PSR
EPS ❤️🔥TTV 🔥🔥🔥
23/11/2025
பெண்களோட காதலுக்கு, அழகும், 8 packs, அதீத பணம் போன்றவை எல்லாம் ஒரு பத்து சதவீத பெண்களுக்கு வேண்டுமானால் பெரிதான விஷயமாக இருக்கலாம்... பெரும்பான்மையான பெண்களுக்கு, இன்னும் சொல்லப்போனால் புத்திசாலி பெண்களுக்கு, காதலில், அல்லது காதலன் கொடுக்கும் சுயமரியாதையும், பாதுகாப்பு உணர்வும், கொஞ்சம் நகைச்சுவை உணர்வும், அவனிடம் இருக்கும் உண்மையுமே போதுமானது.❤️
சமீபத்தில் நான் பார்த்து வியந்து, ரசித்து, மனமெங்கும் சந்தோஷமாக இருக்கக்கூடிய காதலாக இவர்களுடைய காதலை பார்க்கிறேன்...
திருமண பந்தமே வேண்டாம் என்று முடிவு எடுத்த பின், காது கேட்காத கண் பார்வை தெரியாத மனிதர்களின் சைகை மொழி கற்றுக்கொள்ள போக... அங்கே அந்த பெண்ணுக்கு காதல் பூத்து இருக்கிறது...
உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும், நொடிக்கு நொடி வீடியோ காலில் ஃபோனில் நம் உணர்வுகளை கடத்திக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில், அவருக்கு காதும் கேட்காது, கண்ணும் தெரியாது... அவர் பெயர் மிரண்டா தாம் கின்சன்...
உதாரணத்திற்கு முதல் நாள் ஒரு கடிதம் அவருக்கு அனுப்பினால் அதனை மறுநாள் தான் அவர் படித்து புரிந்து கொள்ள முடியும்...
சென்னையில் முட்டுக்காடு ஏரி பாலத்துக்கு முன்பாக அந்த பிரம்மாண்ட பிரவுன் கலர் கட்டிடம் தனித்து நிற்கும்
அதுதான் National Institute for Empowerment of Persons with Intellectual Disabilities (NIEPID) அங்கேதான் மிரண்டாத்தான் கின்சன் பேராசிரியராக பணிபுரிகிறார்... அவரிடம் சைகை மொழி படிக்கப் போய் காதலில் விழுந்தவர்தான் அவருடைய மனைவி...
இத்தனைக்கும் அவர் மனைவியின் அம்மாவுக்கு காதலால் பெரும் துயரம் நிகழ்ந்திருக்கிறது அதனால் தன் வாழ்வில் காதலோ அல்லது திருமணமோ தேவை என்ற புரிதலில் இருந்தவர் தற்போது அவர் மீது காதல் கொண்டு நிறைய எதிர்பர்களை சந்தித்து திருமணம் செய்து தற்போது ஒரு மகனோடு வாழ்கிறார்...
இத்தனைக்கும் அந்த வீட்டுக்கான பிரட் வின்னர் பேராசிரியர் மிராண்டா தாம் கின்சன் தான்...
உதாரணத்திற்கு அவரால் பார்க்க முடியாது காதும் கேட்காது... அவர் தன்னுடைய காதலிக்கு தன்னுடைய உணர்வை தெரிவிக்க வேண்டும் என்றால்... போனில் பேசுவார்... அதை முழுதாக கேட்டுக்கொண்டு அதற்கு பதிலை மறுநாள் ஈமெயிலாக இவர் அனுப்புவார்... ஏனெனில் அவரால் பேச மட்டுமே முடியும் காது கேட்காது என்பதால் அவருக்கு சொன்னாலும் புரியாது யோசித்துப் பாருங்கள்...
ஒரு செய்தியை ஒரு உணர்வை கடத்த 24 மணி நேரங்கள் தேவையாக இருக்கிறது என்பதை தெரிந்து அந்தக் காதலை ஏற்றுக் கொண்டிருக்கிறார்.
உங்கள் காதல் எங்கே பூத்தது என்ற கேள்விக்கு...
நீ காற்று நான் மரம், என்ன சொன்னாலும் தலையாட்டுவேன் பாடல் மூலமாக எனக்கு அவர் காதலை தெரிவித்தார்... ❤️❤️
அந்த காதலை பார்த்தபோது என் கண்கள் நெகிழ்ச்சியில் கலங்கியது... அந்த காதலை கொண்டாட தோன்றியது... எந்த குறைகளும் இன்றி வாழ்வாங்கு வாழ எல்லாம் வல்ல இயற்கை துணை புரியட்டும் என்று மனதார வேண்டிக் கொள்ளத் தோன்றியது...
நிறைய சூழல்களில் பெண்களுக்கு இருக்கும் மன தைரியம்... பார்த்து வியந்திருக்கிறேன்... அந்தப் பெண்மணி நினைத்திருந்தால் எல்லோரை போன்று ஒரு வாழ்க்கையை வாழ்ந்து இருக்க முடியும்...
ஆனால் comfort zone என்ற வார்த்தைக்கான அர்த்தத்தையே மாற்றிக் காட்டி இருக்கிறார்...
அந்த பெண்மணியின் மனோ தைரியத்துக்கும், காதலுக்கும், தலை வணங்குகிறேன்...
உண்மைதான்...காதல், எல்லாத்தையும் கற்றுக் கொடுக்கும், எதையும் தாங்கும் சக்தியை கொடுக்கும்.
-
28/09/2025
உங்க மேல பெரிய மதிப்பு வந்திருக்கு ஐயா 🙏🙏
கேள்வி : விஜய் இன்னும் மருத்துவமனைக்கு வந்து பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கவில்லையே ?
எடப்பாடியார் பதில் : நடந்திருப்பது மிக மிக துயரமான சம்பவம். இதில் யார் யார் என்னென்ன மன நிலையில் இருப்பார்கள் என்பது நமக்குத் தெரியாது. அரசியலை கடந்து எல்லோரும் ஒன்றாக நின்று நிலைமையைச் சமாளிக்க வேண்டிய தருணம் இது.
பிண அரசியலை மட்டுமே பார்த்த தமிழகம், இப்படியும் ஒரு பக்குவமான தலைவர் தான் இனி தமிழகத்தின் விடிவெள்ளி
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Chennai