Mullai
16/11/2025
எனக்கு கல்யாணம் ஆகி 13 வருஷம் ஆயிடுச்சு! நீங்க பாக்குற இந்த போட்டோ எங்க அப்பா வீட்டில் இருக்கும் போது மஞ்சள் நீராட்டு விழாவுக்கு எடுத்த போட்டோதான்! அப்ப கல்யாண போட்டோ இல்லையான்னு கேக்காதீங்க, அத ஒருநாள் காட்டுறேன், ஆனா இப்போ நா சொல்றத கேளுங்க! கல்யாணத்துக்கு ஆயிரம் சாமான சீர்வரிசையா எடுத்துக்கிட்டு வந்தேன், ஆனா இந்த போட்டோவை பார்க்கும் போதுதான் எனக்கு நல்லா புரியுது, நா எடுத்துட்டு வந்த எல்லா சாமானுமே பழசாயிடுச்சுன்னு! ஆனா, என் மனசும் என் காதலும் மட்டும்தான் இன்னும் புதுசாவே இருக்கு! அத இன்னைக்கும் என்னோட கணவர்க்கிட்ட காட்டும் போது, அவரு அவ்ளோ குஷியாயிடுவாரு! இருந்தாலும், இந்த 13 வருஷத்துல நிறைய சண்ட, நிறைய சந்தோஷம், நிறைய காதலுன்னு பல விஷயங்கள பாத்துட்டேன்! ஆனா இந்த போட்டோவை பார்க்கும் போது இந்த 13 வருஷத்துக்கு முன்னாடி எங்க வீட்ல நா அனுபவிச்ச சந்தோஷமெல்லாம் கண்ணு முன்னாடி வந்துட்டு போவும்! ஒரு பொண்ணுக்கும் பையனுக்கும் இதுதாங்க மிகப்பெரிய வித்தியாசம்! நீங்களே சொல்லுங்க? ஒரு பையன் தன்னோட வீட்டையோ, தன்னோட பொறந்த மண்ணையோ, அந்த ஊர்ல இருக்க நண்பரயோ, அவங்க குடும்பத்தில் இருக்கிற உறவினர்கலயோன்னு யாரையுமே பிரிய மாட்டாங்க! ஆனா, ஒரு பொண்ணுக்கு கல்யாணம் ஆயிடுச்சுன்னா, திடீர்னு அன்னக்கி ராத்திரியே பொண்ணு அழைப்புன்னு சொல்லி, அந்த பொண்ணுக்கானத எல்லாத்தையும் விட்டு பிரிஞ்சு வந்துடனும்! நா சொல்றது நடைமுறையா இருந்தாலும் இதுதான் விதி! அதனால, கட்டுனவன் காட்டுற பாசம் மட்டும்தான் அந்த பொண்ணு கடந்துவந்த பிரிவுக்கு மருந்து... ஆனாலும், இதுல எத்தனைப்பேரு மருந்தா மாறுறாங்கங்கறதுதான் கேள்வி!
24/10/2025
சாதியை வைத்து படமெடுக்கும் இயக்குனர்களுக்கு செருப்படி.!
கிட்டத்தட்ட 10 வருஷ நண்பர் ஒருத்தர், family friend, ஆனா அவர் wife சரியான ஏழைரை, நண்பரின் மனைவி குணம் தெரிஞ்சி நான் அவ்ளோவா அவங்க family கூட பழக மாட்டேன்.
ஆனா எனக்கும் என் நண்பருக்கும் நல்லா நட்பு இருந்திச்சி, அவர் குடி இருக்கும் வீடு ஏதோ பிரச்சனைனு, காலி பண்ணிக்கிட்டு, எங்க வீட்டுக்கு பக்கத்து தெருல குடி வந்தார், அது வரைக்கும் என்னனா என்னனு இருந்த எங்க ரெண்டு பேரு மனைவிமார்களும், வீடு பக்கத்து தெருல அவங்க குடி வந்த பிறகு ரொம்ப close ஆகிட்டாங்க.
என் பொண்டாட்டி அவங்களை ஆக்கா, ஆக்கானு கூப்பிடுறதும், நண்பர் மனைவி என் பொண்டாட்டிய வாடி போடினு உரிமையா கூப்பிடுறதும் அலப்பறை தாங்கல.
