C.Jagan DMK

C.Jagan DMK

Share

14/04/2026

*24 மணி நேரத்திர்குல் உயர்த்தப்பட்ட குடிநீர் வரி செயலாக்கம் திரும்பப்பெறப்பட்டது*

வீட்டின் சதுர அடி பரப்பளவின் அடிப்படையில் குடிநீர் வரியை உயர்த்தும் நடைமுறை, தமிழ்நாடு முழுவதும் பொதுவான வரி விதிப்பு முறையை மாற்றியமைப்பதன் மூலம் அமல்படுத்தி உள்ளதை *தாம்பரம் மாநகராட்சி 43-வது வார்டு மாமன்ற உறுப்பினர் சி.ஜெகன்* அவர்கள் தகவல் அறிந்து பலரிடம் விவாதித்து, நீண்ட உரையாடல்களையும் மேற்கொண்டு இருந்தார். மாநகராட்சி மன்றத்தில் இது குறித்த எந்தவிதமான ஒப்புதலோ அல்லது தீர்மானமோ பதிவு செய்யப்படவில்லை. ஆனால், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள இந்தக் காலகட்டத்தில், எவ்வித முன்னறிவிப்புமின்றி, நகராட்சி நிர்வாக இயக்குநரகத்தின் மூலம் குடிநீர் வரி உயர்வு 12-04-2026 அன்று திடீரென அமல்படுத்தப்பட்டது.

இப்பிரச்சினையை *மாமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் சி.ஜெகன்* அவர்கள் *மாண்புமிகு மேயர், ஆணையர், துணை மேயர் மற்றும் மண்டலத் தலைவர்களின்* கவனத்திற்கு எடுத்துச் சென்றார். இவ்வாறு திடீரென வரி உயர்வு அமல்படுத்தப்பட்டதைக் கண்டு அவர்களே அதிர்ச்சியடைந்தனர். *மாமன்ற உறுப்பினர் C.ஜெகன்* அவர்கள் புகார் அளித்தன் பேரில், தாம்பரம் மாநகராட்சியின் மதிப்பிற்குரிய ஆணையர் அவர்கள் நகராட்சி நிர்வாக இயக்குநரகத்திடம் இதுகுறித்து விளக்கிப் பேசினார்; இந்த நடவடிக்கை தவறானது என்றும், இணையதளத்தில் (Portal) உரிய திருத்தம் செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும், உயர்த்தப்பட்ட வரி விகிதத்தை (13/4/2026) 24 மணி நேரத்தில்பழைய நிலைக்குத் திரும்பப் பெறுவதற்கான ஏற்பாடுகளையும் அவர் மேற்கொண்டார். *மாமன்ற உறுப்பினர் C.ஜெகன்* அவர்களின் கோரிக்கையை ஏற்று, அமல்படுத்தப்பட்ட வரி உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற நடவடிக்கை எடுத்த தாம்பரம் மாநகராட்சி மேயர், ஆணையர் மற்றும் துணை மேயர் ஆகியோருக்கு ஜெகன் அவர்கள் நன்றியைத் தெரிவித்தார். மேலும், இந்த குடிநீர் வரி உயர்வு குறித்த தகவலை அவரது கவனத்திற்குக் கொண்டு சென்ற சிட்லபாக்கம் குடியிருப்பு நலச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு. விஸ்வநாதன் மற்றும் திரு.சந்துரு ஆகியோருக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

குடிநீர் வரி அமலுக்கு வந்த 24 மணி நேரத்திற்குள் இத்தகவல் அவருக்கு தெரிவிக்கப்பட்டதாலும் அவர் அது குறித்து அவர் மேயர் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு உடனடியாக கொண்டு சென்றதாலே உடனடியாகச் செயல்பட்டு இந்தத் தீர்வைப் பெற முடிந்தது என்று அவர் தெரிவித்தார். குடியிருப்போர் நலச்சங்கங்களும் ஜெகனுக்கும் இதர்க்கு உதவிய ஆணையர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி பாராட்டினர்.

13/04/2026

தாம்பரம் சட்டமன்றத் தொகுதியின் திமுக வேட்பாளரான டாக்டர் ஆர்.எஸ்.கிருத்திகா தேவி, தாம்பரம் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில்—குறிப்பாக சிட்லப்பாக்கத்திலுள்ள ஜார்ஜ் காலனி மற்றும் பாபு தெரு, அத்துடன் சர்வ மங்களா நகர் மற்றும் மகாலட்சுமி நகர் ஆகிய இடங்களில்—வீதி வீதியாகச் சென்று வாகனப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இப்பிரச்சாரத்தின் போது, ​​பெண்கள் வேட்பாளர் மீது மலர்களைத் தூவியும், அவருக்கு மாலை அணிவித்தும் உற்சாகமாக வரவேற்றனர். இப்பிரச்சாரப் பயணத்தில், தாம்பரம் மாநகராட்சிச் செயலாளர் எஸ் ஆர் ராஜா, பகுதிச் செயலாளர் ஆர். சுரேஷ், மாமன்ற உறுப்பினர்கள் சிட்லபாக்கம் சி.ஜெகன் மற்றும் ராஜா, வார்டு செயலாளர் தேவேந்திரன் ஆகியோருடனும், மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகளுடனும் இணைந்து அவர் பங்கேற்றார்.

Want your public figure to be the top-listed Public Figure in Chennai?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address


19, ACB Complex , Pamban Swamigal Salai
Chennai
600064

Opening Hours

Monday 7am - 6pm
Tuesday 7am - 6pm
Wednesday 7am - 6pm
Thursday 7am - 6pm
Friday 7am - 6pm
Saturday 7am - 6pm
Sunday 7am - 1pm