Dharmapuri
ஒகேனக்கல்லை உலக தரம் வாய்ந்த சுற்றுலாதலமாக மாற்ற தர்மபுரி எம்.பி., வலியுறுத்தல்
தர்மபுரி: ""ஒகேனக்கல்லை உலக தரம் வாய்ந்த சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும்,'' என தர்மபுரி எம்.பி., தாமரைசெல்வன் பார்லிமென்டில் வலியுறுத்தி பேசினார்.பார்லிமென்டில் எம்.பி., தாமரைசெல்வன் பேசியதாவது:தர்மபுரி பார்லிமென்ட் தொகுதிக்கு உட்பட்டது ஒகேனக்கல். சுற்றுலா தலமான இங்குள்ள நீர்வீழ்ச்சி இந்தியாவின் நயக்கரா என அழைக்கப்படுகிறது. இங்கு அருவிகளில் குளியல், பரிசல் சவ்வாரி சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.இங்கு தமிழகத்தின் பல பகுதியில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு அதிக அளவில் கார்பனைட் பாறைகள் அதிக அளவில் உள்ளன. இந்த அருவிகளில் குளித்தால், பல்வேறு நோய்கள் குணமாகும்.இப்பகுதி அடர்ந்த மரங்கள் கொண்ட பசுமையான பகுதியாக உள்ளது. காவிரியில் புனித நீராடவும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்கின்றனர். மனதுக்கு அமைதியும், இயற்கை எழில் சூழ்ந்த பகுதியாக ஒகேனக்கல் இருந்து வருகிறது. இங்கு சுற்றுலா வருவோர் ரம்மியமான இடத்துக்கு வந்த சென்ற அனுபவம் கிடைக்கும்.சுற்றுலா பயணிகளை பல வகைகளில் கவர்ந்த ஒகேனக்கல்லை சர்வதேச தரத்துக்கு மாற்றி அதற்கான கட்டமைப்புகளை மேம்படுத்தி சர்வதேச சுற்றுலாதலமாக மாற்ற வேண்டும். தற்போது, சுற்றுலா மையங்களை மத்திய அரசு உலக தரத்துக்கு மாற்றும் நடவடிக்கையில் சில சுற்றுலா தலங்களை பட்டியியல் இட்டு, கட்டமைப்பு வசதிகள் செய்ய இருப்பதாக அறிகிறேன்.அந்த பட்டியலில் ஒகேனக்கல் சுற்றுலா தலத்தையும் சேர்ந்து, உலக தரத்துக்கு கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி ஒகேனக்கல் நீர் வீழ்ச்சி குறித்து சுற்றுலா பயணிகள், வெளி நாட்டு பயணிகள் அறிந்து கொள்ளும் வகையில் சுற்றுலா தல வழிகாட்டிகளில் இடம் பெற செய்ய வேண்டும்.இதன் மூலம் தர்மபுரி மாவட்டத்தை பொருளாதார முன்னேற்றத்துக்கும் உதவும். மத்திய அரசு சுற்றுலாத்துறை ஒகேனக்கல்லை சர்வதேச தரத்துக்கு மாற்றிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு பேசினார்.
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Salem
636701