என் வீட்டம்மா கிட்ட சொல்லி வெச்சேன் நண்பரின் மனைவி சரியான சிலாவலி case, அவங்க கிட்ட உஷாரா பழகு, ரொம்ப நெருங்கி பழகாதேனு.
அப்போவே நண்பர் கிட்ட சொல்லி வெச்சேன், இந்த ரெண்டு பெண்களையும் ரொம்ப நெருக்கமா பழக விட்டா, கடைசில நாம ரெண்டும் பேரும் சண்டை போட்டுக்கிட்டு பேச முடியாம போயிடும், ரெண்டு பேரையும் கொஞ்சம் இழுத்து புடிக்கணும், நீங்க உங்க வீட்டம்மாவை control பண்ணுங்க, நான் என் வீட்டம்மாவை கொஞ்சம் control பண்றேன்னு சொல்லி வெச்சேன்.
நான் நினைச்சா மாதிரியே 6 மாசம் கூட தாங்கல அதுக்குள்ள ரெண்டு பெண்களுக்கும் முட்டிக்குச்சி.
ரெண்டு பெண்களுக்கும் சுத்தமா பேச்சி வார்த்தை இல்லை, ஆண்கள் நாங்க மட்டும் அப்போ அப்போ பேசிப்போம், எங்களுக்குள்ள எந்த மன கசப்பும் இல்ல.
இந்த சூழ்நிலைல என் நண்பர் land வாங்க ஒரு பார்ட்டியை கூட்டிகிட்டு வரார், அந்த வியாபாரத்தை முடிச்சா ஒரு 4 லட்சம் கிடைக்கும், நானும் நண்பரும் ஆளுக்கு வர காசை share பண்ணிப்போம்.
என் வீட்டம்மா என்ன சொல்றானா? ஒரு கோடி ரூபாய் வந்தா கூட அவங்க கூட்டிகிட்டு வர பார்ட்டி மூலமா வர காசு வேணாம், இந்த டீல் முடியலைன்னா கூட பரவாயில்லை, நீங்களே வேற பார்ட்டி பாத்து முடிங்க, அவங்க கூட்டிகிட்டு வர பார்ட்டி வேணாம்னு சொல்றா. ஏன் டி இப்படி சொல்றே? இதுல என்ன இருக்கு வியாபாரம் தானேனு கேட்டேன், அதுக்கு வீட்டம்மா என்ன சொல்றாங்கனா, என் புருஷன் தான் இந்த டீல் முடிச்சார், அதலான தான் அவங்களுக்கு காசு கிடைசிச்சினு ஊரு fulla சொல்லிக்கிட்டு திரியும் அந்த பொம்பள, அதனால இந்துஜா டீல் நமக்கு வேணாம்னு சொல்லுறாங்க.
நண்பர் மனைவி ஏழைறையா இருந்தா கூட காசு விஷயத்துல கில்லாடி, அவங்க கணவர் கிட்ட சொல்லி எப்படியாவது இந்த டீலை முடிங்கனு சொல்லி இருக்காங்க.
ஒழுங்கா நாங்க ஆண்கள் நண்பர்களா இருக்குற வரைக்கும் எந்த பிரச்சனையும் வந்தது இல்ல, இந்த ரெண்டு பெண்கள் பழகி சண்டை போட்டுக்கிட்டு, கடைசியா ஆண்கள் செய்யும் தொழிலில மூக்கை நுழைச்சி, இதை பண்ணு, இதை பண்ணாதேனுசொல்ற அளவுக்கு கொண்டு வந்து நிறுத்திட்டாங்க.
இந்த விஷயத்துல புத்திசாலி யார்? எப்படியாவது இந்த டீலை முடின்னு சொல்ற நண்பரின் மனைவியா? கோடி ரூபாய் வந்தாலும் அவங்க கூட்டிகிட்டு வர பார்ட்டி வேணாம்னு சொல்ற என் வீட்டம்மாவா?
