Smart Mobile Service

Smart Mobile Service

Share

12/01/2017

இளம் தம்பதி புதிதாக ஒரு இடத்திற்குக் குடி போனார்கள்.

அதிகாலை காபி குடித்தபடி ஜன்னல் வழியே இருவரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

பக்கத்து வீட்டுப் பெண்மணி துவைத்து விட்டு துணிகளை உலர்த்திக் கொண்டிருந்தாள்.

பார்த்துக் கொண்டே இருந்த மனைவி சொன்னாள்,

“அந்தம்மாவிற்குத் துவைக்கவே தெரியவில்லை போல் இருக்கிறது. துணியில் அழுக்கே போகவில்லை பாருங்கள்”

கணவனும் பார்த்தான்.

ஆனால் பதில் எதுவும் சொல்லவில்லை.

தினமும் அவர்கள் எழுந்து காபி குடிக்கும் நேரமும், பக்கத்து வீட்டுப் பெண்மணி துவைக்கும் நேரமும் ஒன்றாகவே இருந்ததால் மனைவி தினமும் அடுத்த வீட்டு சலவை சரியில்லாதது பற்றி தினமும் சொல்லிக் கொண்டேயிருந்தாள்.

திடீர் என்று ஒரு நாள் பக்கத்து வீட்டுப் பெண்மணி துவைத்து உலர வைத்த போது பளிச்சென்று சுத்தமாக உலர்வதைப் பார்த்த மனைவி சொன்னாள்,

“அப்பாடா, இப்போது அந்தம்மாள் துவைக்கக் கற்றுக் கொண்டு விட்டாளா..?

இல்லை நல்ல சோப்பை பயன்படுத்த ஆரம்பித்து விட்டாளா என்று தெரியவில்லை...

இன்று தான் துணிகள் பளிச்சென்று சுத்தமாக இருக்கின்றன..”

கணவன் அமைதியாகச் சொன்னான்,

“இன்றைக்கு அதிகாலையில் தான் நான் நம் வீட்டு ஜன்னல் கண்ணாடிகளைச் சுத்தம் செய்தேன்”

இப்படித்தான் நாட்டில் நடக்கின்றன.
நம் வீட்டுக் கண்ணாடி சுத்தமில்லாத போது அடுத்தவர் வீட்டுத் துணிகள் அழுக்குப் படிந்தே காட்சி அளிக்கின்றன.

ஆனால் நாம் நம் வீட்டுக் கண்ணாடியை சந்தேகிப்பதே இல்லை.

ஒருவேளை அடுத்தவரிடம் உண்மையாகவே குறைகள்
இருந்தாலும் கூட அவை உடனடியாக நம்மால் கவனிக்கப்படுகின்றன.

அதற்கு ஏதாவது நியாயமான காரணம் இருக்கலாம் என்று கூட நம்மால் யோசிக்க முடிவதில்லை...

Photos 08/01/2017

உங்கள் பக்கத்தில் இருப்பவர் யார்?

நள்ளிரவில் 120 கி.மீ வேகத்தில் சென்று கொண்டிருந்த கார் திடிரென்று நின்றது. டிரைவர் சீட்டுக்கு பக்கத்து சீட்டில் உட்கார்ந்து தூங்கிக் கொண்டிருந்த என் நண்பரை டிரைவர் தட்டி எழுப்பினார், “சார் பின்னாடி போய் உட்காருங்க. நீங்க தூங்கி தூங்கி வழியறத பார்த்தா எனக்கும் தூக்கம் வருது”.
தூங்கிக்கொண்டிருந்த நண்பர் பின்னால் உட்கார்ந்து, விட்ட தூக்கத்தை தொடர ஆரம்பித்தார். என்னால் தான் தூங்க முடியவில்லை. டிரைவர் சொன்ன வார்த்தைகளைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தேன்.

பல நேரங்களில் நம் செயல்பாடுகள் கூட நம் பக்கத்தில் இருப்பவரை பொறுத்துத்தான் இருக்கிறது. சுறுசுறுப்பான மனிதர்கள் அருகில் இருக்கையில் மெள்ள அந்த சுறுசுறுப்பு நம்மையும் தொற்றிக் கொள்கிறது. சோம்பேறிகள் பக்கத்தில் இருக்கும்போது மெல்ல மெல்ல அந்த சோம்பேறித்தனம் ஒட்டிக்கொள்கிறது. இந்த லாஜிக்கால் தான் தூங்குபவரை பக்கத்தில் வைத்துக்கொள்ள டிரைவர் விரும்பவில்லை.
எனவே முன்னேற விரும்பினால் நீங்களும் யோசியுங்கள், உங்கள் பக்கத்தில் இருப்பது யார்? உற்சாகமானவரா? சுறுசுறுப்பானவரா? நம்பிக்கையானவரா? விரக்தி எண்ணம் உள்ளவரா? இடித்துரைக்க, எடுத்து சொல்ல நல்ல மனிதர்களை தன் அருகில் வைத்துக் கொள்ளாததாலேயே வீழ்ந்தவர்கள் பலர். மிகப் பெரிய வணிக சாம்ரஜ்யங்களை ஆண்டவர்கள் தங்கள் பக்கத்தில் இருந்த தவறான நபர்களால் வீழ்ந்திருக்கிறார்கள். எனவே உங்களுக்கும் உங்கள் வெற்றிக்கும் இருக்கும் தொடர்பை போலவே உங்கள் அருகில் இருப்பவருக்கும் கூட தொடர்பு இருக்கிறது.

