Batticaloa.com
22/03/2026
நெல்லிக்காடு கிணறு விவகாரம் – சிக்கிய கொள்ளைக் குழுவினர்: நடந்தது என்ன? முழுமையான நேரடி ரிபோர்ட்
மட்டக்களப்பு,கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெல்லிக்காடு வயல் பிரதேசத்திலுள்ள பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து பெண் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக ஐந்து பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் இரண்டு முச்சக்கர வண்டிகள்,கார் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பனவும் மீட்கப்பட்டுளள்து.
இந்த குழுவினர் மட்டக்களப்பில் நடைபெற்ற பல்வேறு கொள்ளைச்சம்பவங்களுடனும் தொடர்புபட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
வவுணதீவிலிருந்து மட்டக்களப்பு நகருக்கு மூன்று வயது குழந்தையுடன் சென்ற இளம் தாய் ஒருவர் காணாமல் போனார். மறுநாள் வெள்ளிக்கிழமை குறித்த தாய் பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து உயிருக்கு போராடிய நிலையில் மீட்கப்பட்டதுடன், அவரது குழந்தை வயல் பகுதியில் அழுது கொண்டிருந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. அதே கிணற்றிலிருந்து அழுகிய நிலையில் மற்றுமொரு பெண்ணின் சடலமும் மீட்கப்பட்டது.
கிழக்கு மாகாண சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் வர்ணஜயசுந்தரவின் ஆலோசனையின் கீழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலாரத்னவின் வழிகாட்டலில், கிழக்கு மாகாண விசேட குற்ற விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி ரி.மேனன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் இது தொடர்பான விசாரணையினை முன்னெடுத்துவந்தனர்
குறித்த சம்பம் தொடர்பில் சிசிரிவி காட்சிகளைக்கொண்டு கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டி அடையாளப்படுத்தப்பட்டு அதன் உரிமையாளர் இனங்காணப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவந்த நிலையில் வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காஞ்சிரங்குடா வேர்க்கண்டசேனை பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து கணவன் மனைவி,கணவனின் சகோதரன் ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட கணவன் மனைவி, சம்பவ தினமான வியாழக்கிழமை வவுணதீவு பகுதியில் குழந்தையுடன் பேருந்துக்காக காத்திருந்த இளம் தாயைக் கண்டு, முச்சக்கர வண்டியை நிறுத்தி எங்கே போவதாகக் கேட்டுள்ளனர். அவர் மட்டக்களப்பு நகருக்குப் போகப் போவதாகத் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, குறித்த பெண் தாங்களும் அங்கு செல்வதாகக் கூறி வருமாறு அழைத்துள்ளார்.இளம் தாயையும் குழந்தையையும் ஏற்றிக்கொண்டு நகரை நோக்கிப் பயணித்துள்ளனர். அப்போது தான் அடகு வைத்த குழந்தையின் தங்க ஆபரணத்தை மீட்கப் போவதாகத் தெரிவித்துக் கொண்டே நகரை வந்தடைந்து குழந்தையுடன் இளம் தாய் இறங்கியுள்ளார்.
இறங்கிய அந்த இளம் தாய்க்குப் பின்னால் குறித்த பெண்ணும் தானும் வருவதாகத் தெரிவித்துப் பின்தொடர்ந்து சென்றுள்ளார். அங்கு அவர் அடகு வைத்த தங்க ஆபரணத்தை மீட்டெடுத்துக் கொண்ட பின்னர், குறித்த பெண் தாங்கள் மீண்டும் வவுணதீவு செல்வதாகவும், உங்களுடன் இன்னொருவரை ஏற்றி குறைந்த கட்டணத்தில் கொண்டு சென்று விடுவதாகவும் தெரிவித்து அவர்களை மீண்டும் ஆட்டோவில் ஏற்றியுள்ளார். வலையிறவு பாலத்தை அண்மித்த போது, அவருக்கு மயக்க மருந்து கலந்த பழச்சாறு போத்தலைக் குடிப்பதற்கு கொடுத்துள்ளனர்.
அவர் அதனை வாங்கி குடித்ததையடுத்து மயக்கமடைய ஆரம்பித்துள்ளார்.