16/07/2025
புடலங்காயை ஒரு மூலிகை என்பதை அறியாமலே பயன்படுத்தி வருகிறோம். இதில் உள்ள விதைகளை நீக்கி சதைப்பகுதியை மட்டும் பயன்படுத்தவேண்டும். புடலங்காயை பச்சை பயிறு சேர்த்து கூட்டாக செய்து தொடா்ந்து 12 நாட்கள் சாப்பிட்டு இடைவெளி விட்டு ஒரு மண்டலம் வரை சாப்பிட்டுவர மூல நோயின் தாக்கம் குறைந்து மூலம் கருகி விழுந்துவிடும்.
எடையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்புபவர்கள் புடலங்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வரவேண்டும். இதனால் உடலில் உள்ள தேவையற்ற உப்பு நீரை வியர்வை சிறுநீர் மூலம் வெளியேற்றும்.
அதிக உடல் சூட்டால் மஞ்சள்காமாலை நோய் ஏற்பட்டால் அவர்கள் புடலங்கொடியின் இலைகளை கைப்பிடி அளவு எடுத்து அதனுடன் அதே அளவு கொத்தமல்லி சேர்த்து 300மிலி தண்ணீரில் கொதிக்கவைத்து அந்த தண்ணீரை வடிகட்டி மூன்று வேளை குடித்து வந்தால் மஞ்சள்காமாலை கட்டுப்படும்.
இதய கோளாறு உள்ளவர்கள் புடலை இலையின் சாறு எடுத்து நாள்தோறும் 2 தேக்கரண்டிவீதம் வெறும் வயிற்றில் 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் இதயநோய்கள் அனைத்தும் நீங்கும்.
புடலையின் வேரை கைப்பிடி எடுத்து மைய அரைத்து சில துளிஅளவு வெந்நீரில் விட்டு குடித்து வந்தால் மலமிளகி வயிற்றில் உள்ள பூச்சிகள் வெளியேறும்.
புடலங்காயை பொறியல் செய்து சாப்பிட நரம்புகளுக்கு புத்துணர்வு கிடைக்கும். நினைவாற்றல் அதிகரிக்கும். நீரிழிவு உள்ளவர்கள் புடலங்காயை எந்த வகையிலாவது சேர்த்துவர அனைத்து வகையான சத்துக்களும் அவர்களுக்கு கிடைக்கும்.
கடும் காய்ச்சல் உள்ளவர்கள் வெட்டிய புடலங்காய் 250கிராம் எடுத்து 300மிலி தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி 200மிலி குடித்தால் ஒரே நாளில் காய்ச்சல் இயற்கையாக நீங்கும்....
24/06/2025
டாக்டர்: கணவன் உடம்பை சோதித்துவிட்டு "இன்னும் 8 மணி நேரம் தான் நீங்கள் உயிரோடு இருப்பீர்கள், அதற்குள் உங்களுக்கு பிடித்தமான விஷயங்கள் எல்லாத்தையும் செஞ்சிக்குங்க...."
மாலை 5 மணி : கண்ணீர் மல்க விஷயத்தை மனைவியிடம் பகிர்ந்தான் கணவன். துடித்தாள் அவள்.
கணவன்: எனக்கு உன் கையால வெங்காய தோசையும், கெட்டி சட்னியும் செஞ்சி குடும்மா இன்னும் 7 மணி நேரம் தான் பாக்கியிருக்கு.
மாலை 7 மணி : ராத்திரி சாப்பாட்டுக்கு மீன் குழம்பு வச்சி குடும்மா, இன்னும் 5 மணி நேரம் தான் நான் இருப்பேன்...
இரவு 10 மணி : நல்ல பசும்பாலில் உங்கையால கொஞ்சமா சக்கர போட்டு எனக்கு குடும்மா..இன்னும் மூணு மணி நேரம் தான் இருக்கு....!!!
இரவு 12 மணி : தூங்கும் மனைவியை எழுப்புகிறான்.
மனைவி : பேசாம படுங்க...காலைல எழுந்தவுடன் ஆயிரம் வேல இருக்கு. சொந்தகாரங்களுக்கு சொல்லி அனுப்பனும், ஐயருக்கு ஏற்பாடு பண்ணனும், சுடுகாட்ல புக் பண்ணனும். உங்களுக்கு காலைல எழுந்திருக்கிற வேலை கூட இல்ல.....!!
கணவன்: 👇👇👇👇😂😂😂😂😂
Click here to claim your Sponsored Listing.
Category
Telephone
Website
Address
Cuddalore