Grace Tabernacle Apostolic Church
பொறுப்பும் மேலான இலக்கும் | RESPONSIBILITY AND GOAL| INNERMAN DEVOTIONS
தீத்து 3:10 - வேதப்புரட்டனாயிருக்கிற ஒருவனுக்கு நீ இரண்டொருதரம் புத்தி சொன்னபின்பு அவனை விட்டு விலகு.
கர்த்தருக்குள் ஒரே சிந்தையாக இருக்கும்படி புத்திமதி கூறியதைப் போலவே, நாமும் இக்காலத்திலே, வேறு சிந்தையாய் இருக்கும் ஒவ்வொரு விசுவாசிக்கும் கூற வேண்டும். உலக நீதி நியாங்களை பேசாமல், வீணான தர்க்கங்களை உண்டுபண்ணாமல், நாம் தேவ நீதியையிலே நிலைத்திருக்க வேண்டும். மற்றவர்களை நியாந்தீர்க்கும் படிக்கு அல்ல, தேவ சித்தத்தை நம்முடைய வாழ்விலே நிறை வேற்றி முடிக்கும்படியாக, கிறி ஸ்துவின் சிந்தையை தரித்துக் கொள்ள வேண்டும். கிறிஸ்துவை அறிய முன்பு, நாம் உலக நீதி யையும், மனித நேயங்களையும் பேசின நாட்கள் இருந்தது. ஏனெ னில், 'முற்காலத்திலே நாமும் புத்தியீனரும், கீழ்ப்படியாதவர்க ளும், வழிதப்பி நடக்கிறவர்களும், பலவித இச்சைகளுக்கும் இன்பங்களு க்கும் அடிமைப்பட்டவர்களும், துர்க்குணத்தோடும் பொறாமையோடும் ஜீவனம்பண்ணுகிறவர்களும், பகைக்கப்படத்தக்கவர்களும், ஒருவரை யொருவர் பகைக்கிறவர்களுமாயிருந்தோம். நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய தயையும் மனுஷர்மேலுள்ள அன்பும் பிரசன்னமானபோது, நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தின்படியே, மறுஜென்ம முழுக்கினாலும், பரிசுத்த ஆவி யினுடைய புதிதாக்குதலினாலும் நம்மை இரட்சித்தார். தமது கிரு பையினாலே நாம் நீதிமான்களாக்கப்பட்டு, நித்திய ஜீவனுண்டாகும் என்கிற நம்பிக்கையின்படி சுதந்தரராகத்தக்கதாக, அவர் நமது இரட் சகராகிய இயேசுகிறிஸ்து மூலமாய், அந்தப் பரிசுத்தஆவியை நம்மேல் சம்பூரணமாய்ப் பொழிந்தருளினார். இந்த வார்த்தை உண்மையுள்ளது. தேவனிடத்தில் விசுவாசமானவர்கள் நற்கிரியைகளைச் செய்ய ஜாக் கிரதையாயிருக்கும்படி நீ இவைகளைக்குறித்துத் திட்டமாய்ப் போதி க்கவேண்டுமென்று விரும்புகிறேன்; இவைகளே நன்மையும் மனுஷ ருக்குப் பிரயோஜனமுமானவைகள். புத்தியீனமான தர்க்கங்களையும், வம்சவரலாறுகளையும், சண்டைகளையும், நியாயப்பிரமாணத்தைக்கு றித்து உண்டாகிற வாக்குவாதங்களையும் விட்டு விலகு; அவைகள் அப் பிரயோஜனமும் வீணுமாயிருக்கும். வேதப்புரட்டனாயிருக்கிற ஒருவ னுக்கு நீ இரண்டொருதரம் புத்தி சொன்னபின்பு அவனைவிட்டு விலகு' கிறிஸ்துவின் சிந்தையை தரித்தவர்களாக, உங்களுக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பையும், மேலான இலக்கையும் நோக்கி முன்னேறுங்கள்.
ஜெபம்: மேலான நோக்கத்திற்காக என்னை அழைத்த தேவனே, நீர் என க்கு தந்த மேன்மையான இலக்கை யாரும் பறித்துக் கொள்ள இடங் கொடுக்காமல் அன்போடு சத்தியத்தை கைகொண்டு நடக்க எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - யாக்கோபு 4:1
Titus 3:10 - A man that is an heretick after the first and second admonition reject; (KJV)
Based on: The Inner Man Tamil Monthly Magazine - Published by Grace Tabernacle apostolic church, Toronto Canada
Background Music: Recorded by Grace Tabernacle apostolic church
Click here to claim your Sponsored Listing.
Category
Telephone
Website
Address
210 Silver Star Boulevard , Unit 807
Toronto, ON
M1V5J9
Opening Hours
| Tuesday | 7pm - 8:30pm |
| Sunday | 9am - 1pm |