Insurance Service Center
*முக்கிய அறிவிப்பு*
* ஒரு உறவினர், அல்லது அறிமுகமானவர் குடும்பத்தில் அண்மையில் மரணம் அடைந்தால். இது ஏதேனும் காரணம், நோய் அல்லது கோவிட் -19 காரணமாக இருந்தாலும், வங்கிக் கணக்கு விவரங்களைப் பார்க்கச் சொல்லுங்கள்.
பாஸ்புக் பதிவில் 2019 ஏப்ரல் 01 முதல் 2020 மார்ச் 31 வரை வங்கி ரூ .12 / - அல்லது ரூ .330 / - கழித்திருந்தால், அதைக் குறிக்கவும்! மேலும் இறந்தவரின் உறவினர்களிடம் வங்கிக்குச் சென்று இரண்டு லட்சம் ரூபாய்க்கு காப்பீட்டுத் தொகைக்கான உரிமைகோரலைச் சமர்ப்பிக்கச் சொல்லுங்கள்!
உங்களைச் சுற்றி இதுபோன்ற சம்பவம் நடந்திருந்தால், 90 நாட்களுக்குள் இந்த காப்பீட்டைக் கோருமாறு பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கோ அல்லது அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கோ உடனடியாகத் தெரிவிக்க வேண்டும், முடிந்தால் அவர்களும் இந்தப் பணியில் ஒத்துழைக்க வேண்டும் என்பது உங்கள் அனைவருக்கும் ஒரு தாழ்மையான வேண்டுகோள்.
2015 ஆம் ஆண்டிலிருந்து, பெரும்பாலான மக்கள் வங்கிகளின் ஒவ்வொரு சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கும் இரண்டு மலிவு காப்பீட்டுத் திட்டங்களை இந்திய அரசு வழங்கியது: - 1 - பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பிமா யோஜனா (பி.எம்.ஜே.ஜே.பி.ஒய்) ரூ .330 / - மற்றும் 2 - பிரதான் மந்திரி ஸ்வஸ்திய சுரக்ஷா பீமா யோஜனா (பி.எம்.எஸ்.பி.ஒய்) 12 / - ரூபாயில். பெரும்பாலான மக்கள் இந்த படிவத்தை வங்கியாளர்களால் பூர்த்தி செய்துள்ளனர்,
மேலும் இந்த இரு காப்பீட்டின் வருடாந்திர தவணையும் ஒவ்வொரு ஆண்டும் நமது சேமிப்புக் கணக்கிலிருந்து கழிக்கப்படுகிறது. இந்த செய்தியை பரப்ப உதவுங்கள். இந்த ஒருங்கிணைந்த முயற்சியின் மூலம், துக்கப்படுகிற குடும்பத்திற்கு "இரண்டு லட்சம்" ரூபாய் நிதி உதவி கிடைக்கும்.
💐
காலம் கண் போன்றது.
கடமை பொன் போன்றது
--------------------------------------
குழந்தைகள் தினம்!
தினமும் குழந்தைகள்
மகிழ்ச்சியாக இருக்க
வேண்டும்.
சொன்னதால்
ஒருநாள் கொண்டாட்டம்!
சொல்லாமலே
தினசரி கொண்டாட்டம்!
கொண்டாட்டம் முக்கியமா?
அவர்கள் திண்டாட்டம் இல்லாமல்
இருக்க வகை செய்வது
கொண்டாட்டமா?
நாம் இருந்து
கொண்டாடுவது மகிழ்ச்சி!
ஆனாலும்
நாம் நேசித்த குழந்தைக்கு
நாம் விரும்பிய வாழ்க்கை
அமைய
அமைதியா
யோசியுங்க!
இன்றே
குழந்தைக்கு ஒரு
நீண்ட கால
நிதி ஆதாரம் திட்டமிடுங்கள்!
இதெல்லாம் ஒரு
வாய்ப்பு.
தீபாவளிக்கு புத்தாடை, பட்டாசு
பொங்கலுக்கு கரும்பு, பச்சரிசி
அதுபோல குழந்தைகள் தினத்தில்
அவர்களின் எதிர்காலத்திற்கு
ஒரு திட்டம்.. ஏன் கூடாது?
