Event Book Shop

Event Book Shop

Share

11/17/2022

A person saying, that I spent 2 hours to read and compete the book.

Once after that, in her/his lifestyle, activities should have any of the considerable improvement / understanding / changes to reflect from that book.

Every book is a cherish, and should deep into that and absorb the good thing in ethical way.

It will change the life entirely and motivates everyone in the another level❤️👍

With love
Prabakaran

11/10/2022

படித்ததில் பிடித்தது சுகி சிவம் ஐயாவின் "சொன்னார்கள்...! சொன்னார்கள்...! சொன்னார்கள்...! " புத்தகத்திலிருந்து

தரமா? விளம்பரமா?

அமெரிக்காவில் நடந்த சம்பவம் இது. நாய்களுக்கான உணவு தயாரிக்கும் பெரிய நிறுவனம் ஒன்று. நூற்றுக்கணக்கானவர்கள் பணிபுரிந்தார்கள். லட்சக்கணக்கான டாலர் முதலீட்டில் நிறுவனம் தொடங்கப்பட்டது. ஆனால் விற்பனை சரியாக இல்லை. எனவே விற்பனைப் பிரதிநிதிகளுக்கு உத்வேகம் ஊட்டுவதற்காக ஒரு சுயமுன்னேற்றப் பயிற்சியாளர் வரவழைக்கப்பட்டார்.

விற்பனைப் பிரதிநிதிகள் மனதில் நிறுவனம் பற்றிய பெருமித உணர்வைத் தூண்டி விற்பனையைப் பெருக்க வேண்டும் என்று அந்தப் பயிற்சியாளர் திட்டம் தீட்டினார்.

எனவே கேள்விகள் கேட்டு பதில் பெறுகின்ற உத்தியைக் கையாண்டார்.

அமெரிக்காவில் நாய் உணவு தயாரிப்பில் மிகப் பெரிய வர்கள் யார்?

பதில் வந்தது "நாம்தான்"

நாய் உணவு தயாரிப்புக்கு அதிக விளம்பரம் செய்பவர்கள் யார்?

பதில் வந்தது "நாம்தான்"

விரிவான வினியோக தொடர்புகளைக் கொண்டிருப்பவர்கள் யார்?

பதில் வந்தது "நாம்தான்"

விற்பனைக்கு வசீகரமான சலுகைகள் தருபவர்கள் யார்?

பதில் வந்தது "நாம்தான்"

பயிற்சியாளர் கேட்டார் " அப்படியானால் ஏன் நாம் நம் தயாரிப்பை இன்னும் நன்றாக விற்பனை செய்யவில்லை""

பலத்த அமைதிக்கு பிறகு ஒரே ஒரு குரல் எழுந்தது " ஐயா அந்த புள்ளி விவரங்கள் நமக்குத் தெரியும் நாய்களுக்கு தெரியாது. அவற்றுக்கு நம் தயாரிப்புகள் பிடிப்பதில்லை முகர்ந்து பார்த்து விட்டு நகர்ந்து விடுகின்றன"

தரத்தில் கவனம் செலுத்தாத தயாரிப்புகளுக்கு எத்தனை விளம்பரங்கள் செய்தாலும் எடுபடுமா என்ன?

4 பிரதிகள் மட்டுமே விற்பனைக்கு உள்ளது. தேவை படுவோர் தொடர்புகொள்ளவும்

514-512-6992

Want your business to be the top-listed Shop in Toronto?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Address

Toronto, ON