Shri Ramanas ABC polytechnic college

Shri Ramanas ABC polytechnic college

Share

15/07/2024

Happy Birthday principal sir

கல்லூரி முடிச்சு 2012 வீட்ல இருக்கேன் ,எனக்கு இந்த வாத்தியார் மேல பெரிய ஈடுபாடு கிடையாது அதே சமயம் வேற எதும் பெரிய குறிக்கோளா இருந்த மாறியும் நியாபகம் இல்லை ..!!அப்பாவுக்கு நல்லா தெரிஞ்சுருக்கு எனக்கு வாத்தி வேலை தான் சரியா இருக்கும் னு நம்புனாரு,அது உண்மையும் தான் .

ஆகஸ்ட் மாசம் ஒருநாளு நேரா கூட்டீட்டு போயி மணிவண்ணன் sir ட்ட அறிமுகப்படுத்துனாரு தம்பிக்கு வேலை வேணும் சார் னு சொன்னாரு ,sir நாளைக்கே வரட்டும்னாரு நானும் அடுத்தொரு ரென்டு நாள்ல கிளம்பி போயிட்டேன் ..அப்ப படிச்ச பசங்க எல்லாம் என் வயசு என் வயசுக்கு மேல வகுப்புக்கு போறது பயமா இருந்தாலும் சர்பூதின் ,குமரவேல் ,ராஜசேகர்னு நல்ல நண்பர்கள் அமைஞ்சதாலும் பிரின்ஸ்பல் சாரோட அணுகுமுறைனால மட்டும் அந்த வேலைய தொடர முடிஞ்சது ..நானுமே சின்ன பையன் மாதிரி முடில கோடு போடுறது , வித்யாசமா உடையணியிறதுனு இருந்தேன் அதை ஆனா என்னையறியாமலே அவர் மூலமா தான் மாத்திகிட்டேன் ,அது தான் சிறந்த தலைமை பண்புக்கும் அடையாளம் நாம் விரும்புகிற மாற்றங்களை எதிர்தரப்பில் வெளிக் கொண்டு வருவது..அவரு நல்ல தலைவரு மட்டுமல்ல நல்ல முதலாளியும் கூட !!2012 வருசத்துல பல பல வருசமான பாலிடெக்னிக் கூட பத்தாயிரம் அடிப்படை சம்பளம் னு நிர்ணயிக்கவில்லை நாங்கள் வாங்கினோம் அடுத்த வருசமே சம்பள உயர்வு 12,500 ரூ!! அடுத்து நான் என்னோட முதுகலை பட்டப்படிப்பை முடிச்சு பட்டம் வாங்குவதற்குள்ளாகவும் 17500 சம்பளம் எந்த பாலிடெக்னிக்லயும் இப்படியொரு வாய்ப்பை உருவாக்கி கொடுகவில்லை .எனக்கு தெரிஞ்சு இந்த வேலை பார்த்த பல்லாண்டு பணி அனுபவம் உள்ள எவரும் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் இந்த சம்பளம் வாங்கவில்லை ...

என்னைய சுத்தி நான் நிறைய பேர்மேல கவனம் எடுக்க வேண்டியிருந்தது அப்பா உடல்நலமின்னை ,அம்மா ,அம்மாயி னு கொஞ்சமே பெருசு அதிகமாவே விடுப்பு எடுக்கிற நிலை எடுத்தேன் ..அடுத்தடுத்த குறிப்பிட்ட இடைவெளியில் இழப்புகளில் நானே கொஞ்சம் சுமையா வீட்ல இருக்கவுங்கள்ல உணர வச்சுட்டேன் !!அக்காலங்களில் சம்பள பிடித்தமோ ,கடுமையோ என எக்காலமும் பாதிக்கிற மாதிரி நடத்தியதில்லை ..எல்லோரையும் அவ்வாறாகதான் அணுகினார் தெரிந்தே சில பல ஏமாற்றங்களையும் அறிந்தே அனுமதித்தார் ..!!

கொரானா ,கணிணி துறையில் ஏற்பட்டிருக்கிற மாற்றம் என்று பாலிடெக்னிக் கல்லூரி தடுமாறிய காலம் எனக்குமே அடுத்தடுத்த பொருளாதார சுமைகள் மாற்றம் தேவையா உணர்ந்தேன் ,முயற்சித்தேன் குறுக்கிடவே இல்லை வாழ்த்துகள் மட்டும் சொன்னாரு ..எது வளர்ச்சினு நம்புகிறார்களோ அதை நோக்கிய பயணத்த தடுக்க கூடாதுன்ற எண்ணம் எல்லாருக்கும் அமைந்துவிடாது குறிப்பாக அதிகாரத்தில் அமர்ந்திரெப்பவர்களுக்கு அவருக்கு வருத்தம் இருந்தாலும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை ...

இது எதுவும் வேண்டாம் னு தன்னை வளப்படுத்திக் கொள்ள அத்தனை வழிகளும் ,நுணுக்கங்களும் ,தொழில் அனுபவமும் ,பழக்கவழக்கங்களும் பெற்ற நபர் ஆனால் இயங்கி கொண்டிருக்கிறார் ...எது அவரை இயக்கி கொண்டிருக்கிறது என்பதும் எனக்கு தெரியும் அவர் நல்லா இருந்தா படிச்ச பட்டதாரிகளோட முப்பது குடும்பங்கள் நல்லா இருக்கும் ,முந்நூறு பசங்க நம்ப கல்லூரி அடையாளத்தோட இருப்பாங்க அது தான் அதுவே தான்..அவருடைய குலையாத மன உறுதி பசிபிக் விட ஆழமானது எல்லாராலும் இயலாது ..

எங்க அப்பாவின் முகச்சாயலும் sir உடையது போன்றது தான்

Sir பிறந்த நாள் நல்வாழ்த்துகள்

04/03/2024

மாணவர்களின் தனித்திறன்களின் மேல் கவனம் செலுத்தும் திண்டுக்கல் மாவட்டத்தின் தலைசிறந்த ஒரே பல்வகை தொழில்நுட்பக் பாலிடெக்னி கல்லூரி shri Ramanas ABC polytechnic college .....

Want your school to be the top-listed School/college in Dindigul?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address


Palam Rajakkapatty
Dindigul
624622