Adrushya Foundation

Adrushya Foundation

Share

23/02/2024

மேடம் நல்லா இருக்கீங்களா... உமாவின் உற்சாக குரல் அந்த மதிய வேளைக்கு அழகிய வர்ணம் சேர்த்தது...

சொல்லுமா எப்படி இருக்க. குழந்தை நல்லா இருக்கானா, வீட்டுகாரர் நல்லா இருக்காரா... வீட்டில பெரியவங்க எல்லாரும் சௌக்கியமா என்றேன்...

All well மேடம்... சார், பாப்பா எல்லாரும் சௌக்கியமா என்றார் உமா... ( எத்தனை வயதானாலும் வீட்டு பெண் குழந்தைகளை பாப்பா என்று அழைக்கும் வழக்கம் கோவை மக்களிடம் நான் விரும்பும் பண்பு )

அப்புறம் சொல்லுமா என்றேன்...

மேடம் கவிதா மேடம் இறந்துடாங்க என்றார்...

என்னமா சொல்றே. அவங்களுக்கு 60 வயசு தானே இருக்கும். எப்படிமா என்றேன்...

Colon cancer போல மேடம். வயத்து வலிய சொல்ல கூட சொந்தங்கள் பக்கத்துல இல்ல. தனியா தானே மேடம் இருந்தாங்க, குழந்தைகளும் கிடையாது, வீட்டுக்காரும் இல்ல. பாவம் மேடம் என்றார்.

எனக்கு யாரோ சம்மட்டியால் என் மனதை பிளப்பதை போல் தாங்க முடியாத வேதனை.

கவிதா மேடம் ஒரு சமயம் என்னிடம், மேடம் எதுக்கு மேடம் வாடகை வீட்டில் தனியா இருக்கீங்க என் கூட நம்ம வீட்டுல இருக்கலாம் இல்ல என்றார். உண்மையில் மிக மிக பெரிய வீடு அது.

நானும் அதை ஒரு உபசார வார்த்தை என்று எண்ணி, பாக்கலாம் மேடம். சார், பாப்பா வந்தா தங்க சரிப்படாது... நான் உங்க வீட்டுக்கு அடிக்கடி வரேன் மேடம். நாம ஸ்கூட்ட்டர்ல எங்கயாவது போலாம் மேடம் என்றேன். அதே போல் பல கோவில்களுக்கு சென்று வந்தோம்.

பின்னர் அவருடைய சில உறவினர்கள் அவருடன் வந்து தங்கினர். இருந்தாலும் பிள்ளை இல்லாத சொத்து. வீட்டில் தங்கி அவர் காலத்திற்கு பின்னர் அனுபவிக்கும் நோக்கம் தான் அவர்களுக்கு பிரதானமாக இருந்தது... பலமுறை சொல்லி வருத்த பட்டு இருக்கிறார்.

என்ன செய்வது காலம் நாட்களையும் மாதங்களையும் உருட்டி கொண்டே சென்று விட்டது...

இத்தனை நினைவுகளும் வந்து என்னை மிக மிக வதைத்தது... அவருக்கு என் இருப்பு ஒரு பாதுகாப்பு உணர்வை தந்து இருந்து இருக்கிறது... என் அருகாமையை விழைந்து இருக்கிறார். அதை செயல் படுத்த முடியாமல் போய்விட்டது..

(என் வாழ்வின் உண்மை சம்பவம், பெயர்கள் மாற்ற பட்டு உள்ளது )

உமா, கவிதா சிஸ்டர் பற்றி சொன்ன அந்த நொடி முடிவு செய்தேன். யாரோ தனிமையில் இருக்கும் ஒருவரின் ஆதரவாய் நான் இருக்க வேண்டும்..

அதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

முனைந்து செயல் பட்டேன். அத்ருஷயாவை துவங்கினேன்.

இதோ நாளையோடு இரண்டு வருடங்கள் பூர்த்தி ஆகிறது...

கவிதா மேடம் போன்று தனித்தவர்கள், ஒற்றை பெற்றோர், திருமணம் ஆகாதவர்கள், விவாகரத்தில் தனிமையானவர்கள், குழந்தை பேறு இல்லாதவர்களுக்கு எங்களால் ஆன உதவிகள் செய்வது தான் அத்றுஷயாவின் நோக்கம்.

Adrushya works for Senior Welfare with 4 core objectives... Embrace, Engage, Empower and Excel. We have programs with these guiding values.

நாளை single parent பெண்மணி ஒருவரின் மகள், 577/600 மதிப்பெண் வாங்கிய அந்த கெட்டிகார பெண் குழந்தைக்கு எங்களால் இயன்ற அளவு உதவி தொகை வழங்க உள்ளோம்.

நீங்களும் எங்களுடன் இணையலாம். உங்களால் ஆன சிறு தொகையை donate செய்யலாம். 80G tax exemption certificate வழங்குகிறோம்....

வாருங்கள் சேர்ந்து பயணிக்கலாம். மற்றவர் தனிமை துயரை துடைக்கலாம்.

It is a small life, let us together live it with a Biggggg smile 😊🙏🙏

Adrushya Foundation

Want your organization to be the top-listed Non Profit Organization in Coimbatore?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address


54/4, Kumaran Avenue, Phase 2, Vadamadurai
Coimbatore
641017