Nature Relaxation

Nature Relaxation

Share

இயற்கையை பாதுகாப்பது, வனவிலங்குகளை பாதுகாப்பது, காடு வளர்ப்பது, மரங்கள் வளர்ப்பது, பறவைகள் கூடுகட்டும்படியான மரங்கள் வளர்ப்பது, பறவைகளின் உணவிற்கான பழக்கன்றுகளை நட்டு வளர்ப்பது, மலைவாழ் மக்களுக்கான வளர்ச்சி, கல்வி, விளையாட்டு போன்றவற்றை ஊக்குவிப்பது இயற்கையை நேசியின் நோக்கம்.
வனம் காப்போம், மனித இனம் வாழ...

29/10/2024

பறவைகள், வனவிலங்குகளை அச்சுறுத்தும் பட்டாசுகளை வெடிக்காதீர்கள்...

வானத்தில் சென்று வெடித்து சிதறும் பட்டாசுகளை வெடிக்காதீர்கள்...

゚viralfbreelsfypシ゚viral ゚ ゚viralシ

28/06/2024

பொள்ளாசி தொழில் வர்த்தக சபையின் தலைவர் திரு G.D.கோபால கிருஷ்ணன் ஐயா அவர்களின் மறைவு என்பது, ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு. ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

06/06/2024

அறக்கட்டளையின் நீண்டநாள் கனவு நிறைவேறியது..

அறக்கட்டளையின் பல்வேறு சமூக சேவைக்காக டிராக்டர் வாங்கப்பட்டது.

இயற்கையை நேசி பொதுநல அறக்கட்டளையின் பல்வேறு சமூக சேவைக்காக அறக்கட்டளையின் சார்பில் மஹேந்திரா டிராக்டர் வாங்கப்பட்டது.

இயற்கையை நேசி பொதுநல அறக்கட்டளையின் பல்வேறு சமூக சேவைக்காக வாங்கப்பட்ட வாகனத்தின் சாவியை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.சுகுமார் அவர்கள் வழங்க, அறக்கட்டளையின் அறங்காவலர் முருகானந்தம் சாவியை பெற்றுக்கொண்டார்.

இதில், பொள்ளாச்சி தமிழிசை சங்கத்தின் துணைச் செயலாளரும் இயற்கை ஆர்வலருமான அண்ணன் திரு.முரளிகிருஷ்ண காளிங்கராயர், திட்ட ஆலோசகர் மற்றும் சாலைப் போக்குவரத்து விழிப்புணர்வு அமைப்பாளர் திரு.கமலக்கண்ணன், மகளிர் நலன் மற்றும் விழிப்புணர்வு அமைப்பாளர் திருமதி கவிதா, பசுமை நலன் மற்றும் விழிப்புணர்வு அமைப்பாளர் திரு.ராஜேஷ்குமார், பிளாஸ்டிக் களைதல் மற்றும் விழிப்புணர்வு அமைப்பாளர் திரு.தினேஷ்குமார், பழங்குடியினர் நலன் மற்றும் விழிப்புணர்வு அமைப்பாளர் (கேரளா)
திருமதி. முத்தாள், இளைஞர் நலன் மற்றும் விழிப்புணர்வு அமைப்பாளர் திரு. சீனிவாசபிரபு மற்றும் உறுப்பினர் முத்து ஆகியோர் கலந்துகொண்டனர்.

இயற்கையை நேசி பொதுநல அறக்கட்டளை பல்வேறு சமூக சேவைகளை செயல்படுத்தி வருகிறது. இருப்பினும் நீண்டநாள் கனவு இன்று நிறைவேறியது. 2018 ஆம் ஆண்டு அறக்கட்டளை துவங்கப்பட்ட நாள்முதல் மரங்களை நடுவதல்ல, நட்டு தண்ணீர் ஊற்றி வளர்ப்பது என்பதை கொள்கையாக கொண்டிருந்தது. அதன் காரணமாக அறக்கட்டளை சார்பில் இதுவரை ஒரு மரக்கன்றைக்கூட நடாமல் இருந்தோம். மரங்களை நடுவது பெரிதல்ல தண்ணீர் ஊற்றி வளர்க்க வேண்டும். தண்ணீர் கொண்டு செல்ல எங்களிடம் வாகனம் இல்லாததால் மரக்கன்றுகளை நடாமல் இருந்தோம். ஆனால், பறவைகளின் நலன் கருதி பழக்கன்றுகளையும் மரக்கன்றுகளையும் நட்டு வளர்ப்பதென முடிவு செய்யப்பட்டது.

