை காரணங்களைக் கூறி இதுவரை அழைப்புகளை பதிவு செய்யும் வசதியை அறிமுகப்படுத்தவில்லை.
இருப்பினும், மூன்றாம் தரப்பு பயன்பாடுகள் மூலம் வாட்ஸ்அப் அழைப்புகளை பதிவு செய்யும் வசதியை சாத்தியமாக்கலாம்.
கூகுள் பிளே ஸ்டோரில் சென்று Cube ACR, Salestrail அல்லது ACR Call Recorder போன்ற செயலிகளை தேடி பதிவிறக்கம் செய்யவும்.
இந்த செயலிகள் வாட்ஸ்அப் மட்டுமல்லாமல், மற்ற பயன்பாடுகளிலும் அழைப்புகளை பதிவு செய்ய உதவும்.
செயலியை முதல் முறையாக திறக்கும்போது, மைக்ரோபோன் மற்றும் சேமிப்பு போன்ற அனுமதிகளை கேட்கும். இந்த அனுமதிகளை வழங்கவும்.
வாட்ஸ்அப் அழைப்பை தொடங்கினால், நீங்கள் பதிவிறக்கம் செய்த செயலி தானாகவே அழைப்பை பதிவு செய்யத் தொடங்கும்.
Ansoft Web Design
அழைப்பு முடிந்த பின், செயலியில் சென்று பதிவு செய்யப்பட்ட ஆடியோவை கேட்கலாம்.
24/11/2024
WhatsApp அறிமுகப்படுத்திய புதிய அம்சம்
--------------------------------------------------------
உலகில் அதிக மக்கள் பயன்படுத்தும் சமூக ஊடகங்களில் ஒன்றான வாட்ஸ்அப் (Whatsapp)புதிய அம்சம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன்படி, வாட்ஸ் அப்பில் வாய்ஸ் மெசேஜ்களை (Voice Message) எழுத்து வடிவில் மாற்றக்கூடிய ஓர் முறையே தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
வாட்ஸ் அப் பயனர்கள் தமக்கு அனுப்பப்பட்ட குரல் பதிவினை செவிமடுக்க முடியாத சூழ்நிலைகளில் இந்த வழிமுறையை பயன்படுத்தி தொடர்பாட முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த புதிய அம்சம் பயனர்களின் தனி உரிமைக்கு முன்னுரிமை வழங்கி இந்த புதிய தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், எதிர்வரும் வாரங்களில் உலகளாவிய ரீதியில் இந்த அம்சம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாகவும் தற்பொழுது பரீட்சார்த்த அடிப்படையில் சில நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
23/11/2024
கூகுள் குரோம் இனி விற்பனை? தொழில்நுட்ப உலகில் புதிய திருப்பம்!
-------------------------------------------------------------------------
உலகளாவிய அளவில் மிகவும் பிரபலமான இணைய உலாவியான கூகுள் குரோம், தற்போது பெரும் சவாலுக்கு உள்ளாகியுள்ளது.
அமெரிக்க நீதித்துறை, கூகுள் நிறுவனம் தனது தேடல் சந்தையில் ஏகபோகத்தை நிலைநிறுத்த குரோம் பிரவுசரை தவறாக பயன்படுத்தியதாக குற்றம் சாட்டி வருகிறது.
இந்த குற்றச்சாட்டு, கூகுள் குரோமை விற்பனை செய்ய வேண்டிய நிலைக்கு நிறுவனத்தைத் தள்ளும் அபாயத்தில் உள்ளது.
கூகுள் குரோம், உலகின் பெரும்பாலான இணைய பயனர்களால் பயன்படுத்தப்படும் முதன்மையான இணைய உலாவியாக மாறியுள்ளது.
இதன் மூலம் கூகுள், இணைய தேடல் மற்றும் விளம்பர சந்தையில் ஏகபோக ஆதிக்கத்தைப் பெற்றுள்ளது.
கூகுளின் ஏகபோக ஆதிக்கம், மற்ற இணைய உலாவிகள் மற்றும் தேடல் இயந்திரங்கள் வளர்ச்சிக்கு பெரும் தடையாக உள்ளது.
கூகுள், பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை சேகரித்து, அதை விளம்பரங்களுக்காக பயன்படுத்துகிறது. இது, தனிப்பட்ட தகவல் பாதுகாப்பு குறித்த கவலைகளை எழுப்பியுள்ளது.
இதன் விளைவுகள் என்ன?
------------------------------------
கூகுள் குரோம் விற்பனை செய்யப்பட்டால், பயனர்கள் தற்போது பயன்படுத்தும் உலாவியை மாற்ற வேண்டிய நிலை ஏற்படலாம்.
மேலும், புதிய உலாவிகளுக்கு மாறும் போது, பயனர்கள் தங்களின் பழக்க வழக்கங்களை மாற்றி கொள்ள வேண்டியிருக்கும்.
கூகுள் குரோம் விற்பனை, தொழில்நுட்ப உலகில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். இது, இணைய தேடல் மற்றும் விளம்பர சந்தைகளில் புதிய போட்டியாளர்களுக்கு வாய்ப்பை ஏற்படுத்தும்.
கூகுள் குரோம் விற்பனை, பயனர்களின் தனிப்பட்ட தகவல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கச் செய்யும்.
இதன் மூலம், இணைய நிறுவனங்கள் தங்களின் தகவல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்த தூண்டப்படும்.
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Colombo