Hospital Development Committee Sammanthurai
11/06/2024
சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு கணக்காளர் பதவி ஆளணி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
=============================
சட்டத்தரணி MBM பௌஸான்
செயலாளர்
-------------------
இது வைத்தியசாலை அபிவிருத்தி குழுவின் இரண்டு வருட முயற்சிக்கு கிடைத்த வெற்றி.
பல ஆயிரம் படிகளை ஏறி இறங்க பல நூறுகளுடன் கலந்துரையாடி பல ஆயிரம் மயில் தூரங்களையும் நேரங்களையும் செலவு செய்து பல பக்க விமர்சனங்கள் பல பக்க அரசியல் சித்துக்களையும் வென்று எடுக்கப்பட்ட ஒரு வெற்றி.
தற்காலிக கணக்கு பிரிவை கூட ஆரம்பிக்க முடியாத மாகாண சபை கைவிரித்தது.
MS, RDHS, PDHS, Secretary EP HS, CS Governor ஊடக சென்றாலும் தற்போதைய நாட்டின் சூழலில் carder creation உருவாக்க திறைசேரி தடை.
ஜனாதிபதி அனுமதித்தால் இவைகள் சாத்தியம்.
துணிந்தது அபிவிருத்தி குழு வரையப்பட்டது பல பல படிகளில், கோணங்களில் கடிதங்கள்.
MS, RDHS, PDHS, Secretary (EP) HS, CS (EP) Governor ஊடாக சிபாரிசு செய்யப்பட்டது. முகாமைத்துவ சேவைகள் பணிப்பாளர் மாத்திரம் அனுமதி நிலுவை.
பல சந்திப்புகள்.
PDHS Governor, Secretary to the Health ministry, DGHS போன்றோருடன் பேசுவதற்கு
ஏற்படுத்தினார் பாராளுமன்ற உறுப்பினர் றிஷாட் அ.இ.ம.கா. தலைவர். அபிவிருத்தி குழுவை அழைத்துச் சென்றார்.
கடைசியில் ஜனாதிபதியின் செயலாளருடன் அனுமதிக்கு பேசி உடனடி வாக்குறுதி 2024 ஏப்ரல் மாதம் கிடைத்தது.
இன்று அதன் பிரதிபலிப்பத்தான் எமது கணக்காளர் பதவி ஆளணி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கென உழைத்த சகல உத்தியோகத்தர்கள், கழகங்கள், அமைப்புக்கள், கட்சிகள், தனிநபர்கள் மற்றும் விடாமுயற்சியில் ஈடுபட்ட அனைவருக்கும் நன்றிகள். அள்ளாஹ் உங்களின் நற்பணியை முன்னேற்றமளிப்பானாக. உங்களுக்கு பரக்கத் செய்வானாக. ஆமீன்
ஊடக பிரிவு
சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை அபிவிருத்தி குழு
10/12/2023
சம்மாந்துறை வைத்தியசாலை அபிவிருத்தி குழுவின் அழைப்பின் பேரில் வைத்திய சாலையின் குறைபாடுகளை கேட்டு அறிவதற்காக இன்று (09.12.2023) அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாப். ரிஷாட் பதியுதீன் அவர்கள் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
இதன் போது 2017 ம் ஆண்டு Type A வைத்திய சாலையாக தரமுயற்றப்பட்ட போதிலும் பல்வேறு புறக்கணிப்புகளால் நீண்ட காலமாக கணக்காளர் இதுவரை நியமிக்க படாமை தொடர்பிலும் எடுத்துக்கூறப்பட்டதோடு வைத்தியசாலையின் பல்வேறு குறைபாடுகளும் இங்கு முன்வைக்கப்பட்டது.
இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் மிக விரைவில் இதனை பெற்றுத் தருவதற்கு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
இந்நிகழ்வில் வைத்தியசாலையின் பணிப்பாளர் மற்றும் அபிவிருத்திக் குழுவின் தலைவர், உறுப்பினர்கள், ஊர் பிரமுகர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
ஊடகப்பிரிவு
சம்மாந்துறை வைத்தியசாலை அபிவிருத்தி குழு.
09.12.2023
https://chat.whatsapp.com/Fus3Uy02NUJIMPYQIgu484
20/10/2023
கல்முனை பிராந்திய பிரதி சுகாதார பணிப்பாளராக Dr. Mrs. Shakila izzadeen நியமனம்.
Dr. Mrs. Shaikila Izzadeen கல்முனை பிராந்திய பிரதி சுகாதார பணிப்பாளராக இன்று 19.10.2023 கடமையேற்றுக் கொண்டார்.
மருத்துவ துறையில் 35 வருட சேவைக் காலத்தை கொண்ட இவர் சாய்ந்தமருதின் முதலாவது பெண் எம்பிபிஎஸ் மருத்துவ கலாநிதியும், மருத்துவ நிர்வாகத்துறையில் முதலாவது முஸ்லிம் பெண் நிர்வாக உத்தியோகத்தரும் ஆவார்.
சாய்ந்தமருது முன்னாள் மரண விசாரணை அதிகாரி மர்ஹும் ராசிக் காரியப்பரின் புதல்வியும், Deputy RDHS, Kalmunai ஆக கடமையாற்றி ஓய்வுபெற்ற Dr. A. Izzadeen அவர்களின் மனைவியும் ஆவார்.
சாய்ந்தமருது வைத்தியசாலை, சாய்ந்தமருது MOH, கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை மற்றும் நிந்தவூர் தள வைத்தியசாலை ஆகியவற்றில் கடமையாற்றி நிறுவனம் சார்பான போட்டிகளில் பங்கு பற்றி பல வெற்றிகளைப் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவரது சேவைகள் சிறப்பாக தொடர வாழ்த்துக்கள்
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Sammanthurai