நெல் பயரிடுவது போல் அல்ல
தென்னை, தேக்கு பயிரடுவது போல்.
உங்கள் பெயரில்
ஒரு பாலிசி
குழந்தை பெயரில்
சேமிப்பு.
ஏதோ ஒன்று
இன்றே பரிசாக அளியுங்கள்.
அதுவே சிறந்த கொண்டாட்டம்.
அன்பை வெளிக்காட்ட
உயர்ந்த வழி இதுவே!
ஒருநாள் இனிப்பு,
ஒருநாள் சினிமா
ஒரு நாள் ஆடை அல்ல
வாழ்க்கை!
என்றும் இனிப்பு
என்றும் இன்பம்
என்றும் மகிழ்ச்சி
என்றும் கொண்டாட்டம்
அதுவே வாழ்க்கை.
திட்டமிடு
திட்டமிடா வாழ்க்கை
இலக்கில்லா பயணம் போல்!
கண்ணீர் வேண்டாம்,
ஆனந்தக் கண்ணீர் வேண்டும்!
திட்டமிடா உழைப்பு
கோல் போஸ்ட் இல்லாத
கால்பந்தாட்டம் போல்!
சேமிப்பை
எறும்பிடமும்
தேனீயிடமும்
கற்றுக்கொள்.
அன்பின் சின்னம்
ஆயுள் இன்ஷூரஸ்.!
இன்றே எடுங்கள்
ஆண்டு பிரிமியமாக...
ஒவ்வொரு ஆண்டும்
மறக்காமல் பிரிமியம்
கட்டலாம்... இந்த தேதியில்
Not only Life Insurance,
But also Love Insurance..
(நன்றி வெற்றி நிச்சயம்
விசு)
"வருடம் தவறாமல் குழந்தைகள் தினம் கொண்டாடுபவர்களே "
"தினங்களை விட்டு விட்டு குழந்தைகளை எப்போது கொண்டாடப் போகிறீர்கள்?"
- கவிக்கோ அப்துல் ரகுமான்
இன்ஷூரன்ஸ்...நம்ம ஊரில்
சில யதார்த்த உண்மைகளை இங்கே
குறிப்பிட்டுள்ளேன்.. படித்து,
உணர்ந்து, மற்றவர்களிடமும்
உணர்த்துங்கள்...
1--நாம் நமது குழந்தைகளின் எதிர்காலம், கல்வி, கல்யாணம் போன்றவைகளுக்காக தங்கம் வாங்குவோம், ஆனால் அவர்கள்
எதிர்காலத்துக்காக, என்றும் தங்கமாக தங்கும் ஒரு குழந்தைகள்
பாலிசி எடுக்க யோசிப்போம்..
2-- இன்ஷூரன்ஸ் முகவரைக் கண்டால்,
பயப்படுகிறோமே தவிர, அவர் நமது
நல் வாழ்விற்காக, நம்மை பாதுகாக்கும்
நல்ல திட்டங்களை சொல்பவர் என்ற
எண்ணம் மட்டும் வருவதில்லை.
3---பல ஆயிரங்கள் மதிப்புள்ள
நமது மொபைலுக்கு screen guard
வாங்கி அதை காப்பாற்ற நினைக்கும்
நாம், பல கோடி மதிப்புள்ள நமது
ஆயுள் மீது இன்ஷூரன்ஸ் எடுக்கத்
தயங்குகிறோம்..
4---நமது காலணியை பாதுகாக்க
5 அல்லது 10 ரூ கொடுக்கிறோம்..
ஆனால் நமது ஆயுள் மீது காப்பீடு
எடுக்க ஒரு நாளைக்கு 50 ரூ கூட
கொடுக்கத் தயங்குகிறோம்.
நம்ம வாழ்க்கைக்கு கொடுக்கற
முக்கியத்துவம் இவ்வளவுதானா?
