Azwan News

Azwan News

Share

06/06/2020

17/05/2020

* :*

➡️ 12 மாவட்டங்களில் எந்த மாற்றமும் இன்றி ஊரடங்கு தொடரும்

➡️பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் செயல்பட தடை நீடிப்பு

➡️வழிபாட்டு தளங்கள், மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை நீடிப்பு

➡️திரையரங்கு, மதுக்கூடம், உடற்பயிற்சி கூடம், கடற்கரை, பூங்காக்கள், விளையாட்டு அரங்கத்திற்கு தடை

➡️கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கரூர், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, தேனி, மதுரையில் புதிய தளர்வுகள்

➡️கன்னியாகுமரி, சிவகங்கை,விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல், திருச்சி, திருவாரூர், தஞ்சை, நாகையிலும் புதிய தளர்வுகள்

➡️தருமபுரி, வேலூர், நீலகிரி மாவட்டங்களிலும் புதிய தளர்வுகள் அமலாகும்

➡️மாவட்டங்களுக்குள் இ பாஸ் இல்லாமல் போக்குவரத்திற்கு அனுமதி

➡️சமய சமுதாய அரசியல், கல்வி, கலாச்சார விழாக்கள் நடைபெறாது

➡️விமானம், ரயில், பேருந்து இயங்காது - மாநிலங்கள் இடையே மற்றும் சென்னையில் இருந்து பிற பகுதிகளுக்கு ரயில் போக்குவரத்து இல்லை

➡️ஆட்டோ, டாக்சி, மெட்ரோ- மின்சார ரயில் போக்குவரத்து இல்லை

➡️அனுமதிக்கப்பட்ட, அத்தியாவசிய பணிகளுக்கும் மட்டுமே போக்குவரத்தை பயன்படுத்த வேண்டுகோள்

➡️தங்கும் விடுதி, ஓட்டல், சொகுசு விடுதி இயங்காதுதிருமண நிகழ்ச்சிக்கு தற்போது உள்ள நடைமுறை தொடரும்

➡️இறுதி ஊர்வலத்தில் 20 பேருக்கு மேல் பங்கேற்க கூடாது

➡️நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் எந்த தளர்வும் இல்லை - சென்னையில் நோய்க் கட்டுப்பாட்டு பகுதி தவிர பிற இடங்களில் அனுமதிக்கப்பட்ட பணி தொடரும்

➡️சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி...

➡️திருவண்ணாமலை, அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் எந்த தளர்வும் இல்லை

➡️நீலகிரி, கொடைக்கானல் மற்றும் ஏற்காட்டுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை

➡️முக கவசம் அணிய வேண்டும் - சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும் - அடிக்கடி கை கழுவ வேண்டும்

➡️பொது இடங்களில் 5 பேருக்கு மேல் கூட கூடாது

➡️நோய்த் தொற்று குறைய குறைய தளர்வுகள் அதிகரிக்கப்படும்

➡️வெளி மாநிலங்களில் தவிக்கும் தமிழர்களை அழைத்து வர விரைவான நடவடிக்கை

➡️டெல்லியில் இருந்து வாரம் 2 விரைவு ரயில் இயக்க மத்திய அரசிடம் கோரிக்கை

➡️மருத்துவ பயன்பாட்டுக்கு இ-பாஸ் மூலம் டாக்சி, ஆட்டோ சென்று வர அனுமதி

➡️அரசுப்பணிகள் மற்றும் தனியார் தொழிற்சாலைகளுக்கு சிறப்பு அனுமதியுடன் போக்குவரத்து இயக்கப்படும்

➡️மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல பழைய இ பாஸ் நடைமுறை தொடரும்

➡️100 நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தில் 100 % பணியாளர்களுக்கு அனுமதி

➡️தனியார் மற்றும் வியாபார நிறுவனங்கள் அத்தியாவசிய பராமரிப்பு பணிகளுக்காக
குறைந்த பணியாளர்களுடன் இயங்கலாம்

➡️அரசுப்பணிகள் மற்றும் தனியார் தொழிற்சாலைகளுக்கு சிறப்பு அனுமதியுடன் போக்குவரத்து இயக்கப்படும்

➡️ வேன்களில் 7 நபர்கள், பெரிய கார்களில் 3 நபர்கள், சிறிய கார்களில் 2 பேர் ஓட்டுநர் தவிர பயணிக்கலாம்

➡️100 பணியாளர்களுக்கு குறைவாக இருந்தால் தொழிற்சாலைகள் 100% பணியாளர்களுடன் இயங்கலாம்

➡️பணியாளர்கள் எண்ணிக்கை 100க்கு மேல் இருந்தால் 50% அல்லது 100 நபர்களுடன் இயங்க அனுமதி

24/03/2020

தமிழகத்தில் மூன்றாம் நிலை- சமூகத்தில் கொள்ளை நோய் பரவும் நிலை உறுதி செய்யப்பட்டுள்ளது...

