Group Admin
வியாழன் பதிவு...🙏🙏🙏
#வருங்காலம்_உனக்கு_நிச்சயம்_சிறப்பாக_இருக்கும்
உனக்கென்று விதிக்கப்பட்டது, நிச்சயம் உன்னை வந்து சேரும். அதைப் புரிந்து கொள். உன் உழைப்பு என்றும் வீணாகாது...
வாழ்வில் உனக்கு லட்சியமும் அதை அடைய வேண்டும் என்ற எண்ணமும், பொறுப்பும் கண்டிப்பாக இருக்க வேண்டும். அதேசமயம் எதையும் ஏற்றுக் கொள்ளும் பக்குவமும் அவசியம் வேண்டும்.
இந்த வாழ்க்கை எனக்கு வேண்டாம் என்று சொல்லும் அளவிற்கு அனுதினமும் எதாவது ஒரு கஷ்டம் எனக்கு மட்டும் வந்து கொண்டு இருக்கிறதே என்று புலம்பாதே..
நான் உனக்கு பலமுறை கூறிவிட்டேன் இவ்வுலகில் உள்ள அனைவருக்கும் இது போன்ற நிகழ்வுகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றது.
உனக்கு பெரிதாக தெரியும் பிரச்சினை மற்றவருக்கு சிறிதாக படும்.
உனக்கு சிறிதாக இருக்கும் பிரச்சினை மற்றவருக்கு தலையாய பிரச்சினையாக இருக்கும்.
உன்னுள் இருக்கும் பலத்தை நீயே நம்பவில்லை எனில் வேறு யார் நம்புவது.
நம்பிக்கையோடும் மன தைரியத்தோடும் நீ நிதானமாக யோசித்து செயல்படு. உன் காரியம் நிச்சயம் கைகூடும்.
நிகழ் காலம் உனக்கு கடினமாக இருந்தாலும் இதுவே நிரந்தரமென்று நினைத்துக் கொள்ளாதே...
நிலைகள் மாறும். காலம் மாறும்.. உன் அம்மா அப்பாவாகிய இந்த சாய்பாபா மாற்றுவேன்.
நீ எல்லா செல்வ வளங்களைப் பெற்று நற்பெயருடன் நிம்மதியான வாழ்க்கையை வாழ்வாய்.
கலங்காதே அப்பா நான் இருக்கிறேன் நிழலாக என்றும் உனக்காக நீ செல்லும் இடமெல்லாம்...
உனக்கு எல்லா சூழ்நிலைகளிலும் நான் துணை நிற்பேன்.
என் வார்த்தைகள் மீது நம்பிக்கை வைத்து செயல்படு...
நல்லதே நடக்கும்..!
என் பரிபூரண அருளும் ஆசிர்வாதமும் அன்பும் பெற்ற என் பிள்ளை
Om sri sai ram..🙏🙏🙏🕉️🕉️🕉️💐💐💐
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the place of worship
Website
Address
Chennai