A7
10/10/2025
ஐந்து வகையான கோசங்கள்
10/10/2025
🌙✨ ஆரோக்கியமான உறக்க நிலைகள் ✨😴
💤 தோள்பட்டை வலி
👉 பக்கவாட்டில் படுத்து, முழங்கால்களுக்கிடையில் தலையணை வைத்துக் கொள்ளவும்.
💤 முதுகுவலி
👉 முதுகில் படுத்து, முழங்கால்களின் கீழ் சிறிய தலையணை வைத்துக் கொள்ளவும்.
💤 தலைவலி
👉 முதுகில் நேராக படுத்து, கழுத்துக்கு சரியான ஆதரவு தரும் தலையணை பயன்படுத்தவும்.
💤 அதிக இரத்த அழுத்தம்
👉 வலது பக்கம் படுத்து தூங்கவும்.
💤 கழுத்துவலி
👉 பக்கவாட்டில் படுத்து, கழுத்து மற்றும் முதுகுத்தண்டு ஒரே கோட்டில் வருமாறு தலையணை வைத்துக் கொள்ளவும்.
💤 சைனஸ் பிரச்சனை
👉 முதுகில் படுத்து, தலையணையை சற்று உயர்த்தி வைத்து தூங்கவும்.
✨ சிறந்த குறிப்புக்:
சரியான தலையணை + சரியான தூக்க நிலை = 💤 ஆரோக்கியமான, புத்துணர்ச்சி தரும் உறக்கம் 🌙
#நாட்டுமருந்து #உடல்வலி
Hi hooman
20/09/2025
*💊 பரசிடமோல் (Paracetamol)*
* பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை சிறு வலி என்றாலும், காய்ச்சல் என்றாலும் நாம் பாவிக்கின்ற பரசிட்டமோல் பற்றி இன்று பார்க்கலாம்.
* எல்லா மருந்துகளும் வழக்கமாக Pharmacy களிலேயே விற்கப்பட வேண்டும். ஆனால் இதனை நீங்கள் சாதாரண கடைகளிலும் பெற முடியும்.
* வைத்திய ஆலோசனை இன்றியே நீங்கள் வழக்கமாக எடுக்கக் கூடிய மருந்துகளுள் இதுவும் ஒன்று.
*❓ என்ன மருந்து இது?*
* காய்ச்சல் (Fever) மற்றும் பல்வேறு பட்ட வலிகளைக் (Pain) குறைக்கப் பயன்படுத்தப்படும் பொதுவான பாதுகாப்பான மருந்து.
* இதிலுள்ள இரசாயனப் பொருள் “Acetaminophen” என்று அழைக்கப்படுகிறது.
*✅ எப்போது இதனைப் பாவிக்கலாம்?*
* 🌡️ காய்ச்சல் ஏற்படுகிற போது, காய்ச்சலைக் குறைக்க
* 🤕 தலைவலி, உடல்வலி, பல் வலி, மூட்டு வலி, தசைவலி, வயிற்றுவலி என உடலில் ஏற்படும் பல்வேறு வலிகளின் போது அதனைக் குறைக்க
* 👶 குழந்தைகளுக்கும் அளவோடு பாதுகாப்பாக பயன்படுத்தலாம்
*💊 பரிந்துரைக்கப்பட்ட மருந்தின் அளவு (Dosage) என்ன?*
*👨🦱 பெரியவர்கள் (50kg இற்கு மேற்பட்ட எடையுடையவர்கள்):*
* ஒரு வேளைக்கு: உயர்ந்த பட்சம் 1 g (1000 mg) - சாதாரணமாக இரண்டு குளிசைகள்
* ஒரு நாளில்: உயர்ந்தபட்சம் 4 g (4000 mg) - சாதாரணமாக ஒரு நாளைக்கு 4 வேளைகள் அதாவது 6 மணித்தியாலங்களுக்கு ஒரு தடவை
*👶 குழந்தைகள் (50kg இற்கு குறைந்த எடையுடையவர்கள்):*
* குழந்தைகளைப் பொறுத்தவரை உடல் நிறைக்கேற்பவே பரசிட்டமோல் குளிசைகளை அல்லது மருந்தினைக் கொடுக்க வேண்டும்.
* குளிசையைப் பொறுத்தவரை, ஒரு வேளைக்கு: உயர்ந்த பட்சம், 1 kg நிறைக்கு 10–15 mg - உதாரணமாக 20 kg குழந்தையெனின் 200-300 mg
* ஒரு நாளில்: உயர்ந்தபட்சம் 60 mg/kg இனைத் தாண்டக் கூடாது. உதாரணமாக 20 kg குழந்தை எனின், ஒரு நாளைக்கு உயர்ந்த பட்சம் 1200 mg மாத்திரமே. சாதாரணமாக ஒரு நாளைக்கு 4 வேளைகள் அதாவது 6 மணித்தியாலங்களுக்கு ஒரு தடவை
* மருந்தினைப் பொறுத்தவரை, மருந்துப் பெட்டியில் எடை மற்றும் வயதிற்கேற்ப உள்ளெடுக்க வேண்டிய அளவு குறிப்பிடப்பட்டிருக்கும். அதனைப் பின்பற்றவும் அல்லது மருத்துவ ஆலோசனை பெறவும்.