முதல் நிலை 1️⃣st stage கொரோனா பரவி வரும் நாடுகளில் இருந்து இங்கே வந்தவர்களிடம் தொற்று காணப்படுவது இதை IMPORTATION என்போம் தொற்று நோய் இறக்குமதி என்று பொருள்....

இதற்கடுத்த நிலை

இரண்டாம் நிலை 2️⃣nd stage
கொரோனா தொற்று கண்ட இறக்குமதி செய்யப்பட்ட தொற்று நோயாளர்களிடம் இருந்து இங்கிருக்கும் ஆரோக்கியமான நபர்களுக்கு தொற்று பரவுவதாகும்...

இதை PERSON TO PERSON TRANSMISSION என்போம்..

அடுத்த நிலை

மூன்றாம் நிலை 3️⃣red stage

சமூகத்தில் கொரோனா தொற்று பெற்ற ஒருவர் , இதற்கு முன் கொரோனா பரவி வரும் எந்த நாட்டிற்கும்/ஊருக்கும் பயணம் செய்யாமலும்/ உறுதி செய்யப்பட்ட கொரோனா பாதித்த நபரிடம் தொடர்பில் இல்லாமலும் வருவது

இதை COMMUNITY SPREAD என்று சொல்வோம்

அதாவது யாரிடம் இருந்து நோயை வாங்கினார் என்று தெரியாத காரணத்தால் சமூகத்திடம் இருந்து வாங்கியுள்ளார் என்று பொருள்படும்...

இவருக்கு நோயை பரப்பிய அந்த X இன்னும் கண்டறியப்படாமல் சமூகத்தில் இன்னும் பலருக்கு நோயை பரப்பிக்கொண்டிருக்கிறார்...

மற்றும் அவரால் பாதிப்படைந்த மக்கள்
நோயின் காத்திருப்பு காலம் முடிந்ததும் அவர்களும் நோயை அடுத்தவர்களுக்கு பரப்புவார்கள்...

இதைத்தான் மின்னல் வேகப்பரவல் என்று கூறுகிறோம்.

இந்த நிலையை எட்டிய கொள்ளை நோயானது Exponential Growth ஐ அடையும்..

அதாவது பத்து நோயாளிகள் இப்போது இருந்தால் அடுத்த பத்து நாட்களில் பத்தாயிரம் நோயாளிகளாக மாறக்கூடும்...

இதற்கடுத்த நான்காவது நிலை 4️⃣th stage

கொள்ளை நோய் உருவாகி பற்றி எரிய ஆரம்பிக்கும், அதன் தாக்கத்தை நிறுத்துவது என்பது இம்மண்ணில் யாராலும் இயலாது...

அதுவாகவே எப்படி பஞ்சை தீ ஆட்கொண்டு முழுவதையும் எரித்து பின் அணைகிறதோ,

அது போல மக்களிடம் பரவி கிட்டத்தட்ட அனைவரையும் ஆட்கொண்டு பிறகு அணையும்...

இந்த நான்காவது நிலையை "காட்டுத்தீயுடன்" ஒப்பிடலாம் ...

இந்த நான்காவது கட்டத்தை எட்டுவதற்கு நமக்கு இன்னும் சில நாட்களே இருக்கின்றன...

இதை தடுப்பதற்கு நமக்கு முன் இருக்கும் ஒரே ஒரே ஒரே வழி

#சமூகமாக தனித்திருத்தல்

மூன்றாவது நிலையில் கூறினேன் அல்லவா ?

அந்த நோய் தொற்று பெற்ற நபர்களிடம் இருந்து நோய் தொற்று பெறாதவர்களுக்கு நோயை கடத்தப்படுவதை தடுக்க வேண்டும்...

இதை தான் பரவும் சங்கிலியை உடைத்தல் என்று கூறுவோம்..

தயவு செய்து கூறுகிறேன்

மிகவும் அபாயகரமான சூழலில் இருப்பதால் யாரும் வெளியே செல்ல வேண்டாம்...

தயவு செய்து வீட்டில் இருங்கள்

இந்த கொள்ளை நோயை நாம் நான்காம் நிலைக்கு செல்லாமல் தடுத்திட வேண்டும்...

தனித்திரு... விழித்திரு என் நண்பர்கள் மற்றும் அவர் குடும்பத்தினர்...

Azwan news

Want your business to be the top-listed Media Company in Dubai?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address

Dubai