5---அரசாங்க ஊழியர்களுக்கு
ஓய்வூதியம் இருப்பதைப் பார்த்து
ஏங்குகிறோம்.. ஆனால் நமக்கும்
ஓய்வூதியம் வேண்டும் என்ற
ஏக்கத்தை ஒரு பாலிசி எடுப்பதன்
மூலம் வழிவகை செய்ய யோசிக்கிறோம்..
6---மின்சாரம் போய்விட்டால்,
வீட்டில் வெளிச்சம் வேண்டும் என்ற
முன்னெச்சரிக்கையில் இன்வெர்ட்டர்
வாங்கி வைக்கிறோம்... ஆனால்
குடும்ப வெளிச்சம் உங்களை
நம்பித்தான்.. உங்கள் குடும்பத்தில்
என்றும் வெளிச்சம் வர இன்ஷூரன்ஸ்
என்ற இன்வெர்ட்டர் அவசியம் என்பதை
உணர மறுக்கிறீர்கள்.
7---நமது உயிருக்கும் மேலான நமது
மகளை அதுவரை அறிந்திராத
நபருக்கு மணமுடிக்க தயங்குவதில்லை... ஆனால் நமக்கு நன்கு அறிமுகமான
முகவர் நமது நன்மைக்காக எடுக்கச்
சொல்லும் காப்பீட்டு பற்றி மிகவும்
தயங்குகிறோம்.. ஏன்?
8--எதிர்காலம் எப்படி இருக்கும் என்று
சாமியார்கள், ஜோதிடர்கள் சொல்வதை " Magic" போல நம்புகிறோம்.. ஆனால்
"logic" க்காக நமது முகவர் சொல்லும்
உண்மையான விஷயங்களை ஏற்க
மறுக்கிறோம்.
9---என் மதம், என் கடவுள், என் சாதி
என்று ஒருவொருக்கொருவர்
சண்டையிடுகிறோம்.. ஆனால்
இறப்பு என்பது எல்லோருக்கும்
எப்ப வேணும்னாலும்
வரும் விதி என்பதை மறக்கிறோம்.
10---குடும்பத் தலைவர் திடீரென
இறந்தால், அவருக்கு மட்டும் அல்ல,
அவர் வாங்கிய சம்பளம் கடைசி என்பது.. அவரது குடும்பத்தினர்க்கும்... ஆனால்
அவர்கள் மறுநாள் முதல் அன்றாடம்
வாழ்ந்தாக வேண்டும்.. உங்கள்
ஆயுள் காப்பீடு மட்டுமே,
உங்கள் இழப்பை ஈடு செய்ய உதவும்.
11--உங்கள் வங்கி கணக்கில் பேலன்ஸ்
எவ்வளவு என்று உங்களுக்கு தெரியும்..
உங்கள் மொபைல் கார்டில் பேலன்ஸ்
எவ்வளவு என்று உங்களுக்கு தெரியும்.
உங்கள் வாழ்க்கை கார்டில்
எவ்வளவு பேலன்ஸ் என்று
யாருக்குத் தெரியும்?
ஆயுள் காப்பீடு கொண்டு
ரீசார்ஜ் செய்வதே உன்னதம்.
ஆயுள் காப்பீடு பயந்து
எடுக்க வேண்டாம்...
ஆயுள் காப்பீடு விரும்பி
எடுக்க வேண்டும்..
ஆம்..
உங்கள் குடும்பத்தை
விரும்பி, அன்பினால்
எடுக்க வேண்டும்..
நாங்கள் கட்டாயப் படுத்தி
எடுப்பதல்ல,
நீங்கள் கட்டாயமாக
எடுப்பது.
அன்பின் சின்னம்
ஆயுள் இன்ஷூரன்ஸ்.
வெற்றி நிச்சயம்..
(நன்றி திரு.
விசு அய்யா..)
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
14 Thambusamy Nagar Opp BSNL Exchange. , Whaatsapp:7358520220
Chennai
600077
Opening Hours
| Monday | 9am - 8pm |
| Tuesday | 9am - 8pm |
| Wednesday | 9am - 8pm |
| Thursday | 9am - 8pm |
| Friday | 9am - 8pm |
| Saturday | 9am - 8pm |
| Sunday | 9am - 8pm |