Malainaadu Media
மலைநாடு (https://www.facebook.com/Malainaadu/) முகநூல் ஊடாக மலையக மக்களின் அரசியல், கலாசார, பண்பாட்டு, சமூக பொருளாதார தகவல்களை கடந்த 2017ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து வழங்கி வருகிறோம்.
பொலநறுவையில் நெகிழ வைத்த காட்சி: குட்டி முள்ளம்பன்றியுடன் நெல் வயலில் நடந்துசெல்லும் சிறுமி
பொலநறுவையில் பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு நெகிழ்ச்சியான காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி, உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான மக்களின் இதயங்களைத் தொட்டுள்ளது.
அந்தக் காணொளியில், ஒரு சிறுமி குட்டி முள்ளம்பன்றியுடன் பசுமை நிறைந்த நெல் வயலில் அமைதியாக நடந்துசெல்லும் காட்சி இடம்பெற்றுள்ளது. மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையிலான அன்பும், உயிரினங்களுடனான பாசப்பிணைப்பும் இந்தக் காணொளியின் மூலம் அழகாக வெளிப்பட்டுள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
எளிமையான இந்த தருணம், இயற்கையுடனும் வனவிலங்குகளுடனும் இணைந்து வாழும் வாழ்க்கையின் அழகை உலக மக்களுக்கு நினைவூட்டுவதாக சமூக ஊடக பயனர்கள் பாராட்டி வருகின்றனர். இந்தக் காணொளி தற்போது பல்வேறு சமூக வலைத்தளங்களில் இலட்சக்கணக்கான பார்வைகளையும், பகிர்வுகளையும் பெற்று தொடர்ந்து வைரலாகி வருகிறது.
28/06/2026
ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் களஞ்சியங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்...!
அமெரிக்கா விமானப் படையினர், ஈரான் நாட்டின் ஏவுகணை மற்றும் ட்ரோன் (ஆளில்லா விமானம்) களஞ்சியங்களை இலக்கு வைத்து தொடர் வான்வழித் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.
வெளிநாட்டு ஊடகங்களின் தகவலின்படி, ஹோர்முஸ் நீரிணை பகுதியில் கப்பல் ஒன்றின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் சம்பவத்திற்குப் பதிலடியாக இந்த இராணுவ நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல்களில், ஈரானின் கடலோர ரேடார் கண்காணிப்பு மையங்களும் இலக்காகக் கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விவகாரம் தொடர்பாக டொனால்ட் ட்ரம்ப் தனது Truth Social சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், போர்நிறுத்த உடன்படிக்கையை ஈரான் மீண்டும் மீறியுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், "அவர்கள் ஒருபோதும் பாடம் கற்றுக்கொள்ளப் போவதில்லை போல் தெரிகிறது. இனி அவர்களுடன் நியாயமான முறையில் நடந்துகொள்ள முடியாது" என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய நிலைமை தொடருமானால், முன்னர் தாம் தொடங்கிய இராணுவ நடவடிக்கையை முழுமையாக நிறைவு செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என்றும் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
அத்துடன், அத்தகைய சூழல் உருவானால், ஈரான் இஸ்லாமியக் குடியரசு கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அவர் தனது பதிவில் மேலும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எம்முடன் இணைந்துகொள்ளுங்கள் 👇👇
⏩Facebook : https://www.facebook.com/Malainaadu
எமது Whatsapp குழுவில் இணைய 👇👇
https://chat.whatsapp.com/1bhq2JxP4aFH1Luo02vyM2?mode=gi See less
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Website
Address
Colombo
22000