*⚠️ அதிக அளவில் எடுத்தால் (Overdose) என்ன நடைபெறும்?*
* 🚫 கல்லீரல் சேதமடையும் (Liver failure)
* 🚫 வயிற்றுவலி, வாந்தி, மஞ்சள் காமாலை, மரண அபாயம் கூட ஏற்படலாம்
*🚫 எப்போது இதனைப் பயன்படுத்தக்கூடாது?*
* ❌ கல்லீரல் நோய் / Hepatitis / Cirrhosis உள்ளவர்கள்
* ❌ Alcohol/சாராயம் அதிகம் குடிப்பவர்கள் - ஏற்கனவே ஈரல் பாதிப்படையும் அபாயம் உண்டு
* ❌ Paracetamol இற்கு ஒவ்வாமை/allergy உள்ளவர்கள் (அரிதாக சிலருக்கு இவ் ஒவ்வாமை காணப்படும்)
*💊 எத்தனை நாட்களுக்கு மருத்துவ ஆலோசனை இன்றி இதனை உபயோகிக்கலாம்?*
* ✅ பெரியவர்கள் - 3 நாட்கள் வரை
* ✅ குழந்தைகள் (Children) - 2 நாட்களுக்கு
*🚨 பரசிடமோல் குளிசைகளை எடுத்தாலும், உடன் வைத்தியரை அணுக வேண்டிய நிலைகள் எவை?*
* குளிசை எடுத்த பின்னர் ஒவ்வாமை ஏற்பட்டால் (தோலில் கடி, சிவத்தல், சூடு)
* 🌡️ காய்ச்சல் (Fever) - 104°F (40°C) க்கு மேல் காய்ச்சல்
* 🧒 3 மாதத்திற்கு குறைவான குழந்தைக்கு - 100.4°F இற்கு மேல் காய்ச்சல்
* 🩸 காய்ச்சலுடன் → தோலில் புள்ளிகள் (rash) இருத்தல் / இரத்தம் வெளியேறல்
* 😰 காய்ச்சலுடன் மூச்சுத்திணறல், நெஞ்சுவலி, வலிப்பு, சுயநினைவற்ற தன்மை
* 🌍 வெளிநாட்டுப் பயணத்திலிருந்து வந்த பிறகு காய்ச்சல்
* ⚡ திடீரென ஏற்படும் மிகக் கடுமையான தலைவலி
* ❤️ நெஞ்சுவலி
* 🩸 வயிற்று வலியுடன் இரத்த வாந்தி அல்லது கறுப்பு நிற மலம்
* 🦵 கால்/கையில் வலியுடன் திடீர் வீக்கம்
* 🧒 குழந்தையில் கடுமையான காது வலி / வயிற்று வலி
* 🌡️ காய்ச்சல் 3 நாட்களுக்கு மேல் நீடித்தால்
* 🤕 வலி 5 நாட்களுக்கு மேல் நீடித்தால்
* 🤢 வாந்தி, வயிற்றுவலி, மஞ்சள் காமாலை (மஞ்சள் நிற கண்கள்/ தோல்)
* 🩸 அசாதாரண இரத்தப்பெருக்கு / தோலில் இரத்தம் கண்டித்தல் தெரிந்தால்
* 🧒 குழந்தைக்கு 2 நாட்களுக்கும் மேலாக தேவையாக இருந்தால்
* 👩⚕️ கர்ப்பிணி / கல்லீரல் நோய் உள்ளவர்கள் வைத்திய ஆலோசனை இன்றித் தொடரக்கூடாது
*⚠️ வைத்திய ஆலோசனையையும் தாண்டி நீண்டகாலம் (Long-term use) இதனை எடுத்தால் என்ன நடைபெறும்?*
* 🧪 Chronic liver damage (Hepatotoxicity)/ நீண்ட கால கல்லீரல் சேதம்
* ⚠️ Kidney damage/ சிறுநீரகம் பாதிப்பு (analgesic nephropathy)
* 🩸 அரிதாக குருதி சார்ந்த சில நோய்கள் (thrombocytopenia, anemia)
* ⚠️ Gastritis / stomach upset/ இரைப்பைப் புண்கள்
*👉 சுருக்கம்:*
* Paracetamol = Safe friend in pain & fever
* ஆனால் “அளவுக்கு அதிகமாக” அல்லது “நீண்டகாலம்” எடுத்தால் → Silent poison (Liver + Kidney) ⚠️
27/05/2025
பெருங்குடல் மலக்குடல் அதிக அசுத்தமானால் இது போன்ற பக்க விளைவுகள் வர வாய்ப்பு மிக மிக அதிகம் ஒவ்வாமையால் வருவதை தவிர்த்து மற்றதை இதனுடன் ஒப்பிட்டு பார்த்து உங்களது உடல் கழிவுகளை அகற்றக் கற்றுக்கொண்டு வருமுன் காத்துக் கொள்ளுங்கள்
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Website
Address
Batticaloa