Dim3 Technology and Solutions
Dim3 is the perfect destination for the following:
- Software development
- Enterprise Resource Planning
- Web development and hosting
- Electronic devices design
- Renewable Source and ect...
Game Development For Dot Net
http://www.monogame.net
http://monogame.codeplex.com
போலியான ஆண்ட்டி வைரஸ் தகவல்கள்:
------------------------------------------------------------------------------
திடீரென நம் கம்ப்யூட்டரில் வைரஸ் தாக்கம் இருப்பதாகவும், உடனடியாக கம்ப்யூட்டர் முழுமையும் ஸ்கேன் செய்யப்பட வேண்டும் என பிரபலமான ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள், அல்லது நாம் பயன்படுத்தும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களின் நிறுவனங்கள் பெயரில் நமக்கு அஞ்சலில் செய்திகள் வரும். ஸ்கேன் செய்திட நம்மைத் தூண்டி, தயாராக யெஸ் பட்டன் ஒன்று தரப்படும். இதில் கிளிக் செய்தால், கம்ப்யூட்டர் ஸ்கேன் செய்யப்படுகிறது என்ற போர்வையில், வைரஸ் அல்லது மால்வேர் புரோகிராம் தன் முழு செயல்பாட்டினை மேற்கொண்டு, கம்ப்யூட்டரை முடக்கிவிடும். அல்லது, கம்ப்யூட்டரைப் பல வைரஸ்கள் பாதித்துள்ளதாகப் பட்டியலிட்டு, இவற்றை நீக்க, இன்னொரு ஆண்ட்டி வைரஸ் புரோகிராமினை வாங்கிக் கொள்ளுங்கள். விலை மலிவு தான் எனக் கூறி, அதனை வாங்கிட நீங்கள் சம்மதிக்கும் நிலையில், உங்கள் கிரெடிட் கார்ட், வங்கி அக்கவுண்ட் எண் ஆகியவற்றை வாங்கிக் கொள்ளும். பின் புதிய வைரஸ் புரோகிராம் பதியப்பட்டுள்ளதாகவும், வைரஸ்கள் அனைத்தும் நீக்கப்பட்டுவிட்டதாகவும் காட்டப்படும். ஆனால், உங்களிடம் இருந்து பெறப்பட்ட வங்கி மற்றும் கிரெடிட் கார்ட் பதிவுகளைப் பயன்படுத்தி, உங்கள் பணம் திருடப்படும். சில நாட்கள் இடைவெளியில்தான், பொதுவாக, நாம் வங்கிக் கணக்கினைப் பயன்படுத்துவதால், இந்த மோசடியை நாம் அறியும்போது, நம் பணம் மொத்தமாகத் திருடப்பட்டிருக்கும்.
இவ்வாறு நமக்குப் போலியான செய்திகள் காட்டப்பட்டால், உடனே கம்ப்யூட்டரில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் நம் பைல்களை சேவ் செய்து, இயக்கத்தை நிறுத்தி, மின்சக்தியையும் நிறுத்தவும். அடுத்து, கம்ப்யூட்டரை சேப் மோடில் இயக்கவும். நெட்வொர்க் மற்றும் இணைய இணைப்பினை நீக்கவும். அடுத்து, அண்மையில் நீங்கள் இன்ஸ்டால் செய்த புரோகிராம் அல்லது புரோகிராம்களை உடனடியாக அன் இன்ஸ்டால் செய்திடவும். அவற்றின் வழியாகத்தான் இந்த மால்வேர் அல்லது வைரஸ் புரோகிராம் கம்ப்யூட்டருக்குள் நுழைந்திருக்கும். இந்த புதிய புரோகிராம்களை நீக்கிய பின்னர், கம்ப்யூட்டரை ரெஸ்டோர் பாய்ண்ட் ஒன்றுக்குக் கொண்டு சென்று இயக்கவும். ரெஸ்டோர் செய்யப்படும் நாள், இந்த புதிய புரோகிராம்களை இன்ஸ்டால் செய்த நாளுக்கு முன்பிருந்தால் நல்லது. ரெஸ்டோர் செய்த பின்னர், வழக்கம் போல கம்ப்யூட்டரை இயக்கி, நீங்கள் பயன்படுத்தும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் மூலம், கம்ப்யூட்டரை ஸ்கேன் செய்திடவும். மால்வேர் புரோகிராமின் மிச்ச மீத நச்சு நடவடிக்கைகளுக்கான பைல்கள் இருப்பின் அவை கண்டறியப்படும். அவற்றை நாம் அழித்துவிடலாம்.
தேவையற்ற பிரவுசர் டூல்பார்கள்
-----------------------------------------------------------------
நம் பிரவுசரில் திடீரென நாம் இன்ஸ்டால் செய்திடாமலேயே, புதிய டூல்பார்கள் காட்சி அளிக்கும். நாம் “இது எப்படி வந்தது?” என்ற எண்ணத்துடன், அவற்றை அலட்சியப்படுத்தித் தொடர்ந்து செயல்படுவோம். இந்த டூல் பார்கள், நல்லதொரு நிறுவனத்தின் உண்மையான புரோகிராம் என்பதை உங்களால் உறுதிப்படுத்திக் கொள்ள முடியும் என்றால், அது உங்களுக்குத் தேவை எனில், தொடர்ந்து வைத்துக் கொண்டு பயன்படுத்தவும். இல்லை எனில், அதனை உடனடியாக, முழுமையாக நீக்குவதே நல்லது. ஏனென்றால், இதுவும் மால்வேர் புரோகிராமின் ஒரு அவதாரமாகவே இருக்கும். பொதுவாக, டூல்பார்களை நீக்க அனைத்து பிரவுசர்களும் வழிகளைக் கொண்டுள்ளன. அவற்றை இயக்கி, இன்ஸ்டால் செய்யப்பட்ட டூல் பார்களில் இது இருந்தால், உடனடியாக நீக்கவும். ஆனால், பட்டியலில் இது இல்லை என்றால், நிச்சயம் இது மால்வேர் என்பது உறுதியாகிறது. மற்ற வழிகள் மூலம் இதனை நீக்கலாம்.
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Website
Address
Tatabad
Coimbatore
641027