தற்போது, அறக்கட்டளையின் உறுப்பினர்கள் பங்களிப்போடு இந்த மஹேந்திரா டிராக்டரை அறக்கட்டளையின் சேவைகளுக்காக வாங்கியுள்ளோம் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றோம்.

அறக்கட்டளையின் சேவைகளுக்காக இந்த வாகனம் வாங்க பெரிதும் உதவிய பிளாஸ்டிக் களைதல் மற்றும் விழிப்புணர்வு அமைப்பாளர் திரு.தினேஷ்குமார், மகளிர் நலன் மற்றும் விழிப்புணர்வு அமைப்பாளர் திருமதி கவிதா, பறவைகள் நலன் மற்றும் விழிப்புணர்வு அமைப்பாளர் திரு.முருகானந்தம் ஆகியோருக்கு அறக்கட்டளை பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறது.

Iyarkayai Nesi Trust இயற்கையை நேசி அறக்கட்டளைNature RelaxationVengai Kalaikkoodam

08/05/2024

அரசுக்கு அறக்கட்டளை சார்பில் கோரிக்கை
மரங்களை வெட்ட அனுமதி வழங்கவேண்டாம்

இயற்கையை நேசி பொதுநல அறக்கட்டளை சார்பில் பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மரங்களை வெட்ட யாராவது அனுமதி கோரும் பட்சத்தில் அனுமதி வழங்க வேண்டாம் என்பதை வலியுறுத்தி பொள்ளாச்சி சார் ஆட்சியரிடம் ( 07-05-2024 ) அன்று மனு வழங்கப்பட்டது.

மனுவில் குறிப்பிட்டதாவது; ஆனைமலை சாலையில் தாத்தூர் பிரிவு அருகே நெடுஞ்சாலைதுறையினரால் சாலை மேம்பாட்டு பணிக்கு இடையூறாக உள்ள 27 மரங்களை வெட்ட வருவாய்த்துறையிடம் அனுமதி கோரியிருந்த நிலையில், அந்தக் கோரிக்கையை நிராகரிக்கப்பட்டு முக்கியத்துவம் வாய்ந்த அறிக்கையை வெளியிட்டு இயற்கையை பாதுகாத்து, பறவையினங்கள் தங்களின் குடும்பத்தோடு வாழ வழிவகுத்த பொள்ளாச்சி சார் ஆட்சியருக்கு அறக்கட்டளை சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும், பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏதோவொரு காரணம் கொண்டு பலவருடங்களாக இருக்கும் மரங்களை வெட்ட பொதுமக்களை முன்னிறுத்தி அரசுக்கு கோரிக்கை வைக்கப்படுகிறது. மரங்கள் நிழல் தருவது மட்டுமல்ல, அனைத்து உயிர்களும் வாழ பிராண வாயுவை தருகிறது. மேலும் பறவைகளின் பசியைப் போக்கி அவைகள் வாழும் வீடாகவும் இருக்கிறது மரங்கள். இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் அத்தனை மரங்களையும் விதைத்த பறவைகள் தற்போது ஏதோவொரு வகையில் அழிந்து வரும்நிலையில், அவைகளை காக்கும் கடமையும் பொறுப்புணர்வும் நமக்கு இருக்கிறது. இதனைக் கருத்தில் கொண்டு பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மரங்களை வெட்ட அரசு அனுமதி வழங்க வேண்டாம்.

அதேபோல், மரங்கள் இருக்கும் இடத்தில் வீடுகள் இருப்பின், வீடுகள் மீது மரங்களின் கிளைகள் விழும்படி இருந்தால், மரத்தின் கிளைகளை மட்டும் வெட்டுவதில் எங்களுக்கு எந்தவொரு ஆட்சேபணையும் இல்லை. பசுமையாகவும் பறவைகளின் வீடாக இருக்கும் மரங்களை பாதுகாக்க அரசு முக்கியத்துவம் காட்டவேண்டும் என்பதை அறக்கட்டளை சார்பில் தாழ்மையோடு கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில், அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் மா.வெற்றிவேல், அறங்காவலர் எஸ்.முருகானந்தம், திட்ட ஆலோசகர் மற்றும் போக்குவரத்து விழிப்புணர்வு அமைப்பாளர் எம்.கமலக்கண்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

Want your business to be the top-listed Photography Service in Pollachi?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Website

Address


Pollachi
642001