லட்சியம் இல்லாதவர்களை நண்பர்களாக ஏற்காதீர்கள். லட்சியமும் அதை அடையவேண்டும் என்று எப்போதும் துடிப்பவர்களாக தேடி நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள். உங்கள் அருகில் உள்ளவர்களால் நீங்கள் உற்சாகம் பெருவதைப் போலவே உங்களைப்பார்த்து மற்றவர்களும் எழுச்சி பெற வேண்டும் என்று நினையுங்கள். எல்லோரையும் ஊக்கப்படுத்துங்கள். உங்கள் அருகில் இருக்கும் அனைவரும் உற்சாகம் அடைந்தால் உங்களின் அருகாமையினை அனைவரும் விரும்புவார்கள்.

கொஞ்சம் கண்ணைத்திறந்து பாருங்கள். உங்கள் பக்கத்தில் இருப்பது யார்? யாராக இருந்தாலும் ஒன்று உங்களை உற்சாகப்படுத்து பவராக இருக்க வேண்டும் அல்லது உங்களால் உற்சாகம் பெறுபவராக இருக்க வேண்டும்

Photos 07/01/2017

#குட்டிக்கதை

"குருவே என்னால் வாழ்கையில் முன்னேற முடியவில்லை.'' என்று சலிப்புடன் சொன்னவனை நிமிர்ந்து பார்த்தார் குரு.
"வருத்தப்படாதே,
என்ன பிரச்சனை?" என்று கேட்டார் குரு.
"என்னைப் பற்றி குறை கூறுபவர்கள் அதிகரித்து விட்டார்கள். அவர்களை எப்படி சமாளிப்பது என்று எனக்குத் தெரியவில்லை. என்றான் வந்தவன்.
வந்தவனின் பிரச்சனை குருவுக்குப் புரிந்தது.

அவனுக்கு ஒரு சம்பவத்தைச் சொல்ல ஆரம்பித்தார்.
"அமெரிக்காவில் பரப்பரப்பான நகரில் ஒரு டாக்ஸியில் இந்தியர் ஒருவர் பயணித்துக் கொண்டிருந்தார். காலை நேரம். நிறைய போக்குவரத்து. சிரமப்பட்டுதான் வண்டி ஓட்ட வேண்டியிருந்தது.

பல இடங்களில் வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதுவது போல் வந்தன. ஆனால் டாக்சி ஓட்டுனர் கொஞ்சமும் பதட்டப்படவில்லை.
இப்படி சுமூகமாக பயணித்துக் கொண்டிருந்தபோது ஒரு திருப்பத்தில் இன்னொரு கார் ஒன்று குறுக்கே வந்துவிட்டது.

இரு கார்களும் மோதுவது போல் சென்று மெல்லிய இடைவெளியில் இடிக்காமல் தப்பின. தவறு எதிரில் வந்தவனுடையதுதான்.
இருந்தாலும் ஆத்திரத்தில் டாக்சி ஓட்டுநரைத் திட்டினான்.
ஆனால் ஆச்சர்யம்!
பதிலுக்கு டாக்ஸி ஓட்டுனர் அவனை திட்டவில்லை. அவனைப் பொருட்படுத்தாமல் வண்டியை செலுத்தினார்.

இதே போல் இன்னொரு சம்பவம்.
அதிலும் டாக்ஸி ஓட்டுனர்,
பொறுமை இழக்கவில்லை.
ஆத்திரப்படவில்லை. நிதானமாக இருந்தார்.
இதையெல்லாம் பார்த்த இந்தியருக்கு வியப்பு.
இறங்க வேண்டிய இடம் வந்தபோது ஓட்டுனரிடம் கேட்டார்.

"எப்படி இவ்வளவு பொறுமையாய்,
யாருடைய திட்டுக்கும் பொருட்படுத்தாமல் வண்டி ஒட்டுகிறீர்கள்?"
அதற்கு அந்த டாக்ஸி ஓட்டுனர்,
"என்னுடைய இலக்கு உங்களை நீங்கள் சேரவேண்டிய இடத்தில் சேர்ப்பது.
வீதியில் போவோர் அள்ளிக் கொட்டும்
குப்பைகளையெல்லாம் என் மனதில்
சேர்த்துக்கொள்ளவில்லை.
அதையெல்லாம் பொருட்படுத்தி ஆத்திரப்பட்டு
பதில் சொல்லிக்கொண்டிருந்தால்
நாம் போய் சேர வேண்டிய இடத்தை அடைய முடியாது."

இந்தச் சம்பவத்தை குரு சொன்னதும் தான் செய்ய
வேண்டியது என்ன என்பது வந்தவனுக்கு புரிந்தது.

#அன்பு #நண்பர்களே,

நமக்கு இலக்குதான் முக்கியமே தவிர இடையில் வரும்,கொஞ்ச நஞ்ச இடைஞ்சல்கள் அல்ல.

Want your business to be the top-listed Computer & Electronics Service in Chennai?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address


24#Lake View Street, Nesapakkam, West KK Nagar
Chennai
600078