TMMK MEDIA

TMMK MEDIA

Share

23/06/2025

தமிழ்நாட்டில் முஸ்லிம்கள் மக்கள் தொகைக்கு சமமாக அரசியல் பிரதிநிதித்துவம் இருக்கிறதா?

வாருங்கள் மதுரைக்கு அரசியல் அதிகாரம் மீட்டிட!
ஜூலை 6"

அழைக்கிறது
மனிதநேய மக்கள் கட்சி.

#மமகமாநாடு #மதுரைமாநாடு

Photos from TMMK MEDIA's post 04/02/2025

மனிதநேய மக்கள் கட்சியின் மகத்தான பணி!!!

திருச்சி கிழக்கு மாவட்டத்தை சேர்ந்த லால்குடி நகரம் எலந்தக்குளம் கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளி விஜயகுமார் (33) அவர்கள் தொழிலாளியாக சிங்கப்பூரில் வேலை செய்து வந்தார்.

அவர் 28.2.25 கடந்த செவ்வாய்க்கிழமை சிங்கப்பூரில் கடலில் குளிக்க செல்லும் போது கடல் அலையில் இழுத்துச் சென்று மரணமடைந்தார்.

இதனை தொடர்ந்து திருச்சி கிழக்கு மாவட்ட தமுமுக மமக தலைவர் M.A. முகமது ராஜா அவர்களிடம் மரணம் அடைந்தவரின் உறவினர்கள் உடலைக் கொண்டு வர வேண்டுகோள் வைத்ததால், மாவட்டத் தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின்படி மமக துணை செயலாளர் லால்குடி ரம்ஜான் அலி அவர்களின் தலைமையில், நாகூர் தம்பி ஷா மற்றும் அய்யம்பேட்டை செல்லப்பா அவர்களின் உதவியுடன் சிங்கப்பூரில் உடலை வாங்கி பெற்றுக் கொண்டு இன்று (4.2.25)மதியம் 3.30 மணி அளவில் திருச்சி விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட அன்னாரின் உடலை பெற்று திருச்சி கிழக்கு மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் உறவினருடன் வீடு வரை சென்று உடலை ஒப்படைத்தனர்.

இந்நிகழ்வில் விளையாட்டு செயலாளர் A.இப்ராஹிம்,மு.சையது முஸ்தபா, , நியு செனையா செளதி ரியாத் தமுமுக து.செயலாளர் S. நஜிமுதீன், சாந்தி நகர் கிளை தலைவர் M.முஹம்மது ஆரிப் ஆகியோர் இருந்தனர்.

TMMK MEDIA official group TMMK MEDIA நாகை தெற்கு Manithaneya Makkal Katchi

Photos from TMMK MEDIA's post 27/01/2025

மலைக்கோட்டை மாநகரில்
மமக-வின் விழா.

மனிதநேய மக்கள் கட்சியின் 17ஆம் ஆண்டு தொடக்க விழாவை தொடர்ந்து கிழக்கு மாவட்ட தலைவர் M.A.முகமது ராஜா தலைமையில் மாவட்ட ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

மமக மாவட்ட செயலாளர் A. அஷ்ரப் அலி,தமுமுக மாவட்ட செயலாளர் A.இலியாஸ் மற்றும் மாவட்ட பொருளாளர் M.A. காஜா மொய்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்வில் மனிதநேய மக்கள் கட்சி-யின் 17ஆம் ஆண்டு தொடக்கத்தை தொடர்ந்து பிப்ரவரி 07 ஆம் தேதி முதல் திருச்சி கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட கிளைகள் அனைத்திலும் இரத்த தானம், ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்,கட்சியின் சாதனைகளை கொண்டு பேனர்கள்,கல்வி உதவி,முதியோர் மற்றும் பார்வையற்றோர் இல்லங்களுக்கு உணவளித்தல்,பொதுக்கூட்டங்கள் என பலதரபட்ட நிகழ்வுகள் கட்சியின் மாவட்ட செயலாளர் அஷ்ரப் அலி தலைமையில் ஒருங்கிணைத்து நடத்துவது என இக்கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் இந்நிகழ்வில் மாவட்ட துணை,அணி நிர்வாகிகள் கலந்து கொண்டு தீர்மானங்களை நிறைவேற்றனர்.

17/09/2024

திருச்சி துவாக்குடி காவல் நிலையம் முற்றுகை..

செப்டம்பர் 16 அன்று மக்களின் குரலாக மனிதநேய மக்கள் கட்சி நடத்திய சுங்கச்சாவடி முற்றுகை போராட்டத்தில் நிர்வாகிகள் மீது பல பொய் வழக்குகளுடன் சேர்த்து திருடியதாக வழக்கு பதிவு செய்த காவல் நிலைய அதிகாரிகளை கண்டித்து மாபெரும் முற்றுகை.

அனைத்து மாவட்ட,நகர,பேரூர்,கிளை கழக நிர்வாகிகள் தாயார் நிலையில் இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்துகிறது.

திருச்சி கிழக்கு மாவட்டம்.

Photos from TMMK MEDIA's post 10/10/2023

மலைக்கோட்டை மாநகரின் செயல்வீரர்கள் கூட்டம்...!!!

தமுமுக,மமக திருச்சி கிழக்கு மாவட்டத்தின் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் மாவட்ட தலைவர் M.A.முகமது ராஜா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

தமுமுக மாவட்ட செயலாளர் இலியாஸ்,மமக மாவட்ட செயலாளர் அஷ்ரப் அலி மற்றும் மாவட்ட பொருளாளர் காஜா மொய்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில பொருளாளர் N. சபியுல்லா கான்,மாநில துணை பொதுச் செயலாளர் தாம்பரம் யாக்கூப் MC,திருச்சி மாவட்ட பொறுப்பாளரும்,மாநில து.பொதுச் செயலாளருமான தஞ்சை பாதுஷா,தலைமை பிரதிநிதி மண்டலம் ஜெய்னுளாபுதீன் தலைமை கழக பேச்சாளர் முகமது ரபீக் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்தினர்.

மேலும் இந்நிகழ்வில் மாநில துணை நிர்வாகிகள்,மாவட்ட துணை, அணி நிர்வாகிகள்,கிளை கழக நிர்வாகிகள் உட்பட உறுப்பினர்கள் பெருவாரியாக கலந்து கொண்டனர்.

TMMK MEDIA official group

Want your business to be the top-listed Media Company in Area?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Website

Address

PALAKKARAI, Thirchy Main Road
Area
620008