இதன்போது கொத்தியாபுலை பகுதியில் உள்ள வயல்பகுதியில் குழந்தையினை எரிந்துவிட்டு குறித்த முச்சரக்கவண்டி காஞ்சிரங்குடா சென்று அங்கு மயக்கமடைந்த பெண்ணின் சுமார் நான்கரை பவுன் தாலிக்கொடியை கழட்டி தனது மனைவியிடம் கொடுத்துவிட்டு மனைவியை வீட்டில் இறக்கிவிட்டபின்னர் வீட்டிலிருந்த தனது காரில் குறித்த பெண்ணை ஏற்றிக்கொண்டு தனது சகோதரனை கூட்டிக்கொண்டுசென்று நெல்லிக்காட்டு பகுதிக்கு கொண்டுசென்று கிணற்றில் பெண்ணை வீசிவிட்டு சென்றுள்ளனர்.
இதேபோன்று கடந்த 28ஆம் திகதி களுவாஞ்சிகுடியிலிருந்து பட்டிருப்பு பாலம் ஊடாக முச்சக்கர வண்டியொன்றில் கணவன் மனைவியும் வந்துகொண்டிருந்தபோது பட்டிருப்பு பாலத்திற்கு அருகில் பஸ{க்காக காத்திரந்து திக்கோடை,40ஆம் கிராமத்தினை சேர்ந்த 45வயதுடைய ரவி நளாயினி என்பவரை முச்சக்கர வண்டியில் ஏற்றிக்கொண்டுவந்துகொண்டிருக்கும்போது அவருக்கும் குளிர்பாணத்தில் மயக்க மருந்து வழங்கப்பட்டு அவரை காஞ்சிரங்குடா பகுதிக்கு கொண்டுவந்து அவரது சுமார் 07பவுண் கொடியை கழட்டு எடுத்துவிட்டு குறித்த நெல்லிக்காட்டு கிணற்றில் வீசிவிட்டுச்சென்றுள்ளனர்.
இந்த பெண்ணிடமிருந்து கொள்ளையிடப்பட்ட தாலிக்கொடியை விற்பனை செய்து அதன்மூலம் கார்ஒன்றிணை கொள்வனவு செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அதுமட்டுமன்றி மட்டக்களப்பு பஸ் நிலையத்தில் பஸ{க்காக காத்திருந்த பெண்னொருவருடன் உரையாடிக்கொண்டு அவருக்கு மயக்க மருந்துகொண்டு கடந்த பெப்ரவரி மாதம் 04ஆம் திகதி அவரிடமிருந்த தங்கநகைகளையும் மோட்டார் சைக்கிளில்வந்து கொள்ளையிட்டுச்சென்றுள்ளமை தொடர்பிலும் இதன்போது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது கடத்தல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு முச்சக்கர வண்டிகள்,ஒரு கார் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிளையும் மீட்டுள்ளதுடன் வீட்டில் வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் மற்றும் இறுதியாக கடத்தப்பட்ட பெண்ணின் தாலிக்கொடி என்பனவற்றினை பொலிஸார் மீட்டுள்ளனர்.
இதன்போது கொள்ளையிடப்பட்ட நகைகள் விற்பனைசெய்த மற்றும் அடகுவைக்கப்பட்ட நகைக்கடை உரிமையாளர்கள் இருவரும் இது தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண விசேட குற்ற விசாரணைப் பிரிவினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் கிழக்கு மாகாண விசேட குற்ற விசாரணைப் பிரிவினர் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டுவருவதுடன் நாளையதினம் கைதுசெய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்தனர்.
23/02/2026
கல்வி முறையை பற்றி கேள்வி எழுப்ப 81 வயதில் O/L கணிதத் தேர்வு எழுதிய முதியவர்!!
Batticaloa.com
81 வயதுடைய ஒருவர் இந்த ஆண்டுக்கான சாதாரண தர (O/L) கணிதத் தேர்வில் தோன்றி, கல்வி முறையைப் பற்றிய விவாதத்தை எழுப்பியுள்ளார். கணிதத் தேர்வுத் தாளில் பல பிழைகள் உள்ளதாகவும், அது மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
கிரிபெரியா பகுதியைச் சேர்ந்த நிமல் சில்வா என்ற இவர், தனிப்பட்ட சாதனைக்காக அல்லாமல், கல்வி முறையில் குறைபாடுகள் உள்ளதை வெளிக்காட்டவே தேர்வில் அமர்ந்ததாக செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
2025ஆம் ஆண்டு கணிதத் தேர்வுத் தாளில் உண்மையான கணக்குப் பிரச்சினை ஒன்று மட்டுமே இருந்ததாகவும், மற்ற கேள்விகளில் பிழைகள் இருந்ததாகவும் அவர் கூறினார். “இந்தத் தாள் மாணவர்களின் அறிவை சோதிப்பதற்காக அல்ல; அவர்களைத் தோல்வியடையச் செய்யும் வகையில் உள்ளது” என்றும் அவர் தெரிவித்தார்.
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் கல்வி அதிகாரிகள் இந்தத் தேர்வுத் தாளை பார்த்து தாமும் முயற்சி செய்து பார்க்க வேண்டும் என அவர் சவால் விடுத்துள்ளார்.
மேலும், கணிதத்தின் அடிப்படை பகுதிகள் தற்போதைய பாடத்திட்டத்தில் சரியாக கற்பிக்கப்படவில்லை என்றும், இதனால் மாணவர்களின் தர்க்க சிந்தனை திறன் பாதிக்கப்படுகின்றது என்றும் அவர் கூறினார்.
5ஆம் ஆண்டு உதவித்தொகைத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், கல்வியில் ஒழுக்கமும் நற்பண்புகளும் முக்கியப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். ஆசிரியர் நியமனத்தில் தரநிலைகள் கடுமையாக இருக்க வேண்டும் என்றும், கிராமப்புறப் பள்ளிகளை மேம்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
2025 கணிதத் தேர்வுத் தாளில் உள்ள பிழைகள் குறித்து விரிவான அறிக்கையைத் தயாரித்து, தேர்வுத்துறைக்கும் பிரதமர் அலுவலகத்திற்கும் அனுப்ப உள்ளதாகவும் அவர் கூறினார்.
20/02/2026
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவப் பீட வரலாற்றில் ஒரே நேரத்தில் அதிக பதக்கங்களை வென்ற மாணவர்களில் ஒருவராக திகழும் தங்க மங்கை நற்குணம் அபிராமி ♥️ 🎉 💐
Batticaloa.com
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மருத்துவத்துறையில் செல்வி அபிராமி நற்குணம் 8 தங்க பதக்கங்களை பெற்றுக்கொண்டார்.
• Final MBBS – அனைத்துக் கட்டங்களிலும் முதலிடம்
• Surgery – விசேட சித்தி
• Obstetrics & Gynaecology – விசேட சித்தி
• Paediatrics – விசேட சித்தி
• மருத்துவப் பீடத்தின் சிறந்த மாணவி விருது போன்றவற்றுக்கு தங்க பதக்கங்களை பெற்றுக்கொண்டார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவப் பீட வரலாற்றில் ஒரே நேரத்தில் அதிக பதக்கங்களை வென்ற மாணவர்களில் ஒருவராக இவர் இடம்பெற்றுள்ளார்.
உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் 👏
17/02/2026
மட்டக்களப்பில் கண் பார்வையற்ற மற்றும் ஓட்டிசம் நோயினால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் கல்விப் பொதுத்தராதர சாதாரண பரீட்சையில் பங்கேற்பு.
இன்று ஆரம்பமாகியுள்ள கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் கண் பார்வையற்ற மாணவன் ஒருவரும் ஓட்டிசம் நோயினால் பாதிக்கப்பட்ட மாணவன் ஒருவருமாக இரு விசேட தேவை உள்ளவர்கள் பரீட்சைக்குத் தோற்றியுள்ளனர்
விழிப்புலனற்ற மாணவன் மட்டக்களப்பு தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலையில் இருந்து சிவானந்தா தேசிய பாடசாலை பரீட்சை மண்டபத்தில் செய்கை மொழியில் பரீட்சை எழுதுவதற்காக பரீட்சைக்குத் தோற்றியுள்ளார்
அதேநேரம் ஓட்டிசம் நோயினால் பாதிக்கப்பட்ட மாணவன் ஒருவன் மட்டக்களப்பு மஞ்சஞ்தொடுவாயிலுள்ள தனது வீட்டிலிருந்து சிசிலியா பெண்கள் கல்லூரி பரீட்சை மண்டபத்தில் பரீட்சை எழுதுவதற்காக பரீட்சைக்கு தோற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது
மாவட்டத்தில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைகள் இன்று மிகவும் அமைதியான முறையில் ஆரம்பமாகியுள்ளன. மாணவர்கள் மிகவும் உற்சாகத்தோடு பரீட்சைக்கு தோற்றியுள்ளனர். பரீட்சை மண்டபங்களுக்கு விஷேட பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
16/11/2025
பன்னீரை தூவும் மழை சில்லென்ற காற்றின் அலை... 🌧 ☔️ 🥶
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Website
Address
Batticaloa
SRILANKA