KavinPrabhakaran

KavinPrabhakaran

Share

05/10/2025

*இன்று காலை பெருந்துறை புதிய பேருந்து நிலையத்தில் முன்னாள் அமைச்சரும், ஈரோடு மத்திய மாவட்ட செயலாளருமான மரியாதைக்குரிய திரு,தோப்பு N.D.வெங்கடாசலம் அவர்கள் மினி பஸ்சை துவக்கி வைத்தபோது..
🖤❤️

18/07/2025

எளிமை என்பது போற்றத்தக்கது தான் ஆனால் அதை மட்டுமே அதுவும் அரசியலில் தகுதியாக வைத்து எடுத்தோம் கவுத்தோம் என பேசுவது தவறு. இங்கு எளிமை என்பதே திராவிட இயக்கத்தினரை மட்டந்தட்ட கொண்டு வரப்பட்ட கான்செப்ட் தான். மீடியாக்களுக்கு காமராசர் மீதோ கக்கன் மீதோ எல்லாம் அவ்வளவு பாசமில்லை திராவிடத்தின் மீது காண்டு அவ்வளவு தான்.

அதிலும் காமராசர் கக்கன் ஜீவா இவர்களது எளிமை எப்போதுமே திமுகவோடு மட்டும் தான் பொருத்தப்பட்டிருக்கும் வைரம் பொதித்த செருப்பு, கொடநாடு எஸ்டேட், பாலு ஜீவல்லரினு திருட்டுத்தனம் பண்ணி ஆடம்பரமாக வலம் வந்த ஜெயா மீது இந்த பொருத்தப்பாடு இது வரை வந்ததும் இல்லை வரப்போவதும் இல்லை

திமுகவின் (அண்ணா, கலைஞர்) சமகாலத்து எதிர்க்கட்சி தலைவராக இருந்தது காமராசர் தான் அப்போது அவருக்கு எதிரான அரசியல் தான் செய்ய‌ முடியும் அதை வைத்து திமுக இல்லாத பொல்லாததை எல்லாம் சொல்லி நல்ல மனிதனை வீழ்த்தி விட்டது என்ற கதையாடல் எல்லாம் விஷமத்தனமானது.

காமராசர் ஒருமுறை போட்டியிட்ட போது திமுக போட்டியிடாமல் இருந்த ருசிகர நிகழ்வும் நடந்துள்ளது. கட்சிக்காக மக்கள்‌ அளித்த முதல்வர் பதவியை உதறியவரை மக்கள் உதறிவிட்டனர் அவ்வளவு தான். இது தாண்டிய நிறைய‌ காரணங்களும் உள்ளன. காமராசர் தவிர்த்த மற்ற காங்கிரசாரின் பண்ணையார் தனத்தை மக்களால் சகித்து கொள்ள முடியவில்லை. எந்த கட்சி பண்ணையார் தனத்தில் இருந்தாலும் மக்களால் ஒரு நாள் தூக்கி வீசப்படும் என்பதே வரலாறு. திமுகவுக்கும் பொருந்தும்.

அதே போல கலைஞர் அளவுக்கு காமராசரை கொண்டாடிய மாற்றுக்கட்சி தலைவர் யாருமில்லை. காமராசர் இறப்பு தொடங்கி அவரது பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாள் என அறிவித்தது, நலத்திட்டங்கள் என நிறைய சொல்லலாம்.

கலலஞரின் மீது விஞ்ஞானத்தோடு விமர்சிப்பதில் அரை அளவு காமராசர் மீது செலுத்தினால் நிறைய நிறைய விமர்சனங்கள் வரும். இந்தி திணிப்பு அடக்குமுறை தொடங்கி பஞ்சத்தின் போது பதவி விலகியது வரை பட்டியல் நீளும். ஆனால் பொது சமூகம் அதை செய்யாது. நாமும் காரணம் இன்றி செய்ய தேவையில்லை ஏனென்றால் காமராசர் இங்கு செய்தது அப்படி. ராஜாஜி மூடிய பள்ளிகளையும் சேர்த்து கூடுதலாக 7000 பள்ளிகளை திறந்தவர்.

'குணம் நாடி குற்றமும் நாடி' என்பது போல தான் அவரது மீதான விமர்சனங்கள் எல்லாம் அவரது புகழின் முன் தரைதட்டி விட்டது. ஆட்சியில் இருப்பவர் யாராக இருந்தாலும் விமர்சனங்கள் வரத்தான் செய்யும் சறுக்கல்கள் இருக்க தான் செய்யும் யாரும் விதிவிலக்கல்ல.

அதே போல தலைவர்களை, ஆளுமைகளை நினைவுக்கூற நிறைய சாதனைகள் உள்ளன அதை எல்லாம் விட்டுவிட்டு 'எப்போதும்' தனிப்பட்ட பழக்கத்தை (எளிமை, சிக்கனம், உடல்நலம்) வைத்தே பிரச்சாரம் செய்வது நல்லதல்ல. சொல்லும்படி எதுவுமே இல்லாதவர்களுக்கு தான் இதெல்லாம்.

Photos from KavinPrabhakaran's post 16/07/2025

ஈரோடு மத்திய மாவட்ட செயலாளரும் முன்னாள் முன்னாள் அமைச்சருமான #தோப்புNDவெங்கடாசலம் முன்னிலையில் ஊத்துக்குளி ஒன்றியம் குன்னத்தூர் பேரூராட்சியில் நடைபெற்ற உங்களைத் தேடி ஸ்டாலின் நிகழ்ச்சியில் சிறப்பாக நடைபெற்றது

Photos from KavinPrabhakaran's post 15/07/2025

ஈரோடு மத்திய மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான மாண்புமிகு #தோப்புNDவெங்கடாச்சலம் அவர்களின் தலைமையில் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் கல்விக்கண் திறந்த காவலர் கரைபடாத கரத்துக்கு சொந்தக்காரர் நம் ஊரைச் சுற்றிLBP வாய்க்கால் பாய்ந்து பச்சை பசேல் என வயல்வெளிகள் இருக்கிறது என்று சொன்னால் மாமனிதர் கர்மவீரர் காமராஜர் அவர்கள் அவருடைய பிறந்தநாள் விழாவை வடக்குப் பள்ளியில் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் திரு டெய்லர் ரவி தலைமையில் ஜீவா நகர் இயேசு ஏற்பாட்டில் பெருந்தலைவர் படத்திற்கு மலர் தூவி மாணவிகளுக்கு இனிப்பு வழங்கிய பொழுது

Want your public figure to be the top-listed Public Figure in Perundurai?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address

Perundurai
638052