AMMA S BEST

AMMA S BEST

Share

15/12/2019

அம்மாஸ் பெஸ்ட் நல்லெண்ணெய் ======================== 1)100% சுத்தமானதும் இயற்கையானது. 2)100%கலப்படம் இல்லாத்து(free from Argemone oil) 3)இரசாயன பொருட்கள் கலந்து வடிகட்டப்படாத து (Unrefined). 4)எண்ணெய் வெப்பம் அடையாமல் தயாரிக்கப்பட்டது(cold pressed) 5)சிரந்த தர உத்தரவாதம். 6)எள்ளில் உள்ள மருத்துவத்தன்மை அப்படியே உள்ளது. 7)சாப்பாட்டுடன் சேர்த்து சாப்பிடுவதற்கு உகந்த இயற்கை முறையில் தயாரிக்கப்பட்டது. 8)100% தரம் , நம்பிக்கை,உத்தரவாதம். 9)ஒரு முறை உபயோகித்துப்பாருங்கள் உங்கள் நன்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள். Contact 07467400746or email [email protected]

Photos from AMMA S BEST's post 15/12/2019

தரமான,கலப்படமற்ற நல்லெண்ணெய் #அம்மாஸ்பெஸ்ட்

நம் முன்னோர்கள் நோய் நொடியின்றி அதிக காலம் வாழ்கின்றமைக்கு காரணம் அவர்களின் உணவுப் பழக்க வழக்கம்தான்.நல்லெண்ணெயைத் தான் உணவில் அதிகம் சேர்த்துக்கொண்டார்கள் நம் முன்னோர்கள்.அதனால் தான் இன்றும் நம் பாட்டி,தாத்தாக்கள் வலிமையோடு இருக்கின்றனர்.அதிலும் இந்த எண்ணெயை உணவில் அதிகம் சேர்த்தால், இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
மேலும் இந்த எண்ணெய் சைவ உணவாளர்களுக்கு மிகச் சிறந்த ஒரு உணவுப் பொருள்.ஏனெனில் இந்த எண்ணெயில்,முட்டையில் நிறைந்துள்ள புரோட்டீனுக்கு நிகரான அளவில் புரோட்டீனானது நிறைந்துள்ளது.எனவே உணவில் மற்றைய எண்ணெய்களை சேர்த்துக் கொள்வதற்கு பதிலாக, இந்த எண்ணெயை சேர்த்தால் இன்னும் பல நன்மைகளைப் பெறலாம்.

ஆரோக்கிய இதயம்:
நல்லெண்ணெயில் சீசேமோல் என்னும் பொருள் நிறைந்துள்ளது எனவே இதனை உணவில் அதிகம் சேர்க்கும் போது அது இதயத்திற்கு சரியான பாதுகாப்பளித்து இதய நோய் வராமல் தடுக்கிறது.

நீரிழிவு:
நல்லெண்ணெயில் உள்ள அதிகப்படியான மக்னீசியம், இன்சுலின் சுரப்பை தடுக்கும் பொருளை எதிர்த்து போராடி, உடலில் நீரிழிவு வருவதைத் தடுக்கும்.

வலுவான எலும்புகள்:
நல்லெண்ணெயில் ஜிங்க் என்னும் கனிமச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. இது எலும்புகளில்
கல்சியம் அதிகம் இருக்குமாறு பார்த்துக் கொள்ளும்.எனவே எலும்புகள் வலுவுடன் இருக்க வேண்டுமெனில், கல்சியம் உணவுகளுடன், நல்லெண்ணெயையும் சேர்த்துக்கொள்வது நல்லது.அதிலும் இந்த எண்ணெயை பெண்கள் அதிகம் உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.

செரிமான பிரச்சினை:
மற்றறைய எண்ணெய்களை விட, நல்லெண்ணெய் மிகவும் லேசாக இருப்பதால், இதனை உணவில் சேர்த்து சாப்பிடும் போது, குடலியக்கமானது சீராக செயற்பட்டு, செரிமானப் பிரச்சனை வராமல் இருக்கும்.

சுவாசக் கோளாறு:
நல்லெண்ணெயில் ஆன்டி-ஸ்பாஸ்மோடிக் நிறைந்திருப்பதால், இதனை சாப்பிடுகையில் சுவாசப் பாதையில் ஏற்படும் பிடிப்புகள் நீங்கி, சரியான முறையில் சுவாசிக்கும் வகையில் உதவியாக இருக்கும். அதிலும் ஆஸ்துமா நோயாளிகள், இதனை அதிகம் உணவில் சேர்ப்பது நல்லது.

இரத்த அழுத்தம்:
நல்லெண்ணெயில் இருக்கும் மக்னீசியம், இரத்த அழுத்தத்தைக் குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும். அதிலும் நீரிழிவு நோயாளிகளுக்கு, உயர் இரத்த அழுத்தம் இருந்தால், அவர்கள் நல்லெண்ணெயை சாப்பிடுவது நல்ல பலனைத் தரும்.

பளிச் பற்கள்:
தினமும் காலையில் எழுந்து நல்லெண்ணெயால் வாயை கொப்பளித்தால் ,பற்கள் நன்கு பளிச்சென்று ஆரோக்கியமாக இருக்கும்.

புற்றுநோய்:
நல்லெண்ணெயில் மக்னீசியத்தைத் தவிர, பைட்டேட் என்னும் புற்றுநோய் செல்களை அழிக்கும் பொருள் நிறைந்துள்ளதால், அதனை உணவில் சேர்க்கும் போது, உடலில் தங்கியிருக்கும் புற்றுநோய் செல்களை அழித்து, புற்றுநோயின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம்.

இதனால்தான் இவ்வளவு மகிமைகள் பொருந்திய நல்லெண்ணெயை எண்ணெய்களின் அரசி என்று அழைக்கிறார்கள்.நாமும் உணவில் நல்லெண்ணெயை சேர்த்து ஆரோக்கியம் பெறுவோம்.

Want your business to be the top-listed Shop in Harrow?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address


Harrow
HA29RL

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm
Sunday 9am - 5pm