MedFacts-Jaffna
08/06/2025
🐍 பாம்பு கடித்தபோது அளிக்க வேண்டிய முதல் உதவி
• நோயாளியை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள் – இது நரம்பியல் அதிர்ச்சியை (neurogenic shock) தடுக்கும்.
• பாம்பு கடித்த இடத்தை சோப்பும் நீரும் கொண்டு மெதுவாக கழுவுங்கள்.
• மோதிரங்கள், வளையல்கள், கடிகாரங்கள் போன்றவற்றை கடிக்கப்பட்ட உறுப்பில் இருந்து உடனே அகற்றவும்.
• கடிக்கப்பட்ட உறுப்பை இதயத்தின் கீழே வைத்துக்கொள்ளவும்.
• சிலிண்ட் அல்லது ச்லிங் (sling) கொண்டு அந்த உறுப்பை அசையாமல் செய்யவும்.
• வலி இருந்தால், பாராசிட்டமால் (2 மாத்திரைகள்) கொடுக்கலாம்.
(அஸ்பிரின் ASPIRIN வழங்கக்கூடாது.)
• நோயாளியை விரைவாக, ஆனால் பாதுகாப்பாகவும் வசதியாகவும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லவும்.
⛑️ முதல் உதவிக் குறிப்புகள்
• விஷம் உடல் முழுவதும் பரவுவதை தடுக்கும் வகையில், நோயாளியின் அசைவுகளை குறைக்க வேண்டும்.
• பாம்பை உயிருடன் அல்லது இறந்த நிலையில், நோயாளியுடன் அடையாளம் காண்பதற்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லலாம்.
❌ பாம்பு கடித்தபோது - செய்யக் கூடாதவை
• அதிர்ச்சி அடைய வேண்டாம் (பதற்றப்பட வேண்டாம்).
• கடித்த இடத்தை வெட்டவோ, துளையிடவோ கூடாது.
• காயத்தை வாயால் உறிஞ்ச முயற்சிக்கவே கூடாது.
• ஜீன்ஸ் அல்லது சட்டையை கழற்ற வேண்டாம்
(ஏனெனில் எந்தவொரு அசைவும் விஷம் ரத்தத்தில் பரவ உதவும்).
• பனிக்கட்டியோ அல்லது Condy’s Crystal (கெமிக்கல்கள்) போன்றவற்றை
காயத்தில் போடக் கூடாது – இது திசுக்களை சேதப்படுத்தும்.
• மதுபானம், இளநீர், பழச்சாறு, மூலிகை மருந்துகள் அல்லது அஸ்பிரின் கொடுக்கவே கூடாது.
08/05/2025
🥕கேரட் அதிகமாக உட்கொள்ளும் போது, உங்கள் தோலில் மஞ்சள்-ஆரஞ்சு நிறம் தோன்றும் ஒரு நிலை உருவாகலாம், இதை கேரோட்டினீமியா (Carotenemia) என்று அழைப்பார்கள். இதற்குக் காரணம் கேரட்டில் அதிக அளவில் இருக்கும் பீட்டா-கேரோட்டின் (beta-carotene )ஆகும். இந்த பீட்டா-கேரோட்டின் உடலில் விட்டமின் A-ஆக மாற்றப்படுகிறது. தேவையற்ற அளவில் உள்ள பீட்டா-கேரோட்டின், தோலின் அடிப்பகுதியில் மற்றும் keratin இல் தேங்குவதால், குறிப்பாக கை, பாதம், முழங்கை போன்ற தடிப்பான தோல் பகுதிகளில், தோலின் நிறம் மாறி தெரிகிறது.
🥕கேரோட்டினீமியா பொதுவாக தீங்கற்றது மற்றும் வேறு எந்த உடல்நலக் கோளாறுகளையும் ஏற்படுத்துவதில்லை.
🥕பீட்டா-கேரோட்டின் அதிகம் உள்ள கேரட் அல்லது பிற உணவுகளை குறைத்துவிட்டால், தோலில் ஏற்பட்ட நிறமாற்றம் பொதுவாக சில மாதங்களில் தானாகவே மங்கிவிடுகிறது.
🥕இனிப்பு உருளைக்கிழங்கு, சுரைக்காய், மாம்பழம் போன்ற பீட்டா-கேரோட்டின் அதிகம் உள்ள பிற உணவுகளும் கேரோட்டினீமியா ஏற்படுத்தக்கூடும